Word |
English & Tamil Meaning |
|---|---|
| சாட்டைக்கூடை | cāṭṭai-k-kūṭai, n. See சாட்டுக்கூடை. Loc. . |
| சாட்டைவார் | cāṭṭai-vār, n.<>சாட்டை +. (M. cāṭṭavār.) Whipcord, whip; சவுக்கு. Colloq. |
| சாட்ணி | cāṭṇi, n.<>U. chaṭnā. Burning, destruction, as of records; அழிவு. பழைய பத்திரங்கள் சாட்ணிக்கு அனுப்பப்பட்டன. (C.G.) |
| சாடராக்கினி | cāṭarākkiṉi, n.<>jāṭhara + agni. Digesting agency, considered a fire or heat abiding in the stomach; உணவைச் சீரணிக்கச் செய்யும் வயிற்றுத்தீ. தேக மிலகுவாகுஞ் சாட ராக்கினி சொலிக்கும். (பிரபோத.44, 16) . |
| சாடவம் | cāṭavam, n.<>ṣādava. (Mus.) Secondary melody-type, hexatonic; ஆருசுரமுள்ள இராகம். (சிலப்.13, 106, உரை.) |
| சாடா | cāṭā, adv.[T.jādā.] See சாடாவாக. . |
| சாடாவாக | cāṭā-v-āka, adv.<>சாடா +. Completely, entirely; முழுதும். Loc. |
| சாடி 1 - த்தல் | cāṭi-, 11 v. cf. šaṭh. (T. jādicu, K. cādicu, Tu. cādi.) intr. To slander; கோள்சொல்லுதல். (W.)-tr. 1. To chide, rebuke; 2. To crush; |
| சாடி 2 | cāṭi, n.<>சாடி-.cf.šaṭh.[T.tcādi,K.cādi.] 1. Malicious report, slander; கோள்மொழி. (பிங்.) 2. Powder |
| சாடி 3 - த்தல் | cāṭi-, 11 v. intr. perh. சாடு-, To bend to and fro, rock from side to side; to totter; இருபக்கமும் அசைத்தல். |
| சாடி 4 | cāṭi-, n. cf. Mhr. jhāri. (T.K.Tu. jādi, M. cādi.) 1. Jar; பாண்டவகை. சாடிமட்டயின்று (சீவக.1614). 2. Aquarius of the zodiac; 3. A measure of capacity; 4. cf. சாடு-. Furrow; |
| சாடி 5 | cāṭi-, n.<>šāṭī. Cloth, clothing; சீலை. (பிங்.) |
| சாடி 6 | cāṭi-, n. perh. jat. Man's hair; ஆண்மக்கள் தலைமயிர். (யாழ். அக.) |
| சாடி 7 | cāṭi-, n.cf.šauṇdī. Long pepper; திப்பலி. (மலை.) |
| சாடிகோர் | cāṭikōr, n.<>Persn. cughalkhōr <> Mhr. cādakhōra. Talebearer, backbiter; புறங்கூறுவோன். (C.G.) |
| சாடிலி | cāṭili, n. See சாட்குலி. (பிங்.) . |
| சாடு 1 - தல் | cāṭu-, 5 v. tr. perh. šaṭh. (M. cāṭu.) 1. To beat; அடித்தல். சாடிக்கொன்றனன் சிலவரை (கம்பரா.கிங்கிர.36). 2. To fall upon;. 3. To trample; 4. To tear open, gore; 5. To scratch; 6. To lop off, break, as branches; 7. To kill, destroy; 8. [T. tcādi, Tu. Cādi.] To abuse, reprove, |
| சாடு 2 - தல் | cāṭu-, 5 v. prob. cāl. (W.) intr. 1. To shake; அசைதல். 2. To favour a party, as in a civil suit; 3. To lean, overhang, as a tree; 4. [T. tcācu, K. Tu. cācu.] To stretch out, as the arms or legs from lassitude; See சாடி-. பட்டம் வாலுக்குச் சாடுகிறது.--tr. |
| சாடு 3 | cāṭu-, n. [M. cāṭa.] Unripe grain of great millet; மணிமுற்றாத சோளம். |
| சாடு 4 | cāṭu-, n.cf.chād. Glove, gauntlet ; கைத்தலத்தில் இடும் உறை.விரற்சாடு (சீவக.2202, உரை). |
| சாடு 5 | cāṭu-, n.<>cāṭu. 1. Skill in talk ; பேச்சுச் சாதுரியம். 2. Learned man, pandit; |
| சாடு 6 | cāṭu-, n. See சாட்டுக்கூடை . (J.) . |
| சாடு 7 | cāṭu-. n.<>Pkt. šāṭi <> šakaṭi. (M. cāṭu.) Cart; வண்டி. குறுஞ்சாட் டுருளையொடு (பெரும்பாண்.188) . |
| சாடுகம் | cāṭukam, n. See சாடு. (அக.நி.) . |
| சாடுசக்கட்டை | cāṭu-cakkaṭṭai, n. A worthless person ; திறமையற்றவ-ன்-ள். Nā. |
| சாடுமாலி | cāṭu-māli, n.<>U. jhar-māli. Loc. 1. [K. jādu-mālis] Woman sweeper; வீட்டைப்பெருக்கிச் சுத்தஞ் செய்பவள். 2. Servant who attends to lighting etc.; 3. A mean, despicable person; |
