Word |
English & Tamil Meaning |
---|---|
சிரந்தை | cirantai, n. perh. சிரற்று-. Small X-shaped drum; உடுக்கை. நுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலன் (தொல். பொ. 82. உரை). |
சிரநதி | cira-nati, n. <>širas +nadī. The river Ganges, as flowing from the head of šiva; [சிவனது சிரசினின்று பெருகும் நதி] கங்கை. (பிங்.) |
சிரபங்கம் | cira-paṇkam, <>id. + bhaṅga. See சிரச்சேதம். (J.) . |
சிரபாத்திரி | cirapāttiri, n. <>சிரம்1 + pātrin. šiva, as having skull for His begging bowl; [கபாலத்தைப் பிட்சாபாத்திரமாகக் கொண்டவன்] சிவன் சிரபாத்திரி கையிலாயி. (கந்தரந். 34). |
சிரபுரம் | cira-puram, n. <>id. +. Shiyali; சீகாழி. சித்தர் வந்துபணியுஞ் செல்வச் சிரபுர மேயவனே (தேவா. 99, 10) |
சிரம் 1 | ciram, n. <>širas. 1. Head; தலை. அன்றற்ற சிரமு மன்னவை யாதலின் (கம்பரா. முதற்போர். 236). 2. Top, summit; 3. Eminence, greatness; |
சிரம் 2 | ciram, n. <>ciram. A long time; நெடுங்காலம். (சூடா.) |
சிரம் 3 | ciram, n. 1. Castor-plant. See ஆமணக்கு. (சங். ஆக.) . 2. Areca-palm. See கழகு. (சங். அக.) 3. Wind killer. See வாதமடக்கி. (மலை.) 4. Arrowroot flour; |
சிரம்பம் | cirampam, n. A mineral poison; சாலாங்கபாஷாணம். (w.) |
சிரமச்சாலை | cirama-c-cālai, n. <>šrama +. Place for military exercise and for practice of arms; ஆயுதப்பயிற்சி செய்யுமிடம். காமவேள் சிரமச்சாலையை யொக்கும் (பரிபா.18, 29, உரை). |
சிரமசாத்தியம் | cirama-cāttiyam, n. <>id. +. That which is accomplishable with difficulty; வருந்திச் செய்யக்கூடியது. சிரமசாத்தியமான வேலை. Loc. |
சிரமஞ்செய் - தல் | cirama-cey-, v. intr. <>id. +. To practise arms, fencing, etc.; சிலம்பம் முதலிய பழகுதல். (சூடா.) |
சிரமநிலை | cirama-nilai, n. <>id. +. Practice of arms; ஆயுதப்பயிற்சி. குருகுலக் குமரருக்கு வரு சிரமநிலை காண்மி னெனவே (பாரத. வாரணாவத. 54). |
சிரமபரிகாரம் | cirama-parikāram, n. <>id. +. Rest; இளைப்பாறுகை. |
சிரமம் | ciramam, n. <>šrama. 1. Exhaustion, weariness; களைப்பு. சிரம மெல்லாஞ் செல்லிருட் டீர்ந்து (பெருங். இலாவாண. 9, 31). 2. Exertion, toil; 3. Practice of arms, military exercise; |
சிரமன் | ciramaṉ, prob. சிறுமகன்.[M. ceṟuman.] 1. Slave, menial servant; அடிமை. 2. Mean or despicable fellow |
சிரமாலை | cira-mālai, n. <>širas + mālā. Garland of skulls worn by šiva; சிவனணியுந் தலைமாலை. (திவா.) |
சிரமிலி | ciram-ili, n. <>சிரம்1 +. Crab, as having no head; [தலையில்லாதது] நண்டு. (சங். அக.) |
சிரமேற்கொள்(ளு) - தல் | cira-mēṟ-koḷ-, v. tr. id. +. See சிரசாவகி-. . |
சிரமை | ciramai, n. <>šrama. See சிரமம், 1. வழிச்சிரமை தீர்மின் (சூளா. தூது. 18). |
சிரல் 1 | ciral, n. Kingfisher; சிச்சிலி. புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல். (சிறுபாண். 181). |
சிரல் 2 | ciral, n. cf. širas. Top, end; முடிவிடம். (யாழ். அக.) |
சிரவணத்துவாதசி | ciravaṇa-t-tuvātaci, n. <>šravaṇa +. Fast observed when šravaṇa nakṣatra falls on the twelfth titi of the bright fortnight in Pāttirapatam; பாத்திரபதமாசத்தில் சுக்கிலபட்சத் துவாதசியில் திருவோணநட்சத்திரம் கூடினநாளில் அனுட்டிக்கும் விரதம். (பஞ்சாங்க.) |
சிரவணம் | ciravaṇam, n. <>šravaṇa. 1. Ear; காது. சீரார் வசனச் சுவைநோக் கிடுமென் சிரவணமே (தனிப்பா. ii, 210, 500). 2. Listening, hearing; 3. The 22nd nakṣatra; |
சிரவம் 1 | ciravam, n. Partridge; கவுதாரி. (பிங்.) |
சிரவம் 2 | ciravam, n. <>šrava. Ear; காது. (w.) |
சிரற்று - தல் | ciraṟṟu-, 5 v. intr. To shout, call loudly; உரக்கவொலித்தல். சிரற்றின பார்ப்பினின். . . வெய்துயிர்த் தரற்றின (கம்பரா. கும்பக. 268).-tr. [T. ciracira.] To be angry with; |
சிரறு - தல் | ciraṟu-, 5 v. intr. 1. To sulk, disagree; மாறுபடுதல். சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பு (கலித். 88, 13). 2. To scatter; |
சிரஸ்தகோப்பு | cirasta-kōppu, n. A kind of paddy; நெல்வகை (A.) |
சிரஸ்ததார் | cirastatār, n. <>U. sarrishtadār. Head officer of a court of justice or collector's office; head accountant of a Taluk who has the general superintendence of the establishment; கோர்ட்டு, கலெக்டராபீசு, தாலுக்காக்கச்சேரி இவற்றில் உள்ள சிப்பந்திகளுக்குத் தலைவரான அதிகாரி. |