Word |
English & Tamil Meaning |
---|---|
சாங்கமிலார் | cāṅkam-ilār, n.<>saṅgha +. Outcastes; சாதிவிலக்குப்பட்டவர். சூளைக்காரச் சாங்கமிலார் (திருப்பு.589). |
சாங்கரம் | cāṅkaram, n.<>saṅkara. Mixed caste; கலப்புச்சாதி. சாங்கரத்திணங்கு பலவேறு சாதியினும் (திருவானைக்.நகரப்.64) . |
சாங்கரர் | cāṅkarar, n.<>id. Persons of mixed caste; கலப்புச்சாதியார். வெய்யகாரு கர்க்குஞ் சாங்கரர்க்குமடாது வேந்தே (திருவானைக்.கோச்செங்.24) . |
சாங்கரிசம் | cāṅkaricam, n. See சாங்கரியம். (W.) . |
சாங்கரியம் | cāṅkarīyam, n.<>sāṅkarya. Mixture; கலப்பு. சாங்கரியம் வாராமல் (சிவசம.40) . |
சாங்கரீயம் | cāṅkarīyam, n.<>id. That which is mixed, as caste; கலப்பானது. சாங்கரீய மரபிற் சனித்தவன் (சேதுபு.தனுக்.24). |
சாங்கலிகன் | cāṅkalikān, n.<>jāṅgalika. A doctor who has specialised in curing poison; விஷவைத்தியன். (சங்.அக.) |
சாங்கிமம் | cāṅkimam, n. (Mus.) An ancient secondary melody-type of marutam class; மருதயாழ்த்திறவகை. (பிங்.) |
சாங்கியம் 1 | cāṅkiyam, n.<>sāṅkhya. 1. The Sāṅkhya system of philosophy expounded by kapila, enumerating twenty-five tattvas; கபிலரால் வெளிப்படுத்தப்பட்டதும் தத்துவங்கள் இருபத்தைந்து எனக் கணக்கிடுவதுமான ஒரு சமயம். இது சாங்கியமதமென் றெடுத்துரைப்போன் (மணி.27, 202). 2. That which can be counted; |
சாங்கியம் 2 | cāṅkiyam, n. prob. sāṅga. Ceremonies, rites; சடங்குகள். Colloq. |
சாங்கியன் | cāṅkiyaṉ, n.<>sāṅkhya. Follower of the Sāṅkhya philosophy; சாங்கியவாதி. பௌத்தன் மாறாய்நின்ற சாங்கியனைக்குறித்து (மணி.29, 169) . |
சாங்கு | cāṅku, n. prob. šaṅku. A kind of dart, arrow; ஒருவகை அம்பு. (யாழ்.அக.) |
சாங்குகௌரி | cāṅkukauri, n. Bristly trifoliate vine. See புளிநரளை. (மலை.) . |
சாங்குசித்தன் | cāṅkucittan, n.<>samsiddha. (J.) 1. See சாமுசித்தன். . 2. One who wishes to be initiated by a guru; |
சாங்கேதிகம் | cāṅkētikam, n.<>sāṅkētika. That which is conventional; signs based on agreement; அடையாளம் கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது. லேகனக்ரியை அந்த அக்ஷரங்களினுடைய சாங்கேதிகத்துக்கு அபிவ்யஞ்சகம் (சி. சி. 2, 62, சிவாக்) . |
சாங்கோபாங்கம் | cāṅkōpāṅkam, n.<>sāṅgōpāṅga. 1. Completeness; முழுமை. 2. True christian perfection; |
சாங்கோபாங்கமாகப்பண்ணு - தல் | cāṅkōpāṅkam-āka-p-paṇṇu-, v.tr.<>id. +. To make pretence of being diligent or active; சுறுசுறுப்பாகச் செய்வதுபோல நடித்தல். (J.) |
சாங்கோபாங்கமாய் | cāṅkōpāṅkam-āy, adv.<>id. +. Completely, in detail; முழுதும். |
சாச்சடங்கு | cā-c-caṭaṅku, n.<>சா3 +. Funeral ceremonies, obsequies; உத்தரக்கிரியை. (W.) |
சாச்சா | cāccā, n. Pulp of the bitter snakegourd; குறட்டைப்பருப்பு. (W.) |
சாச்செலவு | cā-c-celavu, n.<>சா3 +. Funeral expenses; கருமாந்தரச்செலவு . (W.) |
சாசபுடம் | cācapuṭam, n.<>cācapuṭa. (Mus.) A variety of time-measure represented thus 2112 one of paca-tāḷam, q.v.; பஞ்சதாளத்தொன்று (பரத.தாள.2) . |
சாசரம் | cācaram, n. See சாசாரம். தாரியான் பருகுநாட் சாசரத்தினுள் (மேருமந்.604). . |
சாசற்புடம் | cācaṟpuṭam, n. See சாசபுடம். (பரத.தாள.12). . |
சாசனக்காணி | cācaṉa-k-kāṇi, n.<>šāsana +. Hereditary property held under a royal grant; அரசனால் விடப்பட்ட உரிமைநிலம். (J.) |
சாசனம் 1 | cācaṉam, n.<>šāsana. 1. Order, edict, command; கட்டளை. 2. Royal grant of land or of privileges;charter; patent usually inscribed on stone or copper; 3. Document; 4. Taxfree land; 5. Insignia of authority; 6. Punishment, retribution; 7. Village of a hunter-tribe attached to a royal household; |
சாசனம் 2 | cācaṉam, n. perh. pišāca-ghna. White mustard, as keeping off evil spirits; வெண்கடுகு. (மலை.) |
சாசனம்பண்ணு - தல் | cācaṉam-paṇṇu-, v.tr.<>சாசனம் +. To sell or convey by deed; நிலம் முதலியவற்றை விற்பனை செய்தல். Colloq. |