Word |
English & Tamil Meaning |
|---|---|
| சாக்காடு | cākkāṭu <>சா- 1. Death; சாவு.உறங்குவது போலுஞ் சாக்காடு (குறள், 339). 2. Injury, ruin; |
| சாக்காளி | cākkāḻI n. prob. சாக்கு+ஆள்- A kind of worm which conceals its form by a membranous cover made by itself ; தன்னுருவை மறைத்துக் கிடக்கும் புழுவகை. சாக்காளி என்னும் புழுப்போல.... வேறேபூண்டு கிடக்கையாலே (திருவுந்தி. 24, உரை). |
| சாக்கி 1 | cākki n. <> sākṣin. Eye witness. See சாட்சி. தேவர் சாக்கியாக (இராமநா. உயுத். 71). |
| சாக்கி 2 | cākki n. Flint. See சக்கிழக்கிக்கல். சதிகொண்ட சாக்கியெரியின் வடிவாம் (திருமந். 1653). |
| சாக்கி 3 | cākki n. <>E.Jack. See ஜாக்கி. . |
| சாக்கிடு - தல் | cākkiṭu- v.tr. <> சாக்கு+இடு To make a false excuse, allege as a pretext; வியாசமாகக் கொள்ளுதல். |
| சாக்கிபாக்கி | cākk-pākki n. Redupl. of பாக்கி. Extra quantity obtained into the bargain; கொசுறு. Vul. |
| சாக்கியநாயனார் | cākkiya-nāyaṉār n. <>šākya+. A canonized šaiva saint converted to šaivaism from Buddhism, one of 63; புத்த மதத்திலிருந்து சைவசமயத்தைத் தழுவியவரும் நாயன் மார் அறுபத்துமுவருள் ஒருவருமாகிய சிவனடியார்.(பெரியபு.) |
| சாக்கியம் | cākkiyam n. <> šākya. Buddhism, as founded by šākya-muni புத்தமதம். சாக்கிய கற்றோஞ் சமண்கற்றோம் (பெருந்தொ. 1812). |
| சாக்கியமுனி | cākkiya-muṉI n. <>id. +. Gautama Buddha; புத்தர். |
| சாக்கியர் | cākkiyar n. <>id. 1. Biddhists; பௌத்தர். சமணருஞ் சாக்கியரும் (திவ். திருவாய். 4,10,5.) 2. Jainas; |
| சாக்கியன் 1 | cākkiyaṉ n. <>id. 1. Gautama Buddha; கௌதமபுத்தர். (பிங்.) 2. See சாக்கிய நாயனார். கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன் (தேவா. 737,6). |
| சாக்கியன் 2 | cākkiyaṉ n. See சாக்கையன். Nā. . |
| சாக்கிரக்கருவி | cākkira-k-karuvi n. <>jāgrat+. (šaiva.) Agents or elements operating in the state of waking, as organs of action, of sense and of mind, vital airs and soul; இந்திரியங்கள் தன்மாத்திரைகள் அந்தக்கரணங்கள் பிராணாதிவாயுக்கள் ஆன்மா என்னும் சாக்கிராவத்தைக்கு உரிய கருவிகள். (சி. சி. 4, 34.) |
| சாக்கிரத்தானம் | cākkira-t-tāṉam n. <> id.+Sthāna. Centre between the eyebrows where the soul dwells in the waking state; சாக்கிரத்தில் ஆன்மாவின் இடமாக்கருதும் புருவமத்தியம். ஆன்மாவானவன் சாக்கிரத்தானமாகிய புருவமத்தியத்தைப் பொருந்தும்போது (சி.சி.4, 33, மறைஞா). |
| சாக்கிரத்திலதீதம் | cākkirattil-atitam n. <>id.+. (šaiva.) Condition of the soul while in waking state, in which breathing is suspended and consciousness is utterly lost, as when a person is stunned by a sudden shock; ஆன்மா விடயங்களை யனுபவிக்கிறவேளையில் பிராணவாயுவும் இயங்காமல் ஒன்றையும் அறியாமல் முர்ச்சித்து மயங்கி நிற்கும் அவசரம். (ஞான. சட். 29.) |
| சாக்கிரத்திற்சாக்கிரம் | cākkiraftiṟ-cākkiram n. <>id. +. (šaiva.) Condition of the soul while in waking state, in which all its powers are in full play, as when a person is alert and wide a wake; ஆன்மா தத்துவதாத்துவிகங்களோடு கூடி விடயங்களை அனுபவிக்கும் அவசரம். (ஞான. கட். 30.) |
| சாக்கிரத்திற்சுழுத்தி | cākkirattiṟ-cuḻutti n. <>id. +. (šaiva.) Condition of the soul while in waking state, in which breathing and consciousness are not lost but the mental powers are not roused to full activity, as when a person loses thought and memory; ஆன்மா சித்தத்துடனும் பிராணவாயுடனுங்கூடி அறிவுணர்ச்சி முதலியன அடங்கி நிற்கும் அவசரம். (ஞானா. கட். 30.) |
| சாக்கிரத்திற்சொப்பனம் | cākkirattiṟcoppaṉam n. <>id. +. (šaiva.) Condition of the soul while waking state, in which breathing and consciousness exist and the mental powers are dreamily active, as when a person has vague thoughts and memories; ஆன்மா சித்தத்துடனும் பிராணாதி வாயுவுடனுங்கூடி அறுவுணர்ச்சி முதலியன தெளிவின்றி நிகழும் அவசரம். (ஞானா. கட். 30.) |
| சாக்கிரத்திற்றுரியம் | cākkirattiṟṟuriyam n. <>id. +. (šaiva.) Condition of the soul while in waking state, in which consciousness is lost and breathing is low, as when a person is half stunned by a sudden shock; ஆன்மா சித்தமழிந்து பிராணவாயு சிறிதே இயங்கி நிற்கும் அவசரம். (ஞானா. கட். 30.) |
| சாக்கிரத்திற்றுரீயாதீதம் | cākkirattiṟuriyātitam n. <>id. +. (šaiva.) See சாக்கிரத்தி லதீதம். (சி.சி. 4, 35, மறைஞா.) . |
| சாக்கிரதை | cākkiratai n. <>jāgrat-tā. Wakefullness, Vigilance; விழிப்பு. |
| சாக்கிரபாலன் | cākkirapālaṉ n. <>jāgrapāla. Soul as active in the waking state; [சாக்கிரதசையில் விளங்குபவன்] ஆன்மா. (சி.சி 4, 33, மறைஞா.) |
