Word |
English & Tamil Meaning |
---|---|
சாதுரன் | cāturaṉ, n. prob. catura. (யாழ் அக.) 1.Discerning, wise man ; விவேகி. 2. Charioteer; |
சாதுரிகன் | cāturikaṉ, n. prob. id. See சாதுரன் (யாழ்.அக.) . |
சாதுரியம் | cāturiyam, n.<>cāturya. 1. Cleverness, ability; சாமர்த்தியம். சாதுரிய மில்ல வரு மில்லை (மேருமந். வைசயந்த. 19). 2. Civilised state; |
சாதுரியன் | cāturiyan, n.<>id. Clever person; சமர்த்தன். (யாழ்.அக.) |
சாதுரியாகமம் | cāturiyakamam, n.<>id. + āgama. Book of proverbs ; விவிலியநூலின் ஒரு பகுதி. R.C. |
சாதுவன் | cātuvaṉ, n.<> sādhu. 1. Good, gentle person; நல்லவன். சாதுவராய்ப் போதுமின்களென்றான் (திவ். இயற். நான்மு. 68). 2. One who has subued his senses; |
சாதுன்மாசியம் | cātuṉmāciyam, n. See சாதுர்மாசியம். சாதுன்மாசிய நல்விரதந் தொடங்கினேன் (விநாயகபு.80. 192) . |
சாதேட்டி | cātēṭṭi, n.<>jāta-iṣṭi. See சாதகன்மம். (யாழ் அக.) . |
சாதேவம் | cātēvam, n.<>sahadēva. 1. Common myrtle; See குழிநாவல். (பிங்.) . 2. Ruddy black plum; See சிறுநாவல். (மலை.) |
சாதேவன் | cātēvaṉ, n.sahadeva. See சகதேவன். இவ்வண்ணஞ் சாதேவ னியம்புதலும் (பாரத. கிருட்டிணன்றூ.33). . |
சாந்தகப்பை | cāntakappai, n.<>சாந்து + அகப்பை.. Mason's trowel; கொத்தன்கரண்டி.(J.) |
சாந்தகவிராயர் | cānta-kavi-rāyar, n. Author of Iraṅkēca-veṇpā; இரங்கேசவெண்பா இயற்றிய புலவர். |
சாந்தசந்திரோதயம் | cāntacantirōtayam, n.<>šānta-candrōdaya. A medicinal pill; ஒரு வகைக் குளிகை.(W.) |
சாந்தபனம் | cāntapaṉam, n.<>sāntapana. Expiatory fast in which one takes in pacakavviyam and water for a day and completely abstains from food the next day பஞ்சகவ்வியமும் குசோதகமும் ஒருநாள் உட்கொண்டு மறுநாள் முற்றும் உபவாசமிருத்தலாகிய பிராயச்சித்த விரதம். சாந்தபன முதலரிதாய விரதம் யாவும் (பிரபோத.13, 19) . |
சாந்தம் 1 | cāntam, n.<>šānta. 1. Peace, composure, resignation, quietism; அமைதி. சாந்தந் தருபவர் வெங்கைபுரேசர் (வெங்கைக்கோ.329) 2. Endurance, patience; 3. (Rhet.) Sentiment of resignation, quietistic sentiment, one of nava-racam q.v.; |
சாந்தம் 2 | cāntam, n.<>candana. 1. Sandal; சந்தனம். சாந்த நறும்புகை (ஐங்குறு. 253.) 2. Coolness; 3. Cow-dung. |
சாந்தம்மி | cāntammi, n.<>சாந்து + அம்மி 1. Sandal-mortar; சந்தனக்கல். நறுஞ்சாந்தம்மியும் (பெருங். உஞ்சைக். 38.171). 2. Stone for grinding lime; |
சாந்தலிங்கசுவாமிகள் | cānta-liṅka-cu-vāmikaḷ, n. A Vīra-šaiva ascetic of the 17th c., author of Kolai-maṟuttal and some other works ; கொலைமறுத்தல் முதலிய நூல்களியற்றிய வரும் 17ஆம் நூற்றாண்டினருமாகிய ஒரு வீரசைவ முனிவர். |
சாந்தவாரி | cāntavāri, n.<>šatāvari. A common climber with many thick fleshy roots; See தண்ணீர்விட்டான். (மலை.) . |
சாந்தன் | cāntan, n.<>šānta. 1. Quiet, peaceful person; patient man; அமைதியுடையோன் புராரியும் புகழ்தற்கொத்த சாந்தனால் (கம்பரா. திருவவ.34). 2. Arhat; 3. Buddha; |
சாந்தாற்றி | cantāṟṟi, n.<>சாந்து + ஆற்று-. Lit, that which dries up the sandal paste; (பூபசிய சந்தனத்தைப் புலர்த்துவது) . 1. Fan; 2. Bunch of peacock's feathers used as fan; |
சாந்தானிகபிச்சை | cāntāṉika-piccai, n.<>sāntānika +. Gift of mutt, land, etc., by disciples made to a guru for himself and his successors in office ; மடமுதலியவற்றைச் சந்தான பரம்பரையாக அனுபவிக்கும்படி சீடர்களிடத்து ஆசிரியர் வாங்கும் தானம். சாந்தானிகபிச்சை தக்ககணம் மாதுகரி. (சைவச.பொது.257) . |
சாந்தி | cānti, n.<>šānti. 1. Composure, tranquillity, peace; அமைதி. சாந்தி மேவி யுயர் தருமம் மல்கி (சேதுபு.பாவநா.7). 2. Alleviation, pacification; 3. Propitiatory rites for averting the evil influences of planets; 4. Remedy, antidote; 5. Festival; 6. Worship; 7. See சாந்தியடிகள். Nā. 8. See சாந்திகலை. 9. See சாந்திகலியாணம். Colloq. 10. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q. v.; |
சாந்திக்காரன் | cānti-k-kāraṉ, n.<>சாந்தி +. See சாந்தியடிகள். (T.A.S.II.154.) . |