Word |
English & Tamil Meaning |
---|---|
சார்பிற்றோற்றம் | cārpiṟṟōṟṟam, n. <>id.+தோன்று 1. Natural cause of existence, as offspring from the parent, saplings from the root; இயற்கைத்தோற்றமுறை. (சி. சி.) 2. See சார்பெழுத்து. சார்பிற்றோற்றம் பிறக்குமாறு கூறுகின்றது (தொல். எழுத். 101, உரை). 3. (Buddh.) |
சார்பின்சார்பு | cārpiṉ-cārpu, n. <>id. +. Shortened secondary letter; குறுகின சார்பெழுத்து. சார்பின் சார்பாகிய ஆய்தக்குறுக்கமும் (நன். 87, விருத்.). |
சார்பு | cārpu, n. <>சார்-. 1. Place; இடம். படைஞர் சார்புதொறேகி (கந்தபு. முதனாட். 30). 2. Side; 3. See சார்ப்பு, 1. 4. Help, support; 5. Refuge, shelter; 6. Attachment; 7. Birth; 8. (Buddh.) Causes of misery, 12 in number, viz., pētaimai, ceykai, uṇarvu, aru-v-uru, vāyil, ūṟu, nukarvu, vēṭkai, paṟṟu, pavam, tōṟṟam, viṉai-p-payaṉ; 9. Bias, partiality; 10. Friendship; 11. Approximation; 12. Adjacency, nearness; |
சார்புநூல் | cārpu-nūl, n. <>சார்பு+. A work, which has for its source a mutaṉūl and a vaḻinūl, but differs from them in many particulars, one of three kinds of nūl, q.v.; நூல் வகை மூன்றனுள் முதனூல் வழிநூல்களோடு பொருண் முடிவு ஒருபுடையொத்து ஒழிந்தன ஒவ்வாமையுடைய புடைநூல். (நன்.8, உரை.) |
சார்பெழுத்து | cārpeḻuttu, n. <>id.+. Secondary letter, as kuṟṟiyal-ukaram, kuṟṟiyal-ikaram, etc., three in number according to Tolkāppiyam and ten in number according to Naṉṉūl; தொல்காப்பியர் கொள்கைப்படி மூன்றும், நன்னூலார் கொள்கைப்படி பத்துமான குற்றியலுகரம், குற்றியலிகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து. (நன். 60.) |
சார்போடு - தல் | cār-pōṭu-, v. intr. <>சார்2+. To put up a small bund for fishing; மீன்பிடிக்கச் சிறுகரை போடுதல். (W.) |
சார்போதன் | cār-pōtaṉ, n. <>சார்-+bōdha. (šaiva.) Soul, as assuming, like crystal, the characteristics of objects in contact; படிகம் போல் சார்ந்ததன்வண்ணமாகிய ஆன்மா. |
சார்மணை | cār-maṇai, n. <>id.+. Cushion-like masonry work against the wall on a pial, intended to lean on; சுவரோடு ஒட்டித் திண்ணையில் கட்டிய சாய்மானத் திண்டு. (W.) |
சார்மானம் | cār-māṉam, n. <>id. +. Anything to lean on; சாய்மானம். (W.) |
சார்வகாலம் | cārva-kālam, adv. <>sarva +. Always; எப்பொழுதும். Colloq. |
சார்வணை | cārvaṇai, n. <>சார்வு+. Seat provided with back; சாய்ந்திருத்தற்குரிய அணை. சந்தனப் பீடிகைச் சார்வணை யேறி (பெருங். உஞ்சைக், 37, 15). |
சார்வபூமம் | cārvapūmam, n. See சார்வபௌமம். (சங்.அக.) . |
சார்வபூமன் | cārvapūmaṉ, n. See சார்வ பௌமன். தண்ணளிசேர் தேவதாசார்வபூமா (சிவரக. கணபதிகுமார. 4). . |
சார்வபௌமம் | cārvapaumam, n. <>sārvabhauma. The male elephant of the northern region, one of aṣṭa-tik-kajam, q. v.; அஷ்டதிக்கஜங்களில் ஒன்றாகிய வடதிசையானை. (சூடா.) |
சார்வபௌமன் | cārva-paumaṉ, n. <>sārvabhauma. Emperor, universal monarch; சக்கரவர்த்தி. |
சார்வரி | cārvari, n. <>šārvarī. The 34th year of the Jupiter cycle; அறுபது ஆண்டுகளுள் முப்பத்துநான்காவது. |
சார்வலை | cār-valai, n. <>சார்2+. A fishing net; மீன்வலைவகை. Loc. |
சார்வா - தல் | cārvā-, v. intr. <>E. serve+. To be served, as summons; கோர்ட்டுக் கட்டளை முதலியன உரியவனிடத்துக் கொடுக்கப்படுதல். கோர்ட்டுச் சம்மன் அவனுக்குச் சார்வாகவில்லை. |
சார்வாகம் | cārvākam, n. <>cārvāka. The materialistic philosophy of cārvāka which says that perception is the only source of knowledge, that earth, water, fire and air are the only elements, that life is produced or annihilated according as the elements combine or separate, that there is; காட்சியே அளவையாதென்றும் நிலம், நீர், தீ, வெளியெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சிவிசேடத்தால் தோன்றிப் பிரிவால் மாய்வதாய் உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட்களிப்புப்போல வெளிப்பட்டழியுமென்றும், மறுமையில்லையென்றும், சரீரமே ஆன்மாவென்றும், கடவுள் இல்லை |