Word |
English & Tamil Meaning |
---|---|
சிவாலயம் | civālayam, n. <>šiva+ālaya. šiva temple; சிவன்கோயில். |
சிவானுபூதி | civāṉupūti, n. <>id. + anbhūti. Mystic union with šiva; சிவனோடு இரண்டறக் கலக்கும் அநுபவம். சிவானுபூதிச்செல்வர் |
சிவிகரம் | civikaram, n. Nutmeg; சாதிக்காய். (மலை.) |
சிவிகாரம் | civikāram, n. corr. of of சுவ்காரம். . |
சிவிகை | civikai, n. <>šibikā 1. Palanquin, covered litter; பல்லக்கு. சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (குறள், 37). 2. Bullockcart; |
சிவிகையார் | civikaiyār, n. <>id. A caste of palanquin-bearers; பல்லக்குச் சுமக்கும் சாதியார். |
சிவிகையார்வழக்கு | civikaiyār-vaḻakku, n. <>சிலிகையார்+. Violent quarrel; பெருஞ்சண்டை. (R). |
சிவிங்கி | civiṅki, n. [T. K. sivaṅgi, M. civiṅṅi.] 1. Indian lynx, Felis caracal; ஒரு வகை விலங்கு. 2. Hunting leopard, Felis jubata; 3. A bird; |
சிவிங்கிநாய் | civiṅki-nāy, n. <>சிவிங்கி+. A swift-footed hunting dog; வேகமாய் ஓடக்கூடிய சோணங்கி நாய் (W.) |
சிவிங்கிப்பூனை | civiṅki-p-pūṉai, n. <>id. +. Leopard cat, Felis bengalensis; பூனைவகை |
சிவிட்கு | civiṭku, n. [T. civukku.] Anger; கோபம். புலியினுடைய சிவிட்கும் (திவ்.திருப்பா.23, வ்யா.205). |
சிவிட்கெனல் | civiṭkeṉal, n. Onom. expr. of (a) being impatient; பொறுமையின்மைக் குறிப்பு பின்னையும் உணரக் காணாமையாலே சிவிட்கென்ற உன் மகள் தான் ஊமையோ வென்கிறார்கள் (திவ்.திருப்பா.9, வ்யா.114): (b). (T. civnkkuna) being quick, hasty; |
சிவிடு | civiṭu, n. cf. செவிடு. (யாழ். அக.) 1. A measure of 360 paddy grains ; 360 நெல்பிடிக்கும் அளவு. 2. That which is small; |
சிவியார் | civiyār, n. 1 See சிவிகையார். பரியெங்கே சிவியா ரெங்கே (தண்டலை. சத. 34). . 2. A caste whose profession is fishing; |
சிவிரம் | civiram, n. <>šibira. Camp of an invading king; படையெடுத்த அரசன்தங்கும் பாசறை. |
சிவிறி | civiṟi, n. <>சிவிறு-. 1. [T. sīviri.] 1.Fan விசிறி. (பிங்.) தேயுமிடைப் பாங்கியர்கள் சிவிறி பால் வீசி (குசேலோ. குசே. வைகுந். 58). 2. A kind of syringe, squirt; |
சிவிறு - தல் | civiṟu-, 5 v. intr. 1. To spread as water; பரத்தல். ஊடுறு கமலக் கண்ணீர் திசை தொறுஞ் சிவிறியோட (கம்பரா. மீட்சி. 348). 2.To wave. See விசிறு-. |
சிவீலெனல் | civīl-eṉal, n. Onom expr. of being jealous, envious; பொறாமைக் குறிப்பு. நம்முடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீலென்றிருந்திலை. (ஈடு, 3, 5, 6). |
சிவுகம் | civukam, n. <>cibuka. Chin; மோவாய். (சூடா.) |
சிவேதை 1 | civētai, n. <>švētā. (பிங்.) 1. Square-stalked bindweed, 1. cr., Ipomuea turpethum; செடிவகை. 2. kaus |
சிவேதை 2 | civētai, n. <>jīva-dā. 1. Gulancha. See சீந்தில். (மூ. அ.) . 2. See சிவதை. |
சிவேதை 3 | civētai, n. <>perh. šivētarā. south; தெற்கு. (பிங்.) |
சிவேரெனல் | civēr-eṉal, n. <>சிவ-. Expr. signifying redness; சிவந்திருத்தற்குறிப்பு. Loc. |
சிவை 1 | civai, n <>šivā 1. Parvati; பார்வதி. (பிங்.) பொருவரிய சிவையாகி யனன்தையாய் (கூர்மபு. திருக்கலி. 3). 2. Durga; 3. Jackal; 4. Emblic myrobalan. See நெல்லி. (தைலவ. தைல. 28.) |
சிவை 2 | civai, n <>šiphā Root; வேர். கல்லறச் சிவைக ளுன்றி (இரகு.இரகுகதி.7). |
சிவை 3 | civai, n. perh. jihvā. Nozzle or bellows; உலைமூக்கு. (திவா) சிவையின்வா யென்னச் செந்தீ யுயிர்ப்புறச் சிவந்த மூக்கன் (கம்பரா.கும்பகரு.14). |
சிவோகம்பாவனை | civōkam-pāvaṉai, n. <>šivōham+bhāvauā. Meditation suggesting a mystic union with šiva; சிவன் நான் என்று பாவிக்கிகை. சிவோகம்பாவனையைத் தலைப்பட்டோனாதல் அறிக (சி.போ.சிற்.2, 1, 4, பக்.39). |
சிழகு - தல் | ciḻaku-, 5. v. intr. of. சீழ்கு-. To choke with sobbing; விம்முதல். சிமுகிச் சிமுகியழுதால் (ஈடு, 3, 2, 7). |
சிள்வண்டு | ciḷ-vaṇṭu, n. <>சிள் onom +. Cricket; சுவர்க்கோழி. (M. M. 670.) |
சிள்வீடு | ciḷ-viṭu, n. <>id. + வீடு [M. ciḷoīṭu.] See சிள்வண்டு. சிள்வீடு கறங்குஞ் சேய்நாட்டத்தம். (நற்.252). |
சிள்ளீடு | ciḷḷīṭu, n. <>id. + இடு-. See சிள்வண்டு. (யாழ். அக.) . |
சிள்ளுப்புள்ளெனல் | ciḷḷu-p-puḷ-ḷ-eṉal, n. See சிளுசிளெனல். Colloq. . |