Word |
English & Tamil Meaning |
---|---|
சிவஞானபோதம் | civa-āṉa-pōtam, n. <>id. +. A text-book of the šaiva siddhānta philosophy by Mey-kaṇṭa-tēvar, said to be a translation of twelve verses found in the sanskrit Rauravāgama, the basis of twelve of the fourteen text-books, one of 14 See mey-kaṇṭacāttiram, q.v.; வடமொழியிலுள்ள ரௌரவாகமத்தினின்று தமிழ்மொழியில் மெய்கண்ட தேவரால் பெயர்க்கப்பெற்றதும். மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றும், அவற்றுள் பன்னிரண்டு சாத்திரங்களுக்கு மூலமாயுள்ளதுமாகிய சைவசித்தாந்த சாத்திரம். |
சிவஞானம் | civa-āṉam, n. <>id. +. knowledge of God; பதியுணர்வு. சிவ ஞானந் தனக்கு மேலாம் (சி.சி.2, 2). |
சிவஞானமுனிவர் | civa-āṉa-muṉivar, n. <>id. +. A celebrated ascetic of the Tiru-v-āvaṭutuṟai mutt, 18th c. (died 1785 A. D.), author of many minor poems, the first part of Kāci-p-pūrāṇam, some polemic treatises and commentaries on the pāyiram and the 1st Sūtra of Tolkāppiyam, civa- சிவஞானபோதத்திற்குத் திராவிடமாபாடியம் என்னும் பேருரை செய்தவரும், சிவஞான சித்தியார் தொல்காப்பியப்பாயிரம் முதற்சூத்திரம் முதலியவற்றிற்கு உரைவகுத்துவரும், காஞ்சிப்புராணம் முதற் காண்டத்தின் ஆசிரியரும் சிவசமவாத மறுப்பு முதலிய கண்டன நூல்கள் எழுதிவரும் 18-ம் |
சிவஞானி | civa-āṉi, n. <>id. +. šaiva saint, as one who has obtained knowledge of God; சிவஞானம் பெற்றோன். |
சிவணு - தல் | civaṇu-, 5 v. intr. 1.To make friends; நட்புக்கொள்ளுதல். தன்னொடு சிவணிய வேனோர் (தொல்.பொ.27). 2. To go with; 3. To hold intimate intercourse, to show intimacy; 1. To approach; 2. To resemble; 3. To receive; |
சிவத்ததாசி | civatti-tāci, n. (மலை.) 1. See. சிவந்தவேசை. . 2. Tree cotton. See. செம்பருத்தி. |
சிவத்தம் | civattam, n. <>சிவ-. Red Indian laburnum. See. செம்முருங்கை. (மலை.) . |
சிவத்தமுள்ளங்கி | civatta-muḷḷaṅki, n. <>id.+. Chicory. See. காசினிவிரை. . |
சிவத்திறை | civattiṟai, n. <>சிவம்+இறை. See. சிவகத்திறை. சிவகதிக்கிறை யுறையுஞ் சித்தாயதனம் (பேருமந். 620). . |
சிவத்துருமம் | civa-t-turumam, n. <>šiva+druma. Bael tree. See வில்லம் . |
சிவத்துவிசர் | civa-t-tuvicar, n. <>šiva+. Brāhmans who conduct service in Siva temples. See ஆதிசைவர். . |
சிவதடி | civataṭi, n. cf. cirbhaṭī Cucumber. See வெள்ளரி. (மலை.) . |
சிவதத்துவம் | civa-tattuvam, n. <>šiva+. (šaiva.) Sphere or region of knowledge presided over by šiva's āṉa-catti, one of five cuttatattuvam, q.v.; ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்ததத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம் . (சி.போ.பா.2, 2, பக்.139.) |
சிவதரம் | civa-taram, n. <>šiva-tara. That which is highly auspicious; அதிக மங்களமானது. தலைவா நின்னிற் சிவதரமாம் பொருள் வேறின்மையால் (திருக்காளத்.பு.5, 51). |
சிவதரிசனம் | civa-taricaṉam, n. <>šiva+. (šaiva.) Spiritual experience of the soul in which it understands its own limitations and perceives the Divine wisdom which, of its own accord, bestows grace, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்துள் தனது சிறுமையையும் தன்முயற்சியாலன்றித் தனக்கருள் புரிந்த இறைவனது பெருமையையும் தெளிய உணர்ந்துகொள்ளுதலாகிய ஆன்மானுபவநிலை. (சிவப்.கட்.) |
சிவதருமம் | civa-tarumam, n. <>šiva-dharma. 1. A secondary purāṇa, one of 18 upapurāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. 2. See சிவபுண்ணியம். (சிவதரு. சிவதரும. 1, உரை.) |
சிவதருமிணி | civa-tarumiṇi, n. <>šivadharmiṇī. (Saiva.) A way of religious initiation accompanied with the removal of hair-tuft which is believed to represent the obscuring principle, a kind of capīca-tīṭcai, q.v. முத்திகாமிகட்குத் திரோதானத்திருபமாகிய சிகாச்சேதத்தோடு செய்யுஞ் சபீசதீட்சைவகை. (சைவச. ஆசாரி.62, உரை.) |
சிவதருமோத்தரம் | civa-tarumōttaram, n. <>šiva-dharmōttara. An Agama on šaiva Dharma translated from sanskrit in Tamil verse by Maṟaiāṉa-campantar; மறைஞானசம்பந்தரால் வடமொழியினின்று மொழிபெயர்க்கப் பெற்ற ஒரு சைவ தருமநூல். |
சிவதலம் | civa-talam, n. <>šiva+. Place or shrine sacred to Siva; சிவபிரான் கோயில் கொண்ட இடம். |