Word |
English & Tamil Meaning |
---|---|
சிலந்திநாயகம் | cilanti-nāyakam, n. <>granthi +. A plant. See கிரந்திநாயகம். (மூ. அ.) . |
சிலந்தியரிசி | cilanti-y-arici, n. <>சிலந்தி2 +. 1. Edible sedge. See பூங்கோரை. (w.) . 2. A kind of weed; |
சிலப்பதிகாரம் | cilappatikāram, n. <>சிலம்பு + அதிகாரம். An ancient epic poem by iḷaṅkōv-aṭikaḷ dealing with the story of kōvalaṉ and Kaṇṇaki, one of paca-kāviyam, q.v.; பஞ்ச காவியத்து ளொன்றும் இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றதும் கோவலன் கண்ணகிகளின் கதையைக் கூறுவதுமாகிய ஒரு பழைய காப்பியம். |
சிலம் | cilam, n. cf. šilā. Rock-salt; இந்துப்பு. (w.) |
சிலம்பக்காரன் | cilampa-k-kāraṉ, n. <>சிலம்பம் +. Person clever in the use of quarterstaff; சிலம்பவித்தை வல்லவன். |
சிலம்பக்கூடம் | cilampa-k-kūṭam, n. <>id. +. Palaestra, fencing school; சிலம்பம் பயிலுமிடம். (w.) |
சிலம்பங்கட்டு - தல் | cilampaṅ-kaṭṭu-, v. intr. <>id. +. To brandish quarterstaff in the art of fencing; சிலம்பவித்தையில் கழி முதலியவற்றை வீசுதல். (w.) |
சிலம்பங்காட்டு - தல் | cilampaṅ-kāṭṭu-, v. intr. <>id. +. Lit., to brandish staff in fencing. [சிலம்பவித்தை காட்டுதல்] 1. To menace, threaten; 2. To pretend to be active in the accomplishment of a difficult task; |
சிலம்பம் | cilampam, n. cf. சிலமம். [M. cilambam.] 1. Practice of the art of using quarterstaff, fencing; கழிவீசுதல் முதலிய படைக்கலப்பயிற்சி. (பதார்த்த.1294.) 2. Trick, stratagem; |
சிலம்பம்பண்ணு - தல் | cilampam-paṇṇu-, v. intr. <>சிலம்பம் +. 1. See சிலம்பமாடு-. . 2. See சிலம்பங்காட்டு-. Loc. |
சிலம்பமாடு - தல் | cilampam-āṭu-, v. intr. <>id. +. To fence, brandish, parry with quarterstaff; சிலம்பம் விளையாடுதல். (J.) |
சிலம்பல் | cilampal, n. <>சிலம்பு-. 1. Sound of a lute; யாழினோசை. (பிங்.) 2. A vulgar chatterbox, chatterer; |
சிலம்பன் | cilampaṉ, n. <>சிலம்பு. 1. Chief of a hilly tract; குறிஞ்சித்தலைவன். அயந்திகழ் சிலம்ப (ஐங்குறு. 264). 2. Skanda, as Lord of the hilly tract; 3. The freshet in the river Kāvēri, as in the month of Cittirai; |
சிலம்பாறு | cilampāṟu, n. <>id. + ஆறு. The sacred stream of the Aḻakar hills, in Madura district; மதுரை ஜில்லாவில் அழகர்மலையில் உற்பத்தியாகுஞ் சிற்றாறு. நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை (சிலப்.11, 108). |
சிலம்பி | cilampi, n. Spider; சிலந்தி. சிலம்பி வானூல் வலந்த மருங்கில் (பெரும்பாண். 236). |
சிலம்பு 1 - தல் | cilampu-, 5 v. intr. [M. cilambu.] 1. To sound, make a tinkling noise; ஒலித்தல். சீரார் ஞெகிழஞ் சிலம்ப (கலித். 90). 2. To echo, ring, resound; |
சிலம்பு 2 | cilampu, n. <>சிலம்பு-. 1. Sound, noise, resonance, buzz; ஒலி. (சூடா.) 2. [M. cilambu.] Tinkling anklets worn by women; 3. Oblong hollow ring of brass filled with pebbles and shaken before an idol in worship; etc; 4. Mountain 5. Mountain slope; 6. Mountain cave, cavern; |
சிலம்புகழிநோன்பு | cilampu-kaḻi-nōṉpu, n. <>சிலம்பு +. Ancient ceremony preliminary to marriage, probably consisting in removing the anklets of a bride; மணவினைக்குமுன் பெண்ணிற்கு நடத்தும் சிலம்புகழற்றுதலாகிய சடங்குவகை. (ஐங்குறு. 399, உரை.) |
சிலம்புகூறல் | cilampu-kūṟal, n. <>id. +. Story of Kōvalaṉ selling the anklet; கோவலன் சிலம்புவிற்ற கதை. (யாழ். அக.) |
சிலம்புரி | cilampuri, n. A kind of long-cloth; ஒருவகைச் சீமைத்துணி. Loc. |
சிலமம் | cilamam, n. <>šrama. See சிலம்பம், 1, 2. சிலமத்திலே காரியம் பார்க்க. (J.) |
சிலமன் | cilamaṉ, n. <>சிலம்பு-. Indication by noise, stir, etc.; சாடை. அவர் வந்த சிலமனில்லை. (J.) |
சிலமான்கல் | cilamāṉ-kal, n. <>U.sulaimān +. Agate, a variegated form of silica; ஒருவகை விலையுயர்ந்த கல். (M. M.) |