Word |
English & Tamil Meaning |
---|---|
சாதகன் 2 | cātakaṉ n.<>jātaka. One to whom an horoscope pertains; ஜாதகத்துக்கு உரியவன். கனயோக சாதக னெனப் படுதலும் (அறப்.சத.3). |
சாதகன்மம் | cātakaṉmam, n.<>jāta-karma. Ceremony performed on the birth of a child, one of cōṭaca-camskāram, q.v. ; சோடசசம்ஸ்காரங்களுள் பிறந்த குழந்தைக்குச் செய்யப்படுஞ் சடங்கு. விழைவொடு சாதகன்மம் விதியினா லியற்றி. (விநாயகபு.62, 21.) |
சாதகாசாரியன் | cātakācāriyaṉ, n.<>sādhaka +ā-cārya. Assistant to a head priest ; சமயசம்பிரதாய காரியங்களில் ஆசாரியனுக்கு உதவியாகவிருப்பவன். Loc. |
சாதகாலங்காரம் | cātakālaṅkāram, n.<>jātaka + alaṅkāra. A treatise on astrology by Kīraṉūr-Naṭarājaṉ in A.D. 1665 ; கி.பி.1665 ம் வருடத்தில் கீரனூர் நடராஜன் இயற்றிய ஒரு சோதிடநூல். |
சாதகும்பம் | cāta-kumpam, n.<>šātakumbha. Gold; பொன். விற்சாதகும்பன் (காளத்.உலா.87). |
சாதங்காண்(ணு) - தல் | cātaṅ-kāṇ-, v. intr. <>சாதம்3 +. To yield more than usual quantity of cooked rice, said of rice of superior quality ; உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல். இந்த அரிசி சாதங் காணக்கூடியது. Colloq. |
சாதத்தீர்த்தம் | cāta-t-tīrttam, n.<>id. +. Rice water; நீராகாரம். |
சாதம் 1 | cātam, n.<>jāta. 1. Birth, nativity; பிறப்பு. போதத்தினகன்றுசாதத்தின்வழி நின்று (பெருங்.உஞ்சைக்.43, 61). 2. That which arises or originates; 3. The young as of birds; 4. Truth; 5. Multitude, crowd; |
சாதம் 2 | cātam, n.<>sadyōjāta. A mantra pertaining to cattiyōcātam,, a form of šiva ; சத்தியோசாதமந்திரம். ஏற்றிடுக சாதத்தால் (சைவச.பொது.169) . |
சாதம் 3 | cātam, n. prob. prasāda. (T. sādamu.) Boiled rice; சோறு. நெய்யிலாச் சாதமுந் திருத்தி யில்லை (குமரே.சத.63) . |
சாதம் 4 | cātam, n. cf. சாதகம். Goblin பூதம். (சங்.அக.) |
சாதர் 1 | cātar, n.<>jāta. Those that are born; பிறந்தவர்.குருகுலம் பொற்புறப் பொழுதுற்றுச் சாதராயினர். (பாரத.சம்பவ.17). |
சாதர் 2 | cātar, n. See சாதரா.வங்கச்சாதர் (பெருங்.உஞ்சைக்.42, 205) . . |
சாதரா - தல் | cātar-ā-, v. intr. <>U. sādir +. To be served, as an order; சார்வாதல். உத்திரவு சாதராயிற்று. Colloq. |
சாதரா | cātar-ā-, n.<>U. cādara. Fine shawl, embroidered silk cloth; உயர்ந்த சால்வை. |
சாதரூபம் | cātarūpam, n.<>jāta-rūpa. A kind of gold, one of four poṉ, q.v.; நால்வகைப் பொன்களில் ஒன்று. சாதரூபங் கிளிச்சிறை யாடகம் சாம்புநதம். (சிலப்.14, 201) . |
சாதரூபி | cātarūpi, n.<>jātarūpin. Lit., gold-coloured. Arhat; (பொன்னிறமுடையோன்) அருகன். (சூடா.) |
சாதல் | cātal, n.<>சா-. Death; இறப்பு. சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும் (சீவக.269) . |
சாதல்வாத் | cātalvāt, n. See சாதல்வார் . . |
சாதல்வார் | cātalvar, n.<>U. sādarwār. Contingencies, incidental expenses; சில்லறைச் செலவு. Loc. |
சாதலம் | cātalam, n. Indian chickweed; See திராய். (மலை.) . |
சாதவண்டு | cāta-vaṇṭu, n. perh. jātarūpa +. A kind of beetle; ஒருவகை வண்டு. (மலை.) |
சாதவர்த்து | cātavarttu, n.<>U. sadāvart <> sadā + vṟtti. Daily provisions to travellers; See சதாவிருத்தி. (C.G.) . |
சாதவாகனம் | cātavākaṉam, n.<>சாதவாகனன். A work in Tamil written under the patronage of Cātavākaṉaṉ and named after him ; சாதவாகனனாற் செய்விக்கப்பெற்ற ஒரு தமிழ் நூல். (நன்.48, மயிலை). |