Word |
English & Tamil Meaning |
---|---|
சார் 3 | cār, n. <>cāra. See சாரன்.சிறுவனுய்த்த சாரென நினைந்து (கந்தபு. அவைபுகு. 151). . |
சார்க்கரம் | cārkkaram, n. <>šārkara. (யாழ். அக.) 1. Sugarcandy; கற்கண்டு. 2. Skim of milk; |
சார்க்கேசபுஞ்சம் | cārkkēcapucam, n. Gum of the red cotton tree; இலவம்பிசின். (யாழ். அக.) |
சார்கொடு - த்தல் | cār-koṭu-, v. tr. <>சார்-+. To give room, as to a disease; அணுகவிடுதல். நோயுஞ் சார்கொடான் (திவ். திருவாய். 1, 10, 6). |
சார்ங்கபாணி | cārṅka-pāṇi, n. <>šārṅga+pāṇi. Viṣṇu, as holding cārṅkam in His hand; [சார்ங்கத்தைக் கையிலுடையோன்] திருமால், சங்க வண்ண மன்ன மேனி சார்ங்கபாணி யல்லையே (திவ். திருச்சங்.15). |
சார்ங்கம் | cārṅkam, n. <>šārṅga. 1. Bow வில். (பிங்.) 2. Viṣṇu's bow, one of pacāyutam, q.v.; |
சார்ச்சார் | cār-c-cār, adv. Redupl. of சார்2. Everywhere; இடந்தொறுமிடந்தொறும். மலையினிழியருவி . . . சார்ச்சார்க் நரைமரஞ்சேர்ந்து (பரிபா.16, 32). |
சார்ச்சி | cārcci, n. <>சார்-. 1. Leaning; சாய்வு. 2. Uniting; 3. Connection 4. Approach; 5. Support, place of support; |
சார்ச்சிவழக்கு | cārcci-vaḻakku, n. <>சார்ச்சி+. Figurative application. See உபசாரவழக்கு. (சைவப்.) |
சார்த்தவகன் | cārttavakaṉ, n. <>sārthavāha. Merchant, trader; வியாபாரி. (யாழ். அக.) |
சார்த்தியளத்தல் | cārtti-y-aḷattal, n. <>சார்த்து-+. Measurement by comparison; ஒன்றனோடு மற்றொன்றை ஒப்பிட்டு அளக்கை. (தொல். எழுத். 7, உரை.) |
சார்த்து 1 - தல் | cārttu-, 5 v. tr. Caus. of சார்-. [M. cārttu.] 1. To cause to lean, to support; சாரச்செய்தல். 2. To join, unite, connect; |
சார்த்து 2 | cārttu, n. <>சார்த்து-. 1. Document; பத்திரம். கைச்சார்த்து. Nā. 2. Note, memorandum; |
சார்த்துக்கை | cārttu-k-kai, n. <>id. +. Common rafter; கைமரம். (J.) |
சார்த்துகவி | cārttu-kavi, n. <>id. +. One who composes a verse after a model set by another; ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுட் புணர்ப்போன். (வெண்பாப். செய். 48, உரை.) |
சார்த்துப்பெட்டி | cārttu-p-petti, n. <>id. +. Box under a sieve to receive anything sifted, as corn flour; அரிப்பெட்டியின்கீழ்ச் சலித்த பொருளைக் கொள்ளவைக்கும் பெட்டி. (யாழ். அக.) |
சார்த்துவகை | cārttu-vakai, n. <>id. +. Mode of stating a thing casually or incidentally, dist. fr. talaimai-vakai; தலைமைவகையானன்றி உவமையாதிய சார்புவகையாற் கூறும் முறை. அகத்திணைக்கண் சார்த்துவகையான் வந்தனவன்றித் தலைமை வகையாக வந்தில என்பது (தொல். பொ. 54, உரை). |
சார்த்துவரி | cārttu-vari, n. <>id. +. A kind of love song having the name or the place of the hero, as its theme; பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரோடுஞ் சார்த்திப்பாடும் வரிப்பாட்டு வகை. (சிலப். 7, 7, அரும்.) |
சார்த்தூலம் | cārttūlam, n. <>šārdūla. Tiger; புலி. (திவா.) |
சார்ந்தவர் | cārntavar, n. <>சா£-. See சார்ந்தோர், 1. (திவா.) . |
சார்ந்தோர் | cārntōr, n. <>id. 1. Relatives; சுற்றத்தார். (சூடா.) 2. Friends, associates; |
சார்ப்பிறக்கு - தல் | cārppiṟakku-, v. intr. <>சார்ப்பு+இறக்கு-. To construct a sloping roof. See சாய்ப்பிறக்கு-. Loc. |
சார்ப்பு | cārppu, n. <>சாய்1-. 1. Sloping roof; சாய்ப்புக்கூரை. 2. Support; |
சார்பறு - த்தல் | cārpaṟu v. intr. <>சார்பு+அறு2-. 1. To renounce the world; துறத்தல். (சூடா.) 2. To be freed from births; |
சார்பார் | cārpār, n. <>U. carpāra. Division into four parts; நான்காய் வகுக்கை. Loc. |
சார்பிலார் | cārpilār, n. <>சார்பு+இல் neg.+. 1. Ascetics; முனிவர். 2. Enemies; |
சார்பிலோர் | cārpilōr, n. <>id. + id. +. See சார்பிலார். (சூடா.) . |