Word |
English & Tamil Meaning |
|---|---|
| சளுக்குவேந்தன் | caḷukku-vēntaṉ, n. <>cālukya +. Chālukya king of the Deccan; தட்சிணதேசத்தை ஆண்ட சாளுக்கியவரசன். (பிங்.) |
| சளுகம் | caḷukam, n. See சளூகம். (திவா.) . |
| சளுவுவாயன் | caḷuvu-vāyaṉ, n. See சள்ளுவாயன். (யாழ்.அக.) . |
| சளூகம் | caḷūkam, n. <>jalūkā. Leech; அட்டை. (பிங்.) |
| சளை - த்தல் | caḷai-, 11 v. intr. <>cal. To grow tired, become weary; சோர்தல். colloq. |
| சற்கரி - த்தல் | caṟkari-, 11 v. tr. <>sat-kar. To accord welcome, show hospitality; உபசரித்தல். தனதிருநாள் வணங்கினரைத் தலையிற் சொல்லால் விழியாற் சற்கரித்தான் (ஞானவா. வைரா. 56). |
| சற்கருமம் | caṟ-karumam, n. <>sat + . Good deed, meritorious act; நற்செய்கை. சற்கருமஞ்செய்வோர்தம் பக்க மேகி (குசேலோ. குசேலர்தந். 126). |
| சற்காரம் | caṟkāram, n. <>sat-kāra. Welcome, hospitality; உபசாரம். கண்டெழுந்து சற்காரஞ் செய்து (பிரபோத. 11, 87). |
| சற்காரியம் | caṟ-kāriyam, n. <>sat +. See சற்கருமம். . |
| சற்காரியவாதம் | caṟ-kāriya-vātam, n. <>id. + kārya +. (Phil.) Doctrine of causation according to which an effect is held to exist in its cause; உற்பத்திக்கு முன்னும் காரியப்பொருள் காரணப்பொருளில் உள்ளது என்னுங் கொள்கை. (சி.போ. பா. 1,2, பக். 64.) |
| சற்குணம் | caṟ-kuṇam, n. <>id. +. Good nature, nobility of character; நற்குணம். |
| சற்குணன் | caṟ-kuṇaṉ, n. <>id. +. Person of noble character, virtuous man; குணவான். மாசனங்காள் சற்குணர்நீ ரென்றிருந்தேன் (தனிப்பா.). |
| சற்குரு | caṟ-kuru, n. <>id. +. Spiritual preceptor; ஞானாசாரியன். சற்குருவுங் கண்ணாரக் காணின். (தனிப்பா.ii, 116, 296). |
| சற்சங்கம் | caṟ-caṅkam, n. <>id. + saṅga. Association with the good; நல்லோருடன் கூடுகை. பேருவகைக் கடறழுவு சற்சங்கம். (இரகு. தேனுவ. 108). |
| சற்சலம் | caṟ-calam, n. <>id. + jala. Fresh, limpid water; தெளிந்த நீர். (திவா.) |
| சற்சவுக்கம் | caṟcavukkam, n. See சச்சவுக்கம். . |
| சற்சனர் | caṟ-caṉar, n. <>sat+jana. Good, virtuous persons; நல்லோர். நகர்க்குறுதி சேர்ந்திடும் சற்சனர்களாம் (குமரே. சத. 76). |
| சற்சுகாதி | caṟ-cukāti, n. perh. id.+sukha+ādi. Indian birthwort. See பெருமருந்து. (மலை.) |
| சற்சூத்திரன் | caṟ-cūttiraṉ, n. <>id. +. Sect of šūdras who abstain from animal food and are strict in religious observances; ஊனுண்ணலை ஒழித்துச் சமயாசாரந் தோடிருக்குஞ் சூத்திரவகுப்பினன். (சி. போ. பா. சிறப்புப்பாயி. பக். 26.) |
| சற்பம் | caṟpam, n. <>sarpa. Serpent. See சர்ப்பம். சற்பவெம் பதாகை வேந்தன். (பாரத. வாசு. 9). |
| சற்பனை | caṟpaṉai, n. See சர்ப்பனை. ஆறு முகவேலர் மலர்த் தாரீயா துற்றதென்ன சற்பனையோ (தனிப்பா.57, 140) . |
| சற்பாத்திரம் | caṟ-pāttiram, n. <>sat+pātra. Worthy recipient for gifts, virtuous person; தானம்பெறுதற்குத் தகுதியானவன். சற்பாத்திரமிருக்க மிகுதானமது குணமிலார்க் கீந்த பேரும் (குமரேச. சத. 95). |
| சற்பாவம் | caṟ-pāvam, n. <>id. + bhāva. 1. Existence; உளதாந்தன்மை. அஞ்ஞசான விலேச சற்பாவவுடன்பாட்டால் (வேதா. சூ. 162). 2. The conception that Guru is a manifestation of the Supreme Being, one of four kuru-cēvai, q.v.; |
| சற்பிரசாதம் | caṟ-piracātam, n. <>id. +. Sacrament of Lord's Supper; நற்கருணை. chr. |
| சற்புத்தி | caṟ-putti, n. <>id. +. Noble mind; நல்லறிவு. |
| சற்புத்திரமார்க்கம் | caṟputtira-mārkkam, n. <>id. +. A mode of religious discipline. புத்திரமார்க்கம். (சி.சி.8. 18) |
| சற்புத்திரன் | caṟ-puttiraṉ, n. <>id. + purtra. Good, virtuous, dutiful son; நற்குண நற்செய்கையுள்ள புதல்வன். |
| சற்புருடன் | caṟ-puruṭaṉ, n. <>id. +puruṣa. Good, virtuous person; உத்தமன். ஐயலிங்கிவரெலாஞ் சற்புருடர் (அறப்.சத.16) |
| சற்று | caṟṟu, prob. சிறு. n. 1. Trifle; அற்பம். சற்றெனு மரங்குல் (சூடா. 10, 30). 2. Ease, facility; A little, somewhat, a little while; |
| சறாம்பு - தல் | caṟāmpu-, 5 v. tr. To neglect; பேணாதிருத்தல். சறாம்பியிருக்கையாய் உடம்பைபட் பேணாதிருக்கை யென்னுதல். (ஈடு, 4, 8, 4). |
| சறுக்கல் | caṟukkal, n. <>சறுக்கு-. 1. Slipperiness, slipping; வழுக்கல். 2. Slippery place; 3. Calingula; |
