Word |
English & Tamil Meaning |
---|---|
சில்லங்கெடு - தல் | cillaṅ-keṭu-, v. intr. <>சில்லம்2 +. To be scattered, broken; சிதறுண்ணுதல். (யாழ். அக.) |
சில்லத்து | cillattu, n. cf. U. zillat. Small jacket; சிறுசட்டை. (w.) |
சில்லந்தட்டிப்போ - தல் | cillan-taṭṭi-p-pō-, v. intr. <>சில்லம்2 +. To become impoverished தரித்திரத்திற்கு உட்படுதல். (யாழ். அக) |
சில்லபொல்லம் | cilla-pollam, n. Redupl. of சில்லம்2. See சில்லம், 1. (J.) . |
சில்லம் 1 | cillam, n. cf. இல்லம் [K. cilla.] 1. Clearing-nut tree. See தேற்றா. (சூடா.) . 2. Strychnine tree; |
சில்லம் 2 | cillam, n. prob. šithila. [T. cilla.] 1. Shivers, fragments, small pieces; சிறுதுண்டு. (J.) 2. Extreme or pressing necessity, urgent straits; |
சில்லம்பாய் | cillam-pāy, n. <>சிலலம்2 +. worn-out mat; கிழிந்த பாய். (யாழ். அக.) |
சில்லர் | cillar, n. perh. bhilla. Hunters; வேடர். (சது.) |
சில்லறை | cillaṟai, n. <>சில்1 + அறு2-. cf. chidra. 1. [T. cillara, K. cillaṟe, Tu. cillare.] Things scattered here and there in small quantities, small quantities or amounts, sundries ; சிதறியவை. (w.) 2. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Remainder, surplus,balance; 3. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Fractional quantities over and above a round sum, odd; 4. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Change, as of a rupee; 5. [T. cillara, K. cillaṟa, Tu. cillare.] Trifling, insignificant matter; 6. Woman's small ear -ornament. See காதுச்சில்லறை. Loc. 7. Petty, annoying business; 8. Trouble from thieves; 9. Death from malignant diseases; |
சில்லறைக்கடை | cillaṟai-k-kaṭai, n. <>சில்றை +. 1. Shop dealing in miscellaneous things on a small scale; சிறிதளவாக வியாபாரஞ் செய்யுங் கடை. 2. Exchange stall; |
சில்லறைக்கணக்கு | cillaṟai-k-kaṇakku, n. <>id. +. (w.) 1. Small unaccounted sums; விவரம் விளங்காத சிறு தொகைகள். 2. Sundry items promiscuously arranged in account; |
சில்லறைக்காசு | cillaṟai-k-kācu, n. <>id. +. 1. Small money change; சில்லறையாயுள்ள தொகை. 2. Petty bribe; |
சில்லறைக்குடி | cillaṟai-k-kuṭi, n. <>id. +. Ryots who hold small holdings; petty ryots அற்பமாசப் பயிரிட்டு வாழுங் குடிகள். (R. T.) |
சில்லறைகூடுதல் | cillaṟai-kūṭutal, n. <>id. +. (R. T.) 1. Sundry items; பலவகைச் சிறு வருமானங்கள். 2. An extra tax imposed by the Muhammadan Government in Tanjore; |
சில்லறைதருமகர்ச்சு | cillaṟai-tarumakarccu, n. <>id. +. Petty expenditure for charitable purposes; தருமகாரியங்களில் ஏற்படும் சிறு செலவுகள். (R. T.) |
சில்லறைதீர் - த்தல் | cillaṟai-tīr-, v. intr. <>id. +. To settle outstandings or debts; நிலுவை கடன்முதலியவற்றை முடிவுசெய்தல். Loc. |
சில்லறைப்புத்தி | cillaṟai-p-putti, n. <>id. +. 1. Silliness; mean-mindedness; அற்பத்தனம். 2. Shallow wit; 3. Adultery; |
சில்லறையாட்கள் | cillaṟai-y-āṭkaḷ, n. <>id. +. (w.) 1. Unimportant persons, bystanders; முக்கியரல்லாதவர். 2. Troublesome people; |
சில்லா | cillā, n. <>U. zillā. District. See ஜில்லா. . |
சில்லாக்கோல்பாய்ச்சு - தல் | cillā-k-kōl-pāyccu-, v. tr. <>T. jilla +. To punish a person by making him sit with his hands across the knees and with a stick thrust between, making it impossible for him to move; முழங்கால்களுக்குள் இருகைகளையும் விட்டு அவற்றை நிலத்திற் பதியவைத்து அம்முழங்கால்கைகளினிடையே கோலைவிட்டு இறுக்கி அசையாதிருக்கும்படி குற்றவாளியைத் தண்டித்தல். Loc. |
சில்லாங்குச்சி | cillāṅ-kucci, n. <>சில்1 +. Game of tipcat; சிட்டிப்புள். Loc. |
சில்லாட்டு | cil-l-āṭṭu,, n. <>id. +. See சில்லறை. (J.) . |
சில்லாட்டை | cil-l-āṭṭai, n. <>id. + ஆடை. Fibrous covering around the top of palms. See பன்னாடை. Loc. . |
சில்லாடை | cil-l-āṭai, n. <>id. +. See சில்லாட்டை. Loc. . |
சில்லாவலி | cillāvali, n. prob. T. cilla+ T. hāvaḷi. Petty infructuous disturbance; வீண்கலகம். Loc. |