Word |
English & Tamil Meaning |
---|---|
சிலேட்டுமசூலை | cilēṭṭuma-cūlai, n. <>id. + . Colic or gout caused by excess of phlegm; சூலைநோய்வகை. (சீவரட்.) |
சிலேட்டுமநடத்தல் | cilēṭṭuma-naṭattal, n. <>id. + . 1. Rattle in the throat due to phlegm; தொண்டையிற் கபங்கடைகை. 2. Low pulse, as of a dying person; |
சிலேட்டுமநாடி | cilēṭṭuma-nāṭi, n. <>id. + nādi Pulse indicating the condition of the phlegmatic humour in the body; சிலேட்டும நிலையைக் குறிக்கும் நாடி. |
சிலேட்டுமபித்தசூலை | cilēṭṭuma-pitta-cūlai, n. <>id. + . See. சிலேட்டுமசூலை. (W.) . |
சிலேட்டுமம் | cilēṭṭumam, n. <>šlēṣman. Phlegm, phlegmatic humour, one of the three humours of the body; சரீரத்திலுள்ள கபக்கூறு. |
சிலேட்டுமவாதக்கிராணி | cilēṭṭuma-vāta-k-kirāṇi, n. <>id. + . Diarrhoea from phlegm, etc.; கிராணிவகை. (W.) |
சிலேட்டுமாதிசாரம் | cilēṭṭumāticāram, n. <>id. + atisāra. Diarrhoea of a virulent type caused by phlegm; அதிராரவகை. (W.) |
சிலேடகம் | cilēṭakam, n. prod. sleṣmān- laka. Pellitory root. See. அக்கரகாரம். (மலை.) . |
சிலேடி - த்தல் | cilēṭi-, 11 v. intr. <>šlēṣa. To speak ambiguously; to play upon words; இருபொருள்படப் பேசுதல். (W.) |
சிலேடை | cilēṭai, n. <>šlēṣa. 1. (Rhet) Paronomasia, figure of speech in which a word or phrase admits of two or more interpretations, of two kinds, viz., cem-moḻi-c-cilēṭai, piri-moḻi-c-cilēṭai; piri-moli-c-ciletan செம்மொழிச்சிலேடை பிரிமொழிச்சிலேடை என்ற இருபிரிவுடையதாய் ஒருவடிவாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும் அணி. (தண்டி.75.) 2. Pleasing combination of words; |
சிலேதம் | cilētam, n. Red Indian laburnum; See. செம்முருங்கை. (மலை.) . |
சிலேபி | cilēpi, n. <>U. jilēbī. A sweetmeat . See. ஜிலேபி. . |
சிலேபிகர் | cilēpikar, n. <>šrēṣṭhika. Corr. of சிலெட்டிகர். (அக.நி.) |
சிலேபியர் | cilēpiyar, n. Pl. of சிலேட்டி. corr. of சிலேட்டியர். (சது.) |
சிலேயம் | cilēyam, n. <>šilēya. Anything hard like a stone; கற்போலக் கடினமாயிருப்பது. (சங்.அக.) |
சிலேற்பனம் | cilēṟpaṉam, n. <>šlēṣman. 1. see. சிலேட்டுமம். . 2. Short breaths of a dying person; death-rattle; |
சிலேற்பனை | cilēṟpaṉai, n. <>id. See. சிலேற்பனம். . |
சிலேஷ்மக்காய்ச்சல் | cilēṣma-k-kāyccal, n. <>id. + . Fever caused by excess of phlegm; கபஜ்வரம். (W.) |
சிலேஷ்மகோபம் | cilēṣma-kōpam, n. <>id. + . Predominance of phlegmatic humour in the constitution; சரீரத்தில் சிலேட்டுமப்பகுதி அதிகப்படுகை. (சீவரட்.9.) |
சிலேஷ்மதிமிரம் | cilēṣma-timiram, n. <>id. + . A kind of eye-disease; கண்ணோய்வகை. (சீவரட்.253.) |
சிலேஷ்மம் | cilēṣmam, n. See. சிலேட்டுமம். . |
சிலேஷை | cilēṣai, n. See. சிலேடை. . |
சிலை 1 - த்தல் | cilai-, 11. v. intr. 1. [K. kele.] 1. To Sound, resound; ஒலித்தல். காவலர்கொடுக்கோடு சிலைப்ப (பெருங்.உஞ்சைக்.58, 25). 2. To roar bellow; 3. To twang, as musical instrument; 4. To beat, as a drum; 5. To rage; to be angry; |
சிலை 2 - த்தல் | cilai-, 11. v. intr. ct இலை-. To retreat; பின்னிடுதல். செருச்சிலையா மன்னர் (பு.வெ.1, 16). |
சிலை 3 | cilai, n. <>சிலை-. 1. Sound, roar, bellow, twang; முழக்கம். கடுஞ்சிலை கழறி (பதிற்றுப்.81. 4). 2. Bow; 3. Sagittarius of zodiac; 4. The month Mārkaḻi; 5. The 19th naksalra. See முலம் (சூடா.) 6. Rainbow; 7. Lustre, light; 8. Tail; |
சிலை 4 | cilai, n. <>šilā. 1. Stone rock; கல் (பிங்.) 2. Hill, mountain; 3. Horizontal stone for macerating spices. See அம்மி. தரைத்தடஞ் சிலையதாக (கந்தபு. தாரகன்வதை. 48). 4. Apothecary's stone-mortar. See கலுவம். இரதமாங் கொருசிலையிலிட்டு (கந்தபு. மார்க்கண். 132). 5. Statue, idol; 6. See சிலைவாகை. வணங்குசிலைச் சாபம் (பெருங். மகத. 20, 8). 7. A mineral poison; 8. A mineral poison; |