Word |
English & Tamil Meaning |
---|---|
சாவோலை | cā-v-ōlai, n. <>சாவு+. Ola letter informing the death of a person; மரணத்தைத் தெரிவிக்கும் ஓலைச்சீட்டு. சாவோலை கொண்டொருவ னெதிரே செல்ல (தனிப்பா.). |
சாழல் | cāḻal, n. perh. சாடு1-. 1. An ancient game played by girls; மகளிர் விளையாட்டுவகை. மற்றுமங்கையர் சாழலாம் விளையாடலாக (திருவாத. பு. புத்தரை. 86). 2. A poem whose stanzas are each in the form of a question and answer with the refrain cāḻalō at the end; 3. A masquerade dance; 4. Bear; |
சாழல்படி - த்தல் | cāḻal-paṭi-, v. intr. <>சாழல்+. To recite or read Tiru-c-cāḻal from Māṇikka-vācakar's Tiruvācakam during the last moments of a person; ஒருவன் சாகுந்தறுவாயில் திருவாசகத்தின் பகுதியாகிய திருச்சாழலை ஓதுதல். Nā. |
சாழல்பாடு - தல் | cāḻal-pāṭu-, v. intr. <>id.+. To play the cāḻal game; சாழல் ஆடுதல். (W.) |
சாழை 1 | cāḻai, n. <>id. A girl's game accompanied with clapping of hands; மகளிர் கைகொட்டி ஆடும் விளையாட்டு (யாழ். அக.) |
சாழை 2 | cāḻai; n. <>šālā. See சாளை. (W.) . |
சாழைகொட்டு - தல் | cāḻai-koṭṭu-, v. intr. <>சாழை1+. To clap hands; கைகொட்டுதல். (W.) |
சாழையகத்தி | cālai-y-akatti, n. A variety of sesban; அகத்திவகை. (யாழ். அக.) |
சாள்பீசு | cāḷpīcu, n. Scupper; கப்பலின் மேற்றட்டிலுள்ள நீர்விழுந் துவாரம். Naut. |
சாளக்கிராமம் | cāḷakkirāmam, n. <>Sālagrāma. Black fossil ammonite worshipped as a form of Viṣṇu, chiefly found in the river Gandak; திருமாலுருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய கண்டகிச்சிலை. பாற்கடற் பிறந்தாலு நத்தை தான் சாளக்கிராம மாமோ (சேதுபு. சக்கர.19). |
சாளகம் | cāḷakam, n. (Mus.) One of the three types of harmonic tone; இசைப்பாவுக்குரிய சாதியோசை மூன்றனுள் ஒன்று (சிலப். 6, 35, உரை.) |
சாளம் 1 | cāḷam, n. <>sāla. Dammer resin; குங்கிலியம். (மூ. அ.) |
சாளம் 2 | cāḷam, n. Sand; மணல். (சங். அக.) |
சாளர் | cāḷar, n. (Mus.) A secondary melody-type of the cevvaḻi class; செவ்வழி யாழ்த்திறவகை. (பிங்.) |
சாளரம் 1 | cāḷaram, n. prob. jālaka. [K. jālandara.] Latticed window, window; பலகணி. சாளரந்தோறுந் சந்திரவுதயங் கண்டார் (கம்பரா. மிதிலைக். 14). |
சாளரம் 2 | cāḷaram, n. cf. K. sāḷaga. See சாலகராகம். சுத்த சாளர சங்கீதம் (திருவாலவா. 54, 13). . |
சாளரவாயில் | cāḷara-vāyil, n. <>சாளரம்1+. Window; பலகணி. (W.) |
சாளா | cālā, n. See சாளை. (சங்.அக.) . |
சாளி 1 | cāḷi, n. See சாளிகை. (தனிப்பா. i, 72, 142, உரை.) . |
சாளி 2 | cāḷi, n. Umbrella thorn babul. See குடைவேல். (L.) |
சாளிகம் | cāḷikai, n. See சாளிகை. (W.) . |
சாளிகை 1 | cāḷikai, n. perh. ali-ka. Beetle; வண்டு. (W.) |
சாளிகை 2 | cāḷikai, n. prob. jālaka. [T. jāliya, K. jāḷige, M. cāḷika.] Money-bag; பணப்பை. மாளிகையும் பணச்சாளிகையும் (கந்த ரலங்.78). |
சாளிகை 3 | cāḷikai, n. <>Mhr. jhārī. Jar; சாடி. |
சாளிகைப்பணக்காரன் | cāḷikai-p-paṇa-k-kāraṉ, n. <>சாளிகை2+. Person with long purse, wealthy man; பெருஞ்செல்வன். (W.) |
சாளிகைமாடு | cāḷikai-māṭu, n. <>id.+. Bull let out in bull-baiting; சல்லிக்கட்டுக்குரிய எருது. Loc. |
சாளியல் | cāḷiyal, n. See சாளிகை. Loc. . |
சாளியா | cāḷiyā, n. A kind of medicinal seed; ஒருவகை மருந்துவிதை. (W.) |
சாளுக்கியர் | cāḷukkiyar, n. prob. caulukya. A dynasty of kings who ruled in the Dekhan from 6th to 13th C. A. D.; தக்ஷிணதேசத்தை ஆறாவது முதல் பதின்மூன்றாவது நூற்றாண்டுவரை ஆண்டு வந்த ஓர் அரசவகுப்பினர். |
சாளுவம் | cāḷuvam, n. <>Sālva. A country in Central India. See சாலவம். (W.) |
சாளுவன் | cāḷuvaṉ, n. A dynastic surname of the kings of Vijayanagar; விஜயநகரத்து அரசரது விருதுகளுள் ஒன்று. சாளுவ ஸ்ரீவேங்கடபதி தேவமகாராயர் (S. I. I. I, 85). |
சாளேசரம் | cāḷēcaram, n. See சாலேசரம். . |
சாளேசுரம் | cāḷēcuram, n. See சாலேசரம். . |