Word |
English & Tamil Meaning |
---|---|
சிவபண்டாரி | civa-paṇṭāri, n. <>šiva+. 1. Treasurer of a saiva temple; சிவாலயப் பொக்கிஷக்காரன். சிவபண்டாரிகள் வசமும் (S. I. I. I, 140). 2. Store-keeper of a Siva temple; |
சிவபதம் | civa-patam, n. <>id.+. šiva's plane, comprising four states of bliss, viz., tāṉ-āḷ-ulakiruttal, taṉ-Pāl-iruttal, tāṉ-āmpatam-peṟal, tāṉ-ākutal; சிவபத்தர்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தானாளுலகிருத்தல், தன்பாலிருத்தல், தானாம்பதம்பெறல், தானாகுதல் என்ற நால்வகைச் சிவபதவி. (பிங்.) செம்மையேயாய சிவபத மளித்த செல்வமே (திருவாச.37, 3). |
சிவபாத்தியன் | civa-pāttiyān, n. <>id.+ pādya. šaiva devotee, as attached to the feet of šiva; சிவபத்தன். திருவாதவூர்ச் சிவபாத்தியன் (பதினொ.கோயிற்றிருப்பண்.58.) |
சிவபிரான் | civa-pirāṉ, n. <>id.+. Lord šiva; சிவபெருமான். முனிவர் நாகருஞ் சென்று காணரிய சிவபிரானை (சேதுபு.நைமிசா.20). |
சிவபீசம் | civa-pīcam, n. <>šiva-bīja. Quick-silver; பாதரசம். (சங்.அக.) |
சிவபுண்ணியத்தெளிவு | civa-puṇṇiya-t-teḷivu, n. <>šiva+. A treatise on šaiva dharma attributed to Umāpati-civācāriyar, 13th c.; உமாபதிசிவாசாரியர் இயற்றியதாகக் கருதப்படும் சைவ தருமநூல். |
சிவபுண்ணியம் | civa-puṇṇiyam, n. <>id.+. Meritorious acts done in reference to šiva as the supreme Being; சிவனே முழுமுதற்கடவுளெனக்கொண்டு அக்கடவுளுவப்பச் செய்யும் நற்கரு மங்கள். (சி. போ. பா. 8, 1, பக். 356.) |
சிவபுரம் | civa-puram, n. <>id.+. šiva's abode; சிவலோகம்.பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும். (திருவாச.19, 3). |
சிவபுராணம் | civa-purāṇam, n. <>id.+. 1. Ten of the eighteen chief Purāṇas, viz., Caivam, paviṭiyam, Mārkkaṇṭam, Iliṅkam, kāntam, varākam, vāmaṉam, maccam, Kūrmam, piramāṇṭam ; பதினெண்புராணத்துள் சைவம், பவிடியம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் என்ற பத்துப் புராணங்கள். (கந்தபு.பாயி.54.) 2. A poem in Tiru-vācakam by Maṇikka-vācakar; |
சிவபூசை | civa-pucai, n. <>id.+. Worship of šiva, usually ceremonial; விதிமுறை செய்யும் சிவ வழிபாடு. சிவபூசையின் பேற்றினால் (சிவரக. தேவிநாட்டிய.24). |
சிவபெருமான் | civa-perumāṉ, n. <>id.+. See சிவபிரான். செல்வமே சிவபெருமானே (திருவாச. 37,1). . |
சிவபோகம் | civa-pōkam, id. +. (Saiva.) Spiritual experience of the soul in which it merges its individuality in šiva, the supreme Being, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்துள் ஒன்றாய்த் தன்னையிழந்து இறைவன் மயமான ஆன்மாவின் ஆனந்தானுபவநிலை. (உண்மை.நெறி.6.) |
சிவபோளம் | civa-pōḷam, n. <>id.+. Myrrh, s. tr., Balsamodendron myrrha; வெள்ளைப்போளம். |
சிவம் | civam, n. <>šiva. 1. Goodness, prosperity, auspiciousness; நன்மை. அந்தமில்லாச் சிவஞ் செய்கின்றான் (திருநூற்.17). 2. Final deliverance; 3. Highest state of God in which He exists as pure Intellingence; 4. See சிவதத்துவம். 5. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 6. A measure of capacity=8 paṭi; |
சிவமகாபுராணம் | civa-makā-purāṇam, n. <>id. +. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத்தொன்று. |
சிவமது | civamatu, n. Species of tick-trefoil. See புள்ளடி. (மலை.) . |
சிவமயம் | civa-mayam, n. <>šiva-maya. 1. šiva in essence; சிவமாந்தன்மை. அவர் சிவமயமேயாகலின் (சி.போ.ப.அவை.பக்.4). 2. An in vocation meaning' All to the glory of šiva; used by šaivites at the head of a letter or document or over the title of a book; |
சிவமரம் | civa-maram, n. prob. šiva +. 1. Bridal-couch plant. See வெள்ளைக்கடம்பு. . 2. Whip tree. See சவுக்கு. |
சிவமல்லி | civa-malli, n. prob. id.+ mallikā. Taper-pointed mountain ebony. See கொக்கு மந்தாரை. (மலை.) . |
சிவயோகம் | civa-yōkam, n. <>id. +. (šaiva.) Spiritual experience of the soul in which it realises the omnitude of Siva and sets itself in tune with Him without losing its individuality, one of taca-kāriyam , q.v.; தசகாரியத்துள் ஒன்றாய்த் தன்னை இழவாது இறைவனது எல்லாமாந் தன்மையை உணர்ந்து அவனோடு இசைந்து நிற்கும் ஆன்மாவின் அனுபவநிலை. (உண்மைநெறி.5.) |
சிவயோகி 1 | civa-yōki, n. <>id. +. Yogins who by meditating on šiva have attained salvation; சிவயோகத்தால் முத்தியடைந்தோர். சிவயோகிகளே காலத்தை வென்றிருப்பார். (கந்தரலங்.26). |