Word |
English & Tamil Meaning |
---|---|
சிவயோகி 2 | civa-yōki, n. cf. šiva-yōgin=jaṭila. Sweet flag. See வசம்பு. (பாலவா. 317.) . |
சிவரகசியம் | civa-rakaciyam, n. <>šivarahasya. A treatise in Tamil verse dealing with the importance of šiva worship and illustrating it by means of stories, by Oppilāmaṇi-tēcikar, 1718 A. D.; 18-ஆம் நூற்றாண்டின் தொடகத்தில் ஒப்பிலாமணிதேசிகரால் இயற்றப்பட்டதும் சிவபூசைமுதலியவற்றின் பெருமைகளை இதிகாச முகத்தாற் கூறுவதுமான செய்யுணூல். |
சிவராத்திரி | civa-rāttiri, n. <>šiva-rātri, A popular religious observance in honour of šiva on the 14th titi of the dark fortnight of the month of Māci, when šaiva devotees perform pūjas several times at nighty without having any sleep; சிவபத்தர்கள் நாள்முழுதும் பட்டினியிருந்து இரவெலாம் கண்விழித்துச் சிவனைப்பலகாலும் அர்ச்சித்து மாசிமாதத்துக் கிருஷ்ணசதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம். சிவராத்திரிப்போது துயிலோமென்ற விரதியரும் (தாயு.பரி.3). |
சிவரூபம் | civa-rūpam, n. šiva + . <>šaiva.) Spiritual experience of the soul in which it clearly understands that šiva, by His five gracious functions, cleanses it of malam and bestows salvation, one of taca-kāriyam , q.v.; தசகாரியத்துள்.ஒன்றாய் 'அருள்மயமான பஞ்சகிருத்தியத்தால் தன்னைப் பந்தித்த மலங்களை நீக்கி இறைவன் முத்தியளிப்போன்' என்றுணர்ந்துகொள்ளும் ஆன்மாவின் அனுபவநிலை. (உண்மைநெறி.3.) |
சிவல் | cival, n. <>சிவ-. 1. Indian partridge, Ortygorius ponticerianus; கவுதாரி. (திவா.) 2. Quail, Ooturnin coromandelicus; 3. Laburnum-leaved rattlewort. See கிலுகிலுப்பை, 2. (மலை.) 4. Redsoil; |
சிவலிங்கம் | civa-liṅkam, n. <>šiva+. Cylindrical stone rounded off at the top, worshipped by šaivites as an emblem of šiva; சைவர் வழிபடும் இலிங்கவடிவான சிவனுருவம். |
சிவலை | civalai, n. <>சிவ-. 1. Reddish animal, as a bull; செந்நிறமான விலங்கு. colloq. 2. Person of light complexion; 3. That which is red; |
சிவலோகச்சேவகன் | civa-lōka-c-cēvakaṉ, n. Load-stone; காந்தம். (R.) |
சிவலோகம் | civa-lōkam, n. <>id. Kailāsa, as šiva's abode; கைலாசம். அப் பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த வப்பார் சடையப்பன் (திருவாச.8. 11). |
சிவவல்லபம் | civa-vallapam, n. <>šiva+. (சங். அக.) 1. Madar எருக்கு. 2. A species of jambolona; Chrysanthemum; |
சிவவல்லி | civa-valli, n. <>id. +. A kind of climber; கோவைவகை. (சங்.அக.) |
சிவவாக்கியம் | civa-vākkiyam, n. <>šiva-vākya. A collection of mystic verses ascribed to civa-vākkiyar; சிவவாக்கியர் இயற்றியதாகக் கூறப்படும் செய்யுணூல். |
சிவவாக்கியர் | civa-vākkiyar, n. <>id. A šaiva devotee; ஒரு சிவஞானி. |
சிவவிந்து | civa-vintu, n. <>šiva+. See சிவபீசம். (சங்.அக.) . |
சிவவீசம் | civa-vīcam, n. <>id. + bīja. See சிவபீசம். . |
சிவவேடம் | civa-vēṭam, n. <>id. +. Distinctive external marks of a šaiva consisting of rudrākṣa beads and sacred ashes; உருத்திராக்க முதலிய சிவசின்னந் தரித்த கோலம். சிவவேடந்தரித்தவர் (காசிக.பாயி.12). |
சிவளிகை | civaḷikai, n. cf. சிகழிகை. A kind of head-ornament; பெருஞ் சூட்டு. (அக.நி.) |
சிவளிகைக்கச்சு | civaḷikai-k-kaccu, n. Sash tied round the waist over the dress; உடை மேற்கட்டுங் கச்சு. செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால் (திவ்.பெரியதி.8. 1, 7). |
சிவன் 1 | civaṉ, n. <>šiva. 1. One of the great gods, the third of the Hindu triad, whose special function is Destruction; மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள். 2. Title of šaiva devotees; |
சிவன் 2 | civaṉ, n. Cat's-eye, a variety of quartz; வைடூரியம். (மூ.அ.) |
சிவன்வேம்பு | civaṉ-vēmpu, n. See சிவனார்வேம்பு. (W.) . |
சிவனாடல் | civaṉ-āṭal, n. <>சிவன்1+. Dance of šiva, three in number, viz., pāṇṭaraṅkam, koṭu-koṭṭi, kāpālam; பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்று கூறப்படும் சிவபெருமானது நிருத்தமீ. |
சிவனார்கிழங்கு | civaṉār-kiḻaṅku, n. <>id. +. Malabar glory-lily. See கார்த்திகைக்கிழங்கு. (மலை.) . |
சிவனார்பாகல் | civaṉār-pākal, n. <>id. +. 1. A creeper bearing a red fruit. See ஐவிரலி. . 2. A common creeper of the hedges. See கோவை. (மலை.) |