Word |
English & Tamil Meaning |
|---|---|
| சன்னநூல் | caṉṉ-nūl; n. <>சன்னம் +. Fine yarn opp. to mutuku-nūl; மெல்லிதான நூல். |
| சன்னப்புட்டாணி | caṉṉa-p-puṭṭāṇi n. <>id. +. A kind of saree; மகளிர் புடைவைவகை. |
| சன்னபின்னம் | caṉṉa-piṉṉam, n. Pieces, shreds. See சின்னபின்னம். சன்ன பின்னமாய் நொறுக்கி (கொண்டல்விடு.187). |
| சன்னம் | caṉṉam, n. [T. K. sanna.] 1. Minuteness, smallness; நுண்மை. 2. Fineness; 3. Precious stone particles, as filings of gold and silver; 4. Small particles, as filings of gold and silver; 5. Small shot; 6. Fine plaster; 7. cf. channa. Covert hits, hidden meaning; 8. Thin, timbre; |
| சன்னம்வை - த்தல் | caṉṉam-vai-, v. intr. <>சன்னம்+. 1. To plaster nicely, as a wall; வெள்ளை வைத்தல். Loc. 2. To inset fine gems, as in ornaments; 3. To talk nicely and neatly; 4. To be cunning in speech; |
| சன்னராஷ்டகம் | caṉṉa-rāṣṭakam, [T. sannarāṣṭakamu.] See சன்னராஷ்டிரம். (மலை.) . |
| சன்னராஷ்டிரம் | caṉṉa-rāṣṭiram, n. <>சன்னம்+rāsnā. Lesser galangal. See சிற்றரத்தை. Loc. |
| சன்னல் | caṉṉal, n. <>Port. janella. Window. See ஜன்னல. |
| சன்னல்பின்னல் | caṉṉal-piṉṉal, n. Redupl. Entanglement, intricacy, confusion; பின்னல். சிக்கல். |
| சன்னலவங்கப்பட்டை | caṉṉa-lavaṅka-p-paṭṭai, n. <>சன்னம்+. Bark of a species of cinnamon; இலவங்கப்பட்டைவகை. (பதார்த்த. 1000.) |
| சன்னவிலை | caṉṉal-ilai n. <> சன்னல்+. Slate of a venetian; இலைக்கதவின் மாத்தட்டு. (W.) |
| சன்னவாழைப்பூ | caṉṉa-vāḻai-p-pū, n. <>சன்னம்+. A kind of saree; மகளிர் புடைவை வகை. |
| சன்னவிசிறி | caṉṉa-viciṟi, n. <>id. +. A kind of saree; மகளிர் புடைவைவகை. |
| சன்னவீரம் | caṉṉa-vīram, n. A garland indicative of victory; ஒருவகை வென்றிமாலை. சன்னவீரம் திருமார்பில் வில்லிலக (பதினொ. திருக்கைலாயஞா. 19). |
| சன்னவோரா | caṉṉa-v-ōrā, n. <>சன்னம்+ ஒரா. Flat-fish, Tuthis, as having both eyes on one side; இருகண்களும் ஒருபக்கத்துடைய சிறு கடல் மீன்வகை. |
| சன்னாகம் | caṉṉākam, n. <>san-nāha. 1. Coat of armour; போர்க்கவசம். (சீவக. 2236, உரை.) 2. Preparation, preparedness, as for war; 3. Royal procession with paraphernalia; |
| சன்னாசம் | caṉṉācam, n. See சன்னியாசம். வீணுக்குக் கொண்டோமிச் சன்னாசமென்று தளர்வாரும் (விறலிவிடு. 367). . |
| சன்னாசி | caṉṉāci, n. See சன்னியாசி. சன்னாசியார் சடலம்படுத்து (பதினொ. ஆளு. திருவந். 66). . |
| சன்னாவுளவுபயதன்மவிகலம் | caṉṉā-v-uḷa-v-upaya-taṉma-vikalam, n. <>sat+ஆ-+உள+ubhaya-dharma-vikala. (Log.) Fallacious example of a real existent object in which both cātaṉam, the middle term, and cāttiyam, the major term, are non-existent, one of two upayataṉma-vikalam, q.v.; உபயதன்மவிகலம் இரண்டனுள் தான் உள்ளதாகத் தன்கண் சாதனசாத்தியங்கள் இல்லனவாகக் கூறும் திட்டாந்தம். (மணி. 29, 365.) |
| சன்னி 1 | caṉṉi, n. <>san-ni-pāta. [K. sanni.] Diseases resulting from the morbid condition of the three bodily humours, 13 in number, viz., kaṇṭa-kupcam, cimpakam, tāntirikam, pakkiṉa-nēttirakam, ruktākam, cikkulīkam, piralāpam, antakam, irattaṣṭīvi, cittavippiramam, cītāṅkam, karṇikam, apiṉṉiyācam; கண்டகுப்சம், சிம்பகம், தாந்திரிகம், பக்கினநேத்திரகம், ருக்தாகம், சிஃகுல¦கம், பிரலாபம், அந்தகம், இரத்தஷ்டிவி, சித்தவிப்பிரமம், சீதாங்கம், கர்ணிகம், அபின்னியாசம் என்ற பதின்மூன்றுவகைப்பட்ட சன்னிநோய். (சீவரட்.22) |
| சன்னி 2 | caṉṉi, n. <>samjin. That which has a name; பேருள்ளது. யாவையுந் தோற்செவியுடைய சன்னியாம் (மேருமந். 1352). |
| சன்னிக்கட்டி | caṉṉi-kaṭṭi, n. <>சன்னி +. Tumour near, or in, the ear; காதுவீக்கம். (J.) |
| சன்னிக்கோட்டி | caṉṉi-k-kōṭṭi, n. <>id. +. Convulsions; வலிப்புநோய்வகை. |
| சன்னிகணாயன் | caṉṉikaṇāyaṉ, n. <>சன்னிகள்+நாயன். See சன்னிநாயகம். (w.) . |
| சன்னிகரிடம் | caṉṉikariṭam, n. <>san-ni-karṣa. Log. Relation existing between a sense-organ and its object, as the cause of perception, of six kinds, viz., caiyōkam, caiyuttacamavāyam, caiyutta-camavēta-camavāyam, camavāyam, camavēta-camavāyam; vicēṭaṇavicēṭiya-pāvam; காட்சிக்குக் காரணமாய்ப் பொறியும் புலனும் அடுத்து நிற்கும் சையோஅகம், சையுத்தசமவாயம், சையுத்தசமவேதசமவாயம், சமவாயம், சமவேதசமவாயம், விசேடணவிசேடியபாவமாகிய அறுவகைச் சம்பந்தம். (சி. சி. அளவை. 6, மறைஞா.) |
