Word |
English & Tamil Meaning |
---|---|
சாவாவுடம்பு | cāvā-v-uṭampu, n. <>id. + id. +. Fame, as vehicle of deathless life; [அழியாத உடல்] புகழ். இம்மூவர் சாவாவுடம் பெய்தினார் (திரிகடு. 16). |
சாவாளை | cāvāḷai, n. cf. šabala. [T. sāvada.] Sabre-fish, attaining at least 3 ft. in length, Trichiurus haumela; மூன்றடிநீளமுள்ள கடல்மீன்வகை. (சங். அக.) |
சாவி 1 | cāvi, n. prob. சாவு. [T. sāvi, M. cāvi.] Withered crop, blighted empty grain; மணி பிடியாமற் பதராய்ப்போன பயிர். சாவியேபோன புன்செயே யனையேன். (அருட்பா, vi, அபயத்திறன்.13). |
சாவி 2 | cāvi, n. <>Mhr. cāvī. cf. Prot. chiavi. 1. Key; திறவுகோல். 2. Linchpin; |
சாவி - த்தல் | cāvi-, 11 v. tr. <>šap. To curse, revile; திட்டுதல். வீணாகச் சாவிக்கிறான். Loc. |
சாவிகொடு - த்தல் | cāvi-koṭu-, v. intr. <>சாவி2+. 1. To start, as a machine; to wind, as a watch or clock; கடியாரமுதலியவை ஓடுவதற்காக அவற்றின் சாவியை முறுக்குதல். 2. To give an impetus, to instigate; |
சாவிகொலுசு | cāvi-kolucu, n. <>id.+. Chain for holding keys; சாவிகள் கோக்கப்பட்ட சங்கிலி. Loc. |
சாவித்திரி | cāvittiri, n. <>Sāvitrī. 1. A wife of Brahmā; பிரமன் மனைவியருள் ஒருத்தி. சுநீதியுட் டுளங்கு சாவித்திரி. (காசிக. கற்பிலக். 7). 2. Sarasvatī; 3. Sacred mantra of Gāyatrī; 4. The wife of Satyavān, and daughter of King Ašvapati, regarded as model of wifely devotion; 5. (Astron.) The 13th of 15 divisions of night; 6. Name of an Upaniṣad, one of 108; |
சாவித்திரிசூத்திரம் | cāvittiri-cūttiram, n. <>சாவித்திரி+. Sacred thread worn by the twice-born; பூணூல். (யாழ். அக.) |
சாவித்திரிவிரதம் | cāvittiri-viratam, n. <>id. +. A fast observed by married women on the full moon day of ṉi to secure longevity for their husbands, after the manner of Sāvitrī; சாவித்திரிநோற்றவாறு, தங்கணவர் ஆயுள்விருத்தியை வேண்டி மகளிர் ஆனிப்பௌர்ணிமையில் அனுட்டிக்கும் விரதம். (அபி. சிந்.) |
சாவிதா | cāvitā, n. <>U. zābita. List, inventory. See ஜாப்தா. (W.) |
சாவிந்து | cāvintu, n. <>jyā-bindu. Arc of a circle whose sine is registered in a table; ஓர் கணிதவுறுப்பு. (W.) |
சாவிபோ - தல் | cāvi-pō-, v. intr. <>சாவி1+. To perish, to blighted, as crop; பயிர் பட்டுப் போதல். கொல்லைதான் சாவிபோய்விட்டாலு மங்குவரு குருவிக்கு மேய்ச்சலுண்டு (குமரே. சத. 79). |
சாவிவைக்கோல் | cāvi-vaikkōl, n. <>id.+. Straw of blighted crop; சாவியாய்ப்போன பயிரின் வைக்கோல். |
சாவிளைவு | cā-viḷaivu, n. <>சா-+. Super-abundant crop, believed to be a prognostic of death of the landowner or his near relatives; சாக்குறியாக விளையும் பெருவிளைவு. அவனுக்குச் சாவிளைவாயிருக்கிறது, க்ஷேமமாய் இருக்கவேண்டும். Colloq. |
சாவீடு | cā-vīṭu, n. <>id.+. House in mourning; இழவு நேர்ந்த வீடு. |
சாவு | cāvu, n. <>id. [T. tcāvu, K. Tu. sāvu, M. cāvu.] 1. Death மரணம். (பிங்.) 2. (Astrol.) The eighth house, as the house of death; 3. Ghost; |
சாவுகாணிக்கை | cāvu-kāṇikkai, n. <>சாவு+. A kind of death-duty, opp. to vāḻvukāṇikkai; மரணத்தின்பேரில் விதிக்கப்பட்ட வரிவகை. Nā. |
சாவுகாயம் | cāvu-kāyam, n. <>id. +. Mortal wound; மரணகாயம். (W.) |
சாவுகார் | cāvukār, n. See சாவ்கார். Loc. . |
சாவுசெத்தவன் | cāvu-cettavaṉ, n. <>சாவு+. See சாவாஞ்செத்தவன். Loc. . |
சாவூன் | cāvūṉ, n. <>U. sābūn. Soap; சவுக்காரம். (W.) |
சாவெடி | cā-veṭi, n. <>சா-+. Fetid smell of a corpse; பிணநாற்றம். Loc. |
சாவெடில் | cā-veṭil, n. <>id.+. 1. See சாவெடி. (சங். அக.) . 2. Stinking smell, as of putrid matter; |
சாவெழுத்து | cā-v-eḻuttu, n. <>சாவு+. (Poet.) Fatal letter. See நச்செழுத்து. (W.) |
சாவேரி | cāvēri, n. <>sāvērī. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.) |
சாவேறு | cā-v-ēṟu, n. <>சா-+. A select band of armed warriors who, under a solemn vow, rush in a body, endeavour to cut their way through the guards of the enemy-king and lose their lives in the fray; பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படைமீது ஒருமுகமாய்ப் பாய்ந்து ஊடறுத்துச் செல்லமுயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே விரதமாகக்கொண்ட வீரர்தொகுதி. சாவேறெல்லாந் தனிவிசும்பேற. (S. I. I. III, i, 145). |