Word |
English & Tamil Meaning |
---|---|
சாணைக்கூறை | cāṇai-k-kūṟai, n.<>சாணை +. New cloth given by bridegroom's parents to the infant bride at the time of betrothal in child-marriage ; குழந்தைகளுக்கு மணம்பேசிச் செய்யும் நிச்சிதார்த்தத்திற் பெண்ணுக்குககொடுக்கும் புதிய சிற்றாடை .(J.) |
சாணைச்சீலை | cāṇai-c-cīlai, n.<>id. +. Swaddling-clothes; கைக்குழந்தைகளை மூடிப்பொதியுரு சீலை. (யாழ்.அக.) |
சாணைசேர் - த்தல் | cāṇai-cēr. v. intr. <>சாணை1+. To preserve tamarind pulp in round cakes; புளியடை தட்டுதல். (W.) |
சாணைதீர் - த்தல் | cāṇai-tīr, v. intr. <>id. +. To be sharpened, as a weapon; சாணைபிடிக்கப்படுதல். To be cut and polished, as gems; |
சாணைப்பிள்ளை | cāṇai-p-piḷḷai, n.<>சாணை2 +. Infant in swaddling-clothes; துணியில் கிடக்கும் கைக்குழந்தை.(J.) |
சாணைபிடி - த்தல் | cāṇai-piṭi-, v. tr. & intr. <>சாணை +. To grind, whet, sharpen, as a weapon; ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துதல். (திவ்.திருப்பா.1. அரும், 32). |
சாணைவை - த்தல் | cāṇai-vai-, v.tr.&intr.<>id. +. See சாணைபிடி. . |
சாத்தந்தை | cāttantai, n.<>சாத்தன்+தந்தை. Father of Cāttaṉ; சாத்தனுக்குத் தந்தை. (தொல்.எழுத்.347, உரை.) |
சாத்தம் 1 | cāttam, n.<>šābda. Verbal authority; See சத்தப்பிரமாணம். மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம் (மணி.27,83.) . |
சாத்தம் 2 | cāttam, n.<>šākta. See சாக்தம். சிலர்கள் சாத்தமுஞ் சிலர்கள் சாம்பவமுமாய் (திருக்காளத்.பு.30. 26) . . |
சாத்தம்மி | cāttammi, n.<>சாந்து + அம்மி. 1. Grindstone for compounding perfumed sandal; கலவைச் சந்தனங் குழைத்தற்குரிய அம்மி. கருங்கொள்ளின் நிறத்தையொத்த நறிய சாத்தம்மியிலே கத்தூரிமுதலிய பசுங்கூட்டரைக்க (நெடுநல்.50, உரை). 2. Big grindstone for pounding limepolish, etc.; |
சாத்தர் 1 | cāttar, n.<>šākta. šakti worshippers; சத்திபுசை செய்வோர். சவுரர் சாத்தர் முதலா மதத்தோரும் (விநாயகபு.68, 36). |
சாத்தர் 2 | cāttar, n. See சாத்தவர். அதர்கெடுத்தலறிய சாத்தரொ டாங்கு (அகநா.39). . |
சாத்தல் | cāttal, n. prob. சாற்று-. The vedas; வேதம். சாத்தலோதும்...பிரமசாரிப் புதல்வரை (திருவாலவா.27, 52). |
சாத்தல்வார் | cāttalvār, n.<>U. sādarwār. See சாதல்வார். Loc. . |
சாத்தவர் | cāttavar, n.<>sārtha. Trading caravan; வெளிநாடுகளிற்சென்று வியாபாரஞ்செய்யும் வணிகக் கூட்டத்தார். பழுதில் சாத்தவர்கள் சூழ. (திருவாலவா.27. 1) . |
சாத்தவி | cāttavi, n. <>sādhvi. šakti, as the embodiment of absolute goodness; சத்தி. சாத்திவி யந்தமொ டாதியதாம் வண்ணத்தானே (திருமந்.1138) . |
சாத்தன் 1 | cāttaṉ, n.<>šāstṟ. 1. See சாத்தா. (திவா.) . 2. Arhat 3. Buddha; 4. See சாத்தா. (அரு. நி.) 5. See சீத்தலைச்சாத்தனார். அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் (சிலப். பதி. 10). 6. Imaginary person of male sex; |
சாத்தன் 2 | cāttaṉ, n.<>sārtha. Head of a trading caravan; வாணிகக்கூட்டத்தலைவன். (நன்.130, மயிலை.) |
சாத்தா | cāttā, n. <>šāstā nom. sing. of šāstr. A village deity; See ஐயனார். (சூடா.) . |
சாத்தாதவன் | cāttātavaṉ, n<>சாத்து+ஆ neg.+. Lit., one who does not wear the sacred thread; [பூணூல் தரியாதவன்] See சாத்தானி. |
சாத்தாவாரி | cāttāvāri, n.<>šatāvari. A common climber with many thick fleshy roots; See தண்ணீர்விட்டான். . |
சாத்தான் | cāttāṉ, n. cf. U. shaitān. Satan; பிசாசநாதன்; Chr. |
சாத்தானி | cāttāṉi, n.<>சாத்து-+ஆ neg.+ஆள்-. [T.K. sātāni.] Non-Brahmin caste of Vaiṣṇavas who render service in temples ; கோயிலில் பூமாலைக் கைங்கரியம் புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைஷ்ணவன் . |
சாத்தானிச்சி | cāttāṉicci, n.<>சாத்தானி. Woman of the Cāttāṉi, caste; சாத்தானிகுலத்திற் பிறந்தவள். |
சாத்திக்கொள்(ளு) - தல் | cātti-k-koḷ-, v. tr. <>சாத்து- +. To dress oneself with gaudy, costly attire, decorate oneself; ஆடம்பரமாக மாலைமுதலியன அணிதல். (J.) |
சாத்திகம் 1 | cāttikam, n.<>sātvika. See சாத்துவிகம். தாமதத்துட னிராசதஞ் சாத்திக மென்னும் (ஞானவா.திதி.7). . |