Word |
English & Tamil Meaning |
---|---|
சிலமி | cilami, n. <>சிலமம். 1. See சிலம்பக்காரன். (சங். அக.) . 2. Bully, blusterer; |
சிலர் | cilar, n. <>சின்-மை. [M cilar.] Some, a few persons, opp. to palar சிலபேர். நோற்பார் சிலர் பலர் நோலாதவர் (குறள், 270) |
சிலவங்கம் | cila-vaṅkam, n. perh. gila + aṅga. Fish bone; மீனெலும்பு (யாழ். அக.) |
சிலவர் | cilavar, n. <>சின்-மை. 1. See சிலர். அழுதனர் சிலவர் (கம்பரா. திருவடி. 4). . 2. cf. சில்லர். People of the desert tract; 3. Chiefs of the desert tract; 4. Hunters; |
சிலவெதுப்பு | cila-vetuppu, n. A disease of cattle; மாட்டுநோய்வகை. (மாட்டுவா. 156.) |
சிலாக்கியம் | cilākkiyam, n. <>šlāghya. 1. That which is commendable, praiseworthy; மெச்சத்தக்கது. 2. That which is excellent, good; 3. Fame, renown; 4. Privilege; |
சிலாக்கியன் | cilākkiyaṉ, n. <>id. Praiseworthy, distinguished person; புகழ்தற்குரியவன். (w.) |
சிலாகி - த்தல் | cilāki-, 11 v. tr. <>šlāgh. To praise, commend; புகழ்தல். சிலாகிக்குமாறு . . . கொள்ளுந் திருவுரு வெல்லாம் (அஷ்டப். திருவரங். மா. 76). |
சிலாகை 1 | cilākai, n. <>šlāghā. Praise commendation; புகழ்ச்சி. சிலாகை குணநிபந்தனம் (திவ். பெரியதி. 1, 1, 9, வ்யா.). |
சிலாகை 2 | cilākai, n. See சலாகை. (w.) . |
சிலாகை 3 | cilākai, n. 1. A mineral poison; தொட்டிப்பாஷாணம். (சங். அக.) 2. A blue stone; |
சிலாசத்து | cilācattu, n <>šilā-jatu. 1. An inferior mineral, one of seven upa-tātu, q. v.; எழுவகை உபதாதுக்களில் ஒன்றாகிய உலோகவகை. (பதார்த்த. 1130.) 2. Bitumen, as rock-exudation, storax, stone-lac; 3. Foliated crystallized gypsum. See கர்ப்பூரசிலாசத்து. (மூ.அ.) |
சிலாசாதனம் | cilā-cātaṉam, n. See சிலாசாஸனம். . |
சிலாசாரம் | cilā-cāram, n. <>šilā + sāra. Iron, hard as rock; [கல்லைப்போன்ற வன்மையுடையது] இரும்பு. (மூ. அ.) |
சிலாசாஸனம் | cilā-cāsaṉam, n. <>šilā + šāsana. Stone inscription; தானமுதலியவற்றைக் குறித்து வரையப்படும் கல்வெட்டு. |
சிலாசிலாவாக | cilā-cilā-v-āka, adv. <>சில +. Little by little; கொஞ்சங்கொஞ்சமாக. தான் வாங்கிய கடனைச் சிலாசிலாவாகக் கொடுக்கிறான். Madr. |
சிலாஞ்சனம் | cilācaṉam, n. prob. šilā-.jana. A blue stone, lapis-lazuli; நீலமணிவகை. (w.) |
சிலாத்துமசம் | cilattumacam, n. <>šilātma-ja. Iron, as born of stone; [கல்லிற் பிறந்தது] இரும்பு. (யாழ். அக.) |
சிலாதரன் | cilā-taraṉ, n. <>šilāda. See சிலாதன். சிலாதரன் புதல்வன் சொல்£ன். (சிவரக. வில்வவன. 30). |
சிலாதலம் | cilā-talam, n. <>šilā +. 1. Rock; பாறை. சிலாதலத்தின் மேலிருந்த மந்தி (திவ். இயற். 3, 58). 2. A raised stone-paved seat; |
சிலாதன் | cilātaṉ, n. šilāda. The father of Nandi-dēva; நந்திதேவர் பிதா. தேக்கு மன்பிற்சிலாதனற் செம்மலை (கந்தபு. அயனைச்சிறைநீககு. 8). |
சிலாதிக்குமரி | cilāti-k-kumari, n. perh. šilā+ādi+. A mineral poison; கவுரிபாஷாணம். (யாழ். அக.) |
சிலாதைலம் | cilā-tailam, n. <>id. + taila. Bitumen, as exuding from rocks; [பாறையில் உண்டாந் தைலம்] மண்தைலம். (பைஷஜ. 3) |
சிலாந்தி | cilānti, n. cf. jīvantī. Gulancha. See சீந்தில். (மலை.) . |
சிலாநஞ்சு | cilā-nacu, n. <>šilā +. Rockalum; கன்மதம். (யாழ். அக.) |
சிலாநாகக்கல் | cilā-nāka-k-kal, n. A kind of stone; சூடாலைக்கல். (w.) |
சிலாநாகம் | cilā-nākam, n. See சிலாநாகக்கல். (w.) . |
சிலாப்பி | cilāppi, n. <>சிலாப்பு-. Idler, one who whiles away his time in idleness; கழப்புவோன். (J.) |
சிலாப்பு - தல் | cilāppu-, 5 v. intr. (J.) 1. To idle away one's time; கழப்புதல். 2. To profess, pretend; |
சிலாப்புட்டி | cilā-p-puṭṭi, n. prob. சலம்1 + புட்டி. Leather bag or bucket for baling water; நீரிறைக்க உதவும் தோற்பை அல்லது இறைகூடை. (R. T.) |