Word |
English & Tamil Meaning |
---|---|
அருவி 1 | aruvi n. <>அருவு-. [M.aruvi.] 1. Waterfall; மலையின் வீழ்புனல். (பிங்.) 2. River's mouth; 3. Water; 4. Spring at the foot of a hill; 5. Row, arrangement; |
அருவி 2 | aruvi n. <>அரி- cf. அரிவி. Stubble of Italian millet; தினைத்தாள். (திவா.) |
அருவி 3 | aruvi n. <> a-rūpin. That which is formless, shapeless; உறுவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா.6, 53). |
அருவித்தின்னு - தல் | aruvi-t-tiṉṉu- v.tr. <>அருவு-+. To cause great pain; மிகவுந் துன்பப்படுத்துதல். அருவித் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் (திவ். பெரியதி.7, 7, 1). |
அருவிலைக்காலம் | aru-vilai-k-kālam n. <>அரு-மை+. Time of famine, as the time of high prices; பஞ்சகாலம். |
அருவு - தல் | aruvu- 5 v.intr.; v.tr. To spring out and gently flow down; 1. To approach; 2. To wear away, as a flood its banks; 3. To afflict, gripe; மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல். (W.); அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. Loc. துன்பப் படுத்துதல். அருவி நோய் செய்து (திவ்.பெரியதி. 9, 7, 6). |
அருவுகால் | aruvu-kāl n. Dial. var. of அருகுக்கால். . |
அருவுடம்பு | aru-v-uṭampu n. <>அரு1+. The subtle body; சூக்கும சரீரம். (குறள், 345, உரை.) |
அருவுரு | aru-v-uru n. <> id.+. See அருவுருவம் அருவுருவு மாயெங்கு மமரா நிற்கும் (சூத.முத்தி.4, 16). |
அருவுருவம் | aru-v-uruvam n. <>id.+. Form which can be said to be no form, as the Siva-liṅga or a flood of light; அருவென்றும் உரு வென்றுஞ் சொல்லலாகாதது. (சி.போ. 7, 3, 1.) |
அருவேதனை | aru-vētaṉai n. <>அரு-மை+ Great torment; பெருந்தொந்தரவு. உன்னுடைய அருவேதனை என்னாற் பொறுக்கமுடியவில்லை. Loc. |
அருள்(ளு) 1 - தல் | aruḷ- 5 v.intr. 1. To be gracious to, favour; also used as an auxiliary showing reverence or respect, as in எழுந்தருள. கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5), 2. To rejoice ; 1. To speak graciously; 2. To command; 3. To grant, bestow; |
அருள் 2 | aruḷ n. <>அருள்1-. [T. arulu, M.aruḷ.] 1. Grace, mercy, favour, benevolence; கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247). 2. Good deeds; 3. Order, commond; |
அருள்(ளு) 3 - தல் | aruḷ- 2 v.intr.cf. மருள்-. [K.arulu, araḷ.] To be frightened, terrified, bewildered; அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.) |
அருள் 4 | aruḷ n. A tree, probably of the genus Meliaceae, having the same medicinal properties as are ascribed to the margosa; மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தாலாய் (பதார்த்த.227). |
அருள்பாடு | aruḷ-pāṭu n. <>அருள்1-+. Gracious commandment. See அருளிப்பாடு. (சம்.அக.) |
அருள்மாரி | aruḷ-māri n. <>அருள்2+. 1. Shower of blessing; கிருபாவர்ஷம். 2. One who showers blessings; |
அருள்வாக்கி | aruḷ-vākki n. <>id.+. One whose utterances are divinely inspired; தெய்வானுக்கிரகம் பெற்ற கவிஞன். |
அருளகம் | aruḷakam n. cf. alarka. White madar. See வெள்ளெருக்கு. (மலை.) |
அருளப்பாடு | aruḷa-p-pāṭu n. <>அருள்1-+. Gracious commandment. See அருளிப்பாடு. (ஈடு, 6, 9, 3.) |
அருளரசி | aruḷaraci n. 1. Ivory-tree. See வெட்பாலை. (மலை.) 2. Conessi bark. See குடசப்பாலை. |
அருளல் | aruḷal n. <>அருள்1-. Liberality, generosity, munificence; பெருங்கொடை. (பிங்.) |
அருளவம் | aruḷavam n. 1. Sage-leaved alangium. See அழிஞ்சில் (W.) 2. Tooth-leaved tree of heaven . See பெருமரம். |
அருளறம் | aruḷ-aṟam n. <>அருள்2.+. Virtue of grace; அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75). |
அருளாந்தை | aruḷāntai n. Indian Calosanthes. See பாளையுடைச்சி. (L.) |
அருளாப்பு | aruḷāppu n. Purslane-leaved Trianthema. See சாரணை. (மலை.) |
அருளாழிவேந்தன் | aruḷ-āḻi-vēntaṉ n. <>அருள்2+. 1. Arhat, as wielding the disc of grace; அருகன். 2. God; |
அருளாளப்பெருமாள் | aruḷāḷa-p-perumāḷ n. <>அருளாளன்+. Viṣṇu as worshipped in kācīpuram; காஞ்சீபுரத்துத் திருமால். (S.I.I. iii, 188.) |