Word |
English & Tamil Meaning |
---|---|
அருளாளன் | aruḷāḷaṉ n. <>அருள்+ஆள்-. One who is full of grace; கிருபையுடையவன். பித்தா பிறைசூடீ பெருமானே யருளாளா (தெவா. 1001, 1). |
அருளிச்செய் - தல் | aruḷi-c-cey- v.tr. <>அருள்-+ To speak, used of elders and venerable persons; சொல்லியருளுதல். நம்பெரு மாட்டிக் கங்கு நாயக னருளிச்செய்வான் (பெரியபு. காரைக்.57). |
அருளிச்செயல் | aruḷi-c-ceyal n. <>id+. 1. Gracious command; கட்டளை. ராஜாவின் அருளிச்செயற்படிகு மந்திரமூர்த்தி வெட்டுவித்தது (S.I.I. ii, 118). 2. Poetical utterances of saints; |
அருளிப்பாடியன் | aruḷi-p-pāṭiyaṉ n. <>அருளிப்பாடு. Executor of royal or divine commands; கட்டளை நிறைவேற்றுவோன். அங்கருளிப் பாடியரோ டருமுனிவர் கடிதணைந்து (கோயிற்பு. இரணிய.52). |
அருளிப்பாடு | aruḷi-p-pāṭu <>அருள்-+. n.; int. Gracious command; 'As it pleaseth thee,' said in response to a command; ஆஞ்ஞை. ஆயசீ ரிராகவ னருளிப் பாடென வாயில்காப் பாளரு மகிழ்ந்து கூறலும் (உத்தரரா.அசுவ.157.). உத்தரவுப்படி செய்வோம் என்னுங் குறிப்பு. கணநாத ரருளிப்பா டென்றார்கள் (கோயிற்பு. இரணிய.51). |
அருளுறுதி | aruḷuṟuti n. Margosa. See வேம்பு. (மலை.) |
அருளொடுநீங்கல் | aruḷoṭu-nīṅkal n. <>அருள்.+. (Puṟap.) Theme expressing that one's renunciation of worldly desires on seeing the miseries of the world; உலகின்துயரத்தைப் பார்த்துப் பற்றுநீங்கும் புறத்துறை. (பு.வெ.8, 34.) |
அருளோன் | aruḷōṉ n. <>id. Gracious person; காருண்ணியன். (சூடா.) |
அரூதா | arūtā n. <>Port. arruda. <>L. rūta. [M.arūta.] Rue, m. sh., ruta graveolens; (சதாப்புச்செடி.) |
அரூபம் | arūpam n. <>a-rūpa. Formlessness, incorporeity, invisibility; உருவமின்மை. அஞ்சலி னபனநீ ருகுத் தரூபமாய் (இரகு.திக்கு.253). |
அரூபமா - தல் | arūpam-ā- v.intr. <>id.+. To become desolate; பாழடைதல். அந்த ஊர் அரூப மாய்விட்டது. Loc. |
அரூபி | arūpi n. <>a-rūpin 1. God, without form; கடவுள். 2. Siva; 3. Spirit, Invisible Presence; |
அரேசகண்டு | arēcakaṇṭu n. Elephant yam. See கருணை2 (மலை.) |
அரேசிகம் | arēcikam n. cf. rōcaka. Plantain. See வாழை. (மலை.) |
அரேணுகம் | arēṇukam n. cf. harēṇuka. 1. Cubebs. See வால்மிளகு. (மலை.) 2. Flat-branched pepper See காட்டு மிளகு. 3. Root of chebulic myrobalan; |
அரேணுகை | arēṇukai n. cf. id. Flat-branched pepper. See காட்டு மிளகு (தைலவ. தைல.9.) |
அரை 1 | arai n. prob. அறு1- [T.K.M.Tu.ara.] 1. Half; பாதி 2. The fraction 1/2; 3. Waist, loins; 4. Stomach; 5. See அல்குல். 6. Stem; 7. Trunk of a tree; |
அரை 2 | arai n. <>அரசு <>rājan. Politics; அரசியல். அரைவிளை கலைநல்லார் (சீவக.2430). |
அரை 3 | arai n. prob. அரசு. A tree, prob. pipal; மரவகை. அரைமரவியற்றே (தொல். எழுத்.304). |
அரை 4 - தல் | arai- 4 v.intr. To become macerated, worn out; தேய்தல். நீளிடை யங்க மெங்கு மரைந்திட (பெரியபு.திருநாவு.360). |
அரை 5 - த்தல் | arai- 11 v.tr. caus. of அரை4- [K.are.] 1. To grind, pulverise; அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2). 2. To graze, destroy by rubbing, to mash; 3. To clear of seeds, gin; 4. To cause to wane, destroy; |
அரைக்கச்சு | arai-k-kaccu n. <>அரை1+. 1. Waist-band, girdle; இடைப்பட்டிகை. 2. Narrow cloth tied about the waist and tucked in behind; |
அரைக்கச்சை | arai-k-kaccai n. See அரைக்கச்சு. . |
அரைக்கடி | arai-k-kaṭi n. <>அரை1+. Dhobies' itch, a kind of ringworm, tineacircinata; இடுப்பிலுண்டாகும் சொறிபுண். அண்டை வீட்டுக் கடனும் அரைக்கடியும் ஆகா. |
அரைக்கடுவன் | arai-k-kaṭuvaṉ n. See அரைக்கடி. . |
அரைக்காணி | arai-k-kāṇi n. <>அரை1+. The fraction 1/160, as half a kāṇi; #NAME? |
அரைக்கால் | arai-k-kāl n. <>id.+. The fraction 1/8, as half a quarter; என்னும் பின்னவெண். |
அரைகடி | arai-kaṭi n. See அரைக்கடி. . |