Word |
English & Tamil Meaning |
---|---|
சாலேயம் 1 | cālēyam, n. <>šālēya. Field where cāli rice is cultivated; paddy-field; செந்நெல் விளையும் நிலம். (பிங்.) |
சாலேயம் 2 | cālēyam, n. perh. kālēya. Bushy firebrand teak. See சிறுதேக்கு. (மலை.) |
சாலேஹால் | cālēhāl, n. <>U. sāl-ē-hāl. Current year; நாளது வருஷம். (C. G.) |
சாலை 1 | cālai, n. <>šālā. 1. Alms-house, feeding-house; உணவு அளிக்கும் அறச்சாலை. தண்ட மிட்டன்றிச் சாலை உண்ணப்பெறார்; (T. A. S. I, 9). 2. Sacricial hall; 3. School; 4. Stable, elephant stable; 5. Cow shed; 6. Large public hall; 7. Royal palace; 8. House, mansion; 9. Avenue, public road shaded by trees; |
சாலை 2 | cālai, n. <>கரிசாலை. A plant. See கையாந்தகரை. (L.) |
சாலைக்கரை | cālai-k-karai, n. <>சாலை1+. Road-side; சாலைவழியின் பக்கம். Colloq. |
சாலோக்கியம் | cālōkkiyam, n. <>sālōkya. (šaiva.) See சாலோகம். சன்மார்க்க முத்திகள் சாலோக்கிய சாமீப்பியம். (சி. சி. 8, 18). . |
சாலோகம் | cālōkam, n. <>sālōka. (šaiva.) The blissful condition of being in God's world, one of four Patavi, q.v.; நான்கு பதவிகளுள் கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை. சாலோக தொண்டர் (திருப்பு. 1140). |
சாவ்கார் | cāvkār, n. <>Pkt. sāvakār. Native banker, sowcar; பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவன். |
சாவகக்குறிஞ்சி | cāvaka-k-kuṟici, n. prob. yāvaka +. (Mus.) A secondary melody-type of kuṟici class; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று. (பிங்.) |
சாவகநோன்பி | cāvaka-nōṉpi, n. <>சாவகன்1+. (Jaina.) Householder who takes to ascetic practice; இல்லறத்திலிருந்து விரதங்காப்போன். சாவகநோன்பிக ளடிக ளாதலின் (சிலப்.16, 18). |
சாவகம் | cāvakam, n. prob. yāvaka. 1. The Archipelago, Sumatra-Java or Java; யவத்தீவு. சாவக நன்னாட்டுத் தண்பெயன் மறுத்தலின் (மணி.14, 74). 2. Language of the country of Cāvakam, one of 18 languages referred to in Tamil works; |
சாவகன் 1 | cāvakaṉ, n. <>Pkt. šāvaka <>šrāvaka. 1. (Jaina.) See சாவகநோன்பி. இல்லறத்தையுடைய சாவகர்(சிலப். 10, 24, உரை). 2. Disciple; |
சாவகன் 2 | cāvakaṉ, n. perh. சாவு+அகம். Saturn சனி. (திவா.) |
சாவகன் 3 | cāvakaṉ, n. <>yāvaka. A Javanese; யவத்தீவினர். சீனர் சாவகர் (பாரத. படையெழு. 6). |
சாவகாசம் | cāvakācam, n. <>sāvakāša. Leisure, opportunity, convenience; சௌகரிய சமயம். |
சாவகாசமாய் | cāvakācam-āy, adv. <>சாவகாசம்+. Leisurely, slowly; விரைவின்றி. சாவகாசமாய் வந்தான். |
சாவகாசவிதி | cāvakāca-viti, n. <>sāvakāša-vidhi. A rule which applies not only to the case in question but also to other cases; a rule of common application, opp. to niravakāca-viti; காட்டிய இடத்தில்மட்டுமன்றி வேறிடத்துஞ் செல்லக்கூடிய விதி. நீர் ஈண்டு எடுத்துக்காட்டிய வசனங்களெல்லாஞ் சாவகாசவிதிவசனங்கன் (சிவசம. 65). |
சாவகாரி | cāvakāri, n. <>Mhr. sāvakārī See சாவ்கார். (W.) . |
சாவகாரியம் | cāvakāriyam, n. <>சாவ்கார். Discernment, discrimination; வியவகார ஞானம் (J.) |
சாவட்டம் | cāvaṭṭam n. Slang term for a rupee; ஒற்றை ரூபாயைக் குறிக்கும் குழூஉக்குறி. Loc. |
சாவட்டை 1 | cā-v-aṭṭai, n. <>சா-+. 1. Nits found in the hair; ஈர். (W.) 2. Withered grain, chaff; 3. Emaciated person; 4. Dried betel leaves; 5. Butterfly; |
சாவட்டை 2 | cāvaṭṭai, n. A small round pillow; சிறுவட்டத் தலையணை. Nā. |
சாவட்டைப்பயிர் | cāvaṭṭai-p-payir, n. <>சாவட்டை+. Blighted or withered plants; சாவியான பயிர். (W.) |
சாவடி 1 | cāvaṭi, n. <>சாவு+அடி. Deadly blow; மரணம் விளைக்கத்தக்க அடி. Kuṟava. |
சாவடி 2 | cāvaṭi, n. <>Mhr. sāvaṭī. [T. K. cāvadi, M. cāvaṭi.] 1. Inn, choultry; வழிப்போக்கர் தங்குமிடம். மலர்ச்சோலையுஞ் சாவடிகளும் (இராமநா. சுந்தர. 3). 2. A public building in a village; 3. Police station, office of village magistrate, customs station; 4. Open dais in front of a house for general use; |