Word |
English & Tamil Meaning |
---|---|
சாந்திக்கூத்தன் | cānti-k-kūttaṉ, n.<>id. +. Person performing the cānti-k-kūttu ; சாந்திக்கூத்து ஆடுபவன். சாந்திக்கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜராஜேந்திர ஆசார்யனுக்கும் . (S.I.I.II,306). |
சாந்திக்கூத்து | cānti-k-kūttu, n.<>id. +. (Nāṭya.) A kind of dance calculated to give peace of mind to the hero and other actors ; நாயகன் முதலியோர் மனவமைதி அடைதற்கு ஆடுங்கூத்து. (சிலப்.3, 12, உரை) . |
சாந்திகம் | cāntikam, n.<>šāntika. 1. Propitiatory rite for averting or removing evil; அரிஷ்டநிவிருத்தியின் பொருட்டாகச் செய்யுங் கிரியை. சாந்திக முன்னாய கருமத்தின் மனம்வைத்தோராய் (திருக்காளத்.பு.11. 10). 2. Obtaining dung from the cow while being evacuated for the preparation of sacred ashes; |
சாந்திகலியாணம் | cānti-kaliyāṇam, n.<>šānti +. Ceremony of post-puberty consummation in child-marriage; விவாகமான பெண் பூப்படைந்தபின்பு விதிப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு . |
சாந்திகலை | cānti-kalai, n.<>id. +. (šaiva.) Sphere of action for the Energy of šiva which calms down all the turbulent elements in fully riped souls, one of paca-kalai , q.v. ; சிவசத்தியின் பஞ்சகலைகளுள் அனுபவஞானம் பெற்ற ஆன்மாக்கட்கு விருப்புவெறுப்புச் சங்கற்பம் முதலிய எல்லாத்துன்பங்களுஞ் சாந்தமாகச் செய்யுங் கலை. (சி.போ.பா.2, 2, பக்.143) . |
சாந்திகழி - த்தல் | cānti-kaḷi-, v. intr. <>id. +. To perform propitiatory rites for averting or removing the evil influences of planets, spirits, etc. ; சாந்திக்கிரியைகளால் கிரகம் முதலியவற்றின் பீடையைப் போக்குதல் . |
சாந்திசெய்வான் | cānti-ceyvāṉ, n.<>id. +. See சாந்தியடிகள். சாந்திசெய்வானுக்கு விருத்திக்காக அடுத்த பூமி (T.A.S.I.7). . |
சாந்திமத்தீவு | cāntima-t-tīvu, n. An island in the Arabian Sea, said to have belonged to Parašurāma ; மேல்கடற்கண் பரசுராமர்க்கு உரியதான ஒரு தீவு. பரசுராமன் மேவருஞ் சாந்திமத்தீவரன் கருதி . (S.I.I.II, 403). |
சாந்திமுகூர்த்தம் | cānti-mukūrttam, n.<>id. +. See சாந்திகலியாணம். . |
சாந்தியடிகள் | cānti-y-aṭikal, n.<>id. +. Temple priest; கோயிற்பூசகன். (T.A.S.II, 136.) |
சாந்தியதீதகலை | cānti-y-atīta-kalai, n.<>šānti+atita +. (šaiva.) Sphere of action for the Energy of šiva which destroys all the turbulent elements in fully riped souls, one of paca-kalai , q.v. ; சிவசத்தின்யின் பஞ்சகலைகளுள் அனுபவஞானம்பெற்று விருப்புவெறுப்பு முதலிய எல்லாத்துன்பங்களுஞ் சாந்தமாய் நின்ற ஆன்மாக்கட்கு அத்துன்பங்களை முற்றும் ஒழியச்செய்யுங் கலை. (சி.போ.பா.2, 2, பக், 143.) |
சாந்தியதீதம் | cānti-y-atītam, n. See சாந்தியதிதகலை. . |
சாந்தியதீதை | cānti-y-atītai, n. See சாந்தியதிதகலை. (சி.போ.பா.2, 2, பக், 143.) . |
சாந்தியாதீதம் | cāntiyātītam, n. See சாந்தியதிதகலை. (சி.சி.2, 74, சிவாக்.) . |
சாந்திரம் | cāntiram, n.<>cāndra. 1. That which pertains to the moon; சந்திரசம்பந்தமானது. 2. Moonstone; See சந்திரகாந்தம். (W.) |
சாந்திரமாதம் | cāntira-mātam, n.<>id. +. Lunar month, 12 in number, viz., Caittiram, Vaicākam, Ciyēṭṭam, āṣāṭam, Cirāvaṇam, Pāttirapatam, ācuvicam, Kārttikam, Mārkkaciram, Puṣyam, Mākam,Pālkuṉam ; சைத்திரம், வைசாகம், சியேட்டம், ஆ£டம், சிராவணம், பாத்திரபதம், ஆசுவீசம், கார்த்திகம், மார்க்கசிரம், புஷயபம், மாகம், பால்குணம் என்ற சந்திரகதியைக் கொண்டளவிடப்படும் பன்னிரு மாதங்கள். சாந்திர மாதங் குரு .வந்தமாகும் (விதான.குணாகுண.80) |
சாந்திரமானம் | cāntira-māṉam, n.<>id. +. System of calculating months and years by the movements of the moon ; சந்திரகதியைக் கொண்டு மாதவருடங்கள் அளவிடும் முறை.சாந்திரமான பட்சம்பற்றிக் கூறினான் (சீவக. 493, உரை). |
சாந்திராண்டு | cāntirāṇṭu, n.<>id. + ஆண்டு. Lunar year; சந்திரகதியைக்கொண்டு அளவிடப்படும் வருஷம். (யாழ். அக.) |
சாந்திராயணம் | cāntirāyaṇam, n.<>cāndrāyaṇa. Expiatory fast for one month commencing from the full moon, the food being diminished every day by one handful during the dark fortnight and increased in like manner during the bright fortnight ; பூர்ணிமை தொடங்கி அமாவாசைவரை ஒவ்வொருபிடி அன்னங் குறைத்தும் அமாவாசை தொடங்கிப் பூர்ணிமைவரை ஒவ்வொருபிடி அதிகப்படுத்தியும் புசித்து அனுஷ்டிக்கும் பிராயச்சித்த விரதம். சாந்திராயண மதியந்தோறும் (திருவிளை.தலவி.9, 13) . |
சாந்திறாசு | cāntiṟācu, n. Tasmanian pine, m.tr., callitris rhomboidea ; ஒருவகை மரம். (L.) |
சாந்து | cāntu, n.<>candana. (M. cāntu.) 1. Sandal tree; சந்தனமரம். சாந்துசாய் தடங்கள் (கம்பரா.வரைக்காட்சி.44). 2. Sandal paste; 3. [K.sādu] Black pigment made of burnt rice or ragi, used as tilka; 4. sacred ashes; 5. Paste; 6. Mortar, plaster; 7. Faeces; |