Word |
English & Tamil Meaning |
---|---|
சிற்றிலிழைத்தல் | ciṟṟil-iḻaittal, n. <>சிற்றில்1 +. A play in which girls build toy houses with sand; சிறுமியர் மணல்வீடுகட்டி விளையாடுகை. |
சிற்றிலை | ciṟṟilai, n. <>சிறு-மை + இலை. (மலை.) 1. Purple fleabane. See நெய்ச்சிட்டி. . 2. Crab's-eye. See குன்றிமணி. 3. Chebulic myrobalan. See கடுக்காய். |
சிற்றிலைப்பாலாவி | ciṟṟilai-p-pālāvi, n. <>சிற்றிலை +. A medicinal herb; ஒருவகை மருந்துப்பூடு. (சங்.அக.) |
சிற்றிலைப்பொலவு | ciṟṟilai-p-polavu, n. <>id. + . (L.) 1. Creamy-leaved lancewood, m.tr., Pterospermum suberifolium; மரவகை. 2. Rusty-leaved lancewood, 1. tr., Plerospermum rubiginosum; |
சிற்றிலைமடுக்கு | ciṟṟilai-maṭukku, n. <>id. +. Harpula. See நெய்க்கொட்டை. kāṭar (L.) . |
சிற்றிலைவாகை | ciṟṟilai-vākai, n. <>id. +. Fragrant sirissa. See கருவாகை (L.) . |
சிற்றிற்பருவம் | ciṟṟiṟ-paruvam, n. <>சிற்றில்1 +. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toy houses built by little girls, one of ten; சிறுமியர் இழைத்த மணற் சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பகுதி. |
சிற்றின்பம் | ciṟṟiṉpam, n. <>சிறு-மை + இன்பம். [M. ciṟṟinpam.] 1. Earthly pleasures; இம்மைக்குரிய சுகம். சிற்றின்பம் வெஃகி (குறள், 173). 2. Sensual pleasure, carnal pleasure; |
சிற்றினம் | ciṟṟiṉam, n. <>id. + இனம். Company of low people; நல்லறிவில்லாத தாழ்ந்தோர் சேர்க்கை. செய்ந்நன்றியறிதலுஞ் சிற்றின மின்மையும் (சிறுபாண்.207). |
சிற்றீந்து | ciṟṟīntu, n. <>id. + ஈந்து. [T. ciṭṭītaceṭṭu.] Dwarf wild date-palm, m.sh., Phoenix farinifera; ஈந்துவகை. (பதார்த்த.753.) |
சிற்று - தல் | ciṟṟu-, 5. v. intr. prob. சுற்று-. To be troubled in mind, perplexed; சஞ்சலப் படுதல். மாநிலத் தெவ்வயிர்க்குஞ் சிற்றவேண்டா (திவ்.திருவாய்.9, 1, 7). |
சிற்றுண்டி | ciṟṟuṇṭi, n. <>சிறு-மை- + உண்டி. 1.Pastry, cake; பண்ணிகாரம். (பிங்.) 2. Sweet pastry-ball made of rice or wheat flour; 3. Light refreshment; 4. Abstemious meal; |
சிற்றுணவு | ciṟṟuṇavu, n. <>id. + உணவு. 1. Curry preparations added to give relish to the main food; கறிமுதலியன. பொரிக்குஞ் சிற்றுணவு (திவா.6, 86, ). 2. See சிற்றுண்டி, 1. இனிய சிற்றுண வேதேனு மின்றிநீ வருவாய் கொல்லோ (குசேலோ. குசே. தந்நகர். 275). |
சிற்றுப்புளி | ciṟṟu-p-puḷi, n. <>id. +. A small quantity of tamarind; சிறிதளவான புளி. கறிக்குச் சிற்றுப்புளி சேர்க்கவேண்டும். Nā. |
சிற்றுமரி | ciṟṟumari, n. <>id. + உமரி Coral plant. See உமரி. (W.) . |
சிற்றுயிர் | ciṟṟuyir, n.<> id. + உயிர். 1. Short-lived being; சில்வாழ்நாள்களையுடைய பிராணி. சிற்றுயிர்க் கிரங்கி (திருவாச. 6, 50). 2. Minute insect, animalcule; |
சிற்றுரு | ciṟṟuru, n. <>id. + உரு. 1. Small person or object, miniature; சிறிய உருவமுள்ளது. அண்டங்கள் சிற்றுருவமைந்து (கந்தபு.திருநகரப்.9.) 2. Ornamental pieces appended to the tāli, |
சிற்றுள் | ciṟṟuḷ, n. <>id. + உள். Store-room in a house; உக்கிராண அறை. colloq. |
சிற்றுள்ளான் | ciṟṟuḷḷaṉ, n. <>id. + உள்ளான். Small snipe; உள்ளான் பறவைவகை. |
சிற்றுளி | ciṟṟuḷi, n. <>id. + உளி. [K. kiṭṭuḷi.] Small chisel used for cutting stones; தச்சுக்கருவி வகை. சிற்றுளியாற் கல்லுந் தகரும் (நீதிநெறி.14). |
சிற்றூண் | ciṟṟūṇ, n. <>id. + ஊண். See சிற்றுண்டி. நெய்ச்சூட் டமைந்த சிற்றூண். (பெருங். இலாவாண. 2, 81). . |
சிற்றூர் | ciṟṟūr, n. <>id. + ஊர். (குடா). 1. Small village; சிறிய ஊர். 2. Village in the hilly tracts; |
சிற்றெண் | ciṟṟeṇ, n. <>id. + எண். 1. Fraction; கீழெண். 2. (Pros.) A variety of ampōtaraṅkam consisting of short lines of two feet each 3. A constituent section of paripāṭal; |
சிற்றெல்லை | ciṟṟellai, n. <>id. + எல்லை. (pros.) Minimum number of lines, as in a stanza, opp. to pēr-ellai; அவ்வச்செய்யுட்குரிய அடிகளின் சிறுமை வரையறை; |
சிற்றெலி | ciṟṟeli, n. <>id. + எலி. T. ciṭṭeluka, K. kiṭṭili.] Mouse, species of small rat; சுண்டெலி, Loc |
சிற்றெள் | ciṟṟeḷ, n. <>id. + எள். Gingelly oil plant, small kind of sesamum; எள்வகை. (W.) |
சிற்றெறும்பு | ciṟṟeṟumpu, n. <>id. + எறும்பு. Small red ant, Formica timida; எறும்புவகை.பாற்கடலைச் சிற்றெறும்பு பருகநினைப் பதுபோலும் (சேக்கிழார்.பு.பாயி.9). |