Word |
English & Tamil Meaning |
|---|---|
| சனலோகம் | caṉa-lōkam, n. <>jana-lōka. An upper world inhabited by the sons of Brahmā, manes and celestials, fifth of mēl-ēḻulakam q.v.; மேலேழுலகத்துள் பிதிரர் முதலிய தேவதைகளின் வாழ்விடமாகிய உலகம். இகலோகம் பரவு சனலோகம் (கந்தபு. அண்டகோ. 64). |
| சனற்குமாரம் | caṉaṟkumāram, n. <>Sanatkumāra. A secondary Purāṇa, one of 18 upapurāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனு ளொன்று. (திவா.) |
| சனற்குமாரன் | caṉaṟkumāraṉ, n. <>Sanatkumāra. A sage, one of four caṉakṉāiyar, q.v. ; சனகாதியருள் ஒருவராகிய முனிவர். (பிங்.) |
| சனற்சுசாதன் | caṉaṟcucātaṉ, n. <>Sanatsujāta. A sage, one of the mind-born sons of Brahmā; பிரமாவின் மானசபுத்திரரான ஒரு முனிவர். (அபி.சிந்) |
| சனன்மாலி | caṉaṉmāli, n. Bishop's weed. See சதகுப்பி. (மலை.) |
| சனனகாண்டம் | caṉaṉa-kāṇṭam, n.<>janana +. Book of Genesis; உலகவுற்பத்தியைக் கூறும் ஆதியாகமம். R. C. |
| சனனபூமி | caṉaṉa-pūmi, n. <>id +. See சன்மபூமி. . |
| சனனம் | caṉaṉam, n. <>janana. Birth; பிறப்பு. (திவா.) |
| சனனமரணக்கணக்கு | caṉaṉa-maraṇa-k-kaṇakku, n. <>id. +. Vital statistics; சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புஸ்தகம். Mod. |
| சனனவைராக்கியம் | caṉaṉa-vairākkiyam, n. <>id. +. Hatred of life or disgust in existence, due to continued illness, poverty, etc.; தீராவியாதி முதலிய துன்பங்களால் வாழ்விலுண்டாகும் வெறுப்பு. (சி.சி.4, சிவாக்) |
| சனனி - த்தல் | caṉaṉi, 11 v. intr. <>id. To be born, produced; பிறத்தல். (W.) |
| சனனி | caṉaṉi, n. <>jananī. Mother; தாய். |
| சனாசனம் | caṉācaṉam, n. <>janāšana. Wolf; கோனாய். (யாழ். அக.) |
| சனாதனதர்மம | caṉātaṉa-tarmam, n. <>sanātana. +. The ancient moral law; புராதனமான அறவொழுக்கம். |
| சனாதனன் | caṉātaṉan, n. <>id. 1. Eternal one, as the Ancient; அனாதியாகவுள்ளவன். உறுசனாதனராய் (மச்சபு. பிரமாண். 17). 2. A sage, one of four caṉakātiyar, q.v.; |
| சனாதிக்கம் | caṉātikkam, n. <>jana+ādhikya. Leadership; தலைமை. colloq. |
| சனாந்திகம் | caṉāntikam, n. <>janāntikam. (Drama.) A stage-direction indicating private conversation, supposed not to be heard by other performers; அரங்கிற் புகுந்துள்ள நாடக பாத்திரங்கள் பலரில் இருவர் பிறபாத்திரங்கள் அறியாவகை தம்முட் பேசிக்கொள்ளுகை. (யாழ். அக.) |
| சனார்த்தனம் | caṉārttaṉam, n. <>Janārdana. 1. A Viṣṇu shrine, 24 miles NW. of Trivandrum, now known as vaṟkalai; திருவனந்த புரத்திற்கு வடமேற்காக 24 மைல் தூரத்திலுள்ளதும் வற்கலையென்று வழங்குவதுமான ஒரு விஷ்ணுஙஸ்தலம்; 2. Dried ginger; |
| சனார்த்தனன் | caṉārttaṉaṉ, n. <>Janārdana. Viṣṇu; திருமால். (பிங்.) |
| சனி | caṉi, n. <>šani. (பிங்.) 1. The planet Saturn; ஒரு கிரகம். சனி பாம்பிரண்டு முடனே (தேவா. 1171, 1). 3. Ill-luck, disaster; |
| சனி - த்தல் | caṉi, 11 v. intr. <>jan. 1. To be born, produced; பிறத்தல். பந்தநீங்கியே சனித்தனர் (கந்தபு. துணைவ. 24). 2. To arise, appear; to result; |
| சனிக்காசு | caṉi-k-kācu, n. <>சனி +. Money paid to a village schoolmaster by his pupils on saturdays; திண்ணைப்பள்ளிக்கூடங்களில் சனிக்கிழமைதோறும் பள்ளிச்சிறார் உபாத்தியாயர்க்குக் கொடுக்கும் பணம். (w.) |
| சனிக்கிழமை | caṉi-k-kiḻamai, n. <>id. +. Saturday; வாரத்தில் ஏழாம்நாள். |
| சனிதிசை | caṉi-ticai, n. prob. īšāna-dišā. See சனிமூலை. colloq. . |
| சனிப்பாட்டு | caṉi-p-pāṭṭu, n. perh. U. san +. Song or poem sung by the pupils of a village-school when they go about, towards the close of a year, for getting presents for their master; உபாத்தியாயர் சம்மானம் பெறும் பொருட்டு வருஷமுடிவிற் பலரிடத்துஞ்சென்று மாணாக்கர் பாடும் பாட்டு. (w.) |
| சனிப்பு | caṉippu, n. <>சனி-. Birth; பிறப்பு. (திவா.) |
| சனிபாகம் | caṉipākam, n. cf. sampāka. Indian laburnum. See கொன்றை. (மலை.) |
| சனிபிடித்தல் | caṉi-piṭittal, n. <>சனி +. 1. Being under the malignant influence of Saturn; சனிக்கோளாறு சூழ்கை. 2. Being assailed by adverse circumstance; |
