Word |
English & Tamil Meaning |
---|---|
சாரைவாலன் | cārai-vālaṉ, n. id. +. (J.) 1. Bullock with a long tapering tail நீண்ட வாலுள்ள எருது. 2. A kind of tobacco |
சாரோசி | cārōci, n. <>kṣāra. Sal-ammoniac, a solder; நவச்சாரம். (யாழ். அக.) |
சாரோலை | cār-ōlai, n. <>சார்-+. See சார் வோலை. சாரோலை விழுந்ததென்று குருத்தோலை சிரிக்கலாமா? Loc. |
சால் (லு) - தல் | cāl-, v. intr. cf. šal. [T. tcālu.] 1. [K. sāl.] To be abundant, full, extensive; நிறைதல். ஈடுசால் போர் (சீவக. 59). 2. To excel in moral worth; to be great, noble; 3. [K. sāl.] To be suitable, fitting; 4. To be finished, exhausted; |
சால் 1 | cāl-, n. <>சால்-. [T. tcālu.] 1. [K.sāl.] Fullness, abundance; நிறைவு. 2. Large water-pot; 3. Baling bucket; 4. [K. sāl, M. cāl.] Furrow in ploughing; 5. Track of a sower in passing and repassing while sowing grain; 6. The eleventh sign of the zodiac, Aquarius; |
சால் 2 | cāl-, n. <>U. sāl. Year வருஷம். Loc. |
சால் - அய்ந்தா | cāl-,ayntā n. <>U. sāl-i-ā-yanda. Next year; அடுத்த ஆண்டு. (w.) |
சால்கட்டு - தல் | cāl-kaṭṭu-, v. intr. <>சால்2+. (W.) 1. To plough the first furrow in a field; தலைச்சாலுமுதல். 2. To pass and repass, sowing grain in a field; |
சால்குஜஸ்தா | cāl-kujastā, n. <>U. sāl-ē-guzashta. Last year; சென்ற ஆண்டு. Loc. |
சால்தி | cālti, adj. <>Mhr. cālatā. [K. cāḷti.] Current; நடப்பிலுள்ள. சால்தி ரிகார்டு. Loc. |
சால்பசால் | cāl-pacāl, n. <>U. sāl-basāl. Year by year, annually; ஆண்டுதோறும். (W.) |
சால்பு | cālpu, n. <>சால்-. 1. Excellence; மேன்மை. (திவா.) 2. Good quality or character; 3. Nobility; 4. Nature; 5. Frame of mind; 6. Learning, erudition; |
சால்புமுல்லை | cālpu-mullai, n. <>சால்பு+.(Puṟap.) Theme describing the serenity of noble-minded persons; சான்றோருடைய அமைதி கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 31.) |
சால்புளி | cālpuli, adv. <>id.+ In the prescribed manner; முறைப்படி. சமிதைக் கிரிகை சால்புளிக் கழிப்பு. (பெருங். இலாவாண. 3, 81). |
சால்வயிறு | cāl-vayiṟu, n. <>சால்2+. Pot belly; பெருவயிறு. Colloq. |
சால்வளை - த்தல் | cāl-vaḷai-, v. intr. <>id.+. See சால்விடு-. . |
சால்விடு - தல் | cāl-viṭu-, v. intr. <>id.+. To plough a furrow; ஏர்ச்சாலுமுதல். (J.) |
சால்வை | cālvai, n. <>U. shāl. [K. šāluve.] Shawl; மயிர்க்கம்பளம். அந்த வித்துவான் சால்வைச் சம்மானம் பெற்றார். |
சால்வையெடு - த்தல் | cālvai-y-eṭu-, v. intr. <>சால்வை+. To lower or take off the upper cloth as a mark of respect; மரியாதையாக மேல் வேட்டியையெடுத்தல். (J.) |
சால்ஜாப்பு | cāl-jāppu, n. <>U. savāl+ U. jawāb. 1. Question and answer; வினாவிடை. 2. Answer 3. Lame excuse; |
சால்ஜாப்புச்சொல்(லு) - தல் | cāl-jāppu-c-col-, v intr. <>சால்ஜாப்பு+. To evade by giving lame excuses; போக்குக்கூறுதல். (C. G.) |
சால | cāla, adv. <>சால்-. [T. tcāla, K. sale, M. cāla.] Very well, very much; மிகவும். சாலவமுதுண்டு. (திருவாச. 16, 8). |
சாலக்காரன் | cāla-k-kāraṉ, n. <>jāla+. Deceiver, hypocrite; வஞ்சகன். |
சாலக்கிராமம் | cālakkirāmam, n. <>šālagrāma. See சாளக்கிராமம் . |
சாலக்கு | cālakku, n. <>U. cālak. [K. cālak, Tu. cālāku.] Colloq. 1. Cunning; தந்திரம். 2. Pretence, show; 3. Skill, cleverness; |
சாலகடங்கடர் | cāla-kaṭaṅkaṭar, n. <>sālaghaṭaṅghaṭā. Rākṣasas, as born of Sālaghaṭaṅghaṭā; [சாலகடங்கடை யென்பவளிடம் தோன்றியவர்] அரக்கர். சாலகடங்கடர் மரபின்றையல் (கம்பரா. சூர்ப்பண. 50). |
சாலகம் 1 | cālakam, n. <>jālaka. 1. Net, rope-net; வலை. (அக. நி.) 2. Cobweb; 3. Ornament worn on the forehead by the sacrificer's wife; 4. Bird's nest; 5. Latticed window; 6. Flower-bud; 7. Trick, magic; |