Word |
English & Tamil Meaning |
---|---|
சிறப்பெழுத்து | ciṟappeḻuttu, n. <>id. + எழுத்து. Alphabetic letter peculiar to a language; ஒரு மொழிக்கே சிறப்பாக உரித்தான எழுத்து. (நன்.274.) |
சிறப்பை | ciṟappai, n. A kind of bell or clapper, sometimes made of wood, used to scare away birds or tied to a bullock's neck for identification; மரத்தினாற் செய்யப்பட்டதும், பறவைகளைத் துரத்தவேனும், மாடுகளை அடையாளம் கண்டுபிடிக்கமாறு அவற்றின் கழுத்திற் கட்டுதற்கேனும் உபயோகப்படுவதுமான ஒருவகை மணி. (W.) |
சிறவி | ciṟavi, n. See சிறகி. (பதார்த்த. 899.) . |
சிறவு | ciṟavu, n. <>சிற-. Meritorious deed; சிறந்த செயல். சிறவேசெய்து வழிவந்து (திருவாச.5, 86). |
சிறாங்கணி - த்தல் | ciṟāṅkaṇi-, 11 v. tr. See சிறக்கணி. தோற்றமை தோற்றச் சிறாங்கணித்துப் பார்த்து (திவ். பெருமாள். 6, 3. வ்யா.) . |
சிறாங்கி - த்தல் | ciṟāṅki-, 11. v. tr. <>சிறாங்கை. 1. To reduce to the size of the hollow of one's palm; உள்ளங்கையளவாக்குதல். கண்களைச் சிறாங்கித்துப் பருகலாயிருந்தபடி (திருவிருத்.11, வ்யா.81). 2. To get into one's power of control; 3. To beg, entreat; |
சிறாங்கு | ciṟāṅku, n. <>U. sar-hang. Captain of a ship. See சிராங்கு. . |
சிறாங்கை | ciṟāṅkai, n. <>சிறு-மை+ஆ-+கை See சிறங்கை. எனக்கும் ஒரு சிறாங்கை யிடவல்லி கோளே (திவ். திருமாலை. 19, வ்யா. 72). . |
சிறாப்பு | ciṟāppu, n. Shroff. See சராப்பு. . |
சிறாம்பி - த்தல் | ciṟāmpi, 11 v. tr. To gather up in a mass; ஒரு சேரத் திரட்டுதல். சிறாம்பித் தனுபவிக்கலாயிருக்கை (ஈடு, 6, 9, 2 ஜீ.) . |
சிறாம்பி | ciṟāmpi, n. A loft or platform for keeping watch; காவற்பரண். (J.) |
சிறாம்பு 1 - தல் | ciṟāmpu-, 5 v. intr. prob. சிறு-மை. 1.To shrink, look small; குறுகுதல். சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை (ஈடு, 2, 6, 1). 2. To grow lean, become emaciated; |
சிறாம்பு 2 - தல் | ciṟāmpu-, 5 v. cf. சிறாய்.-intr. -tr. 1. To graze, as a ball when passing; உராய்தல் (W.) 2. To scratch with a splinter or thorn; |
சிறாம்பு | ciṟāmpu, n. <>செறும்பு. Fibrerisings in wood shiver; மரச்சிலும்பு. (W.) |
சிறாய் - த்தல் | ciṟāy-, 11. v. tr. e intr. See சிராய்-. Colloq. . |
சிறாய் | ciṟāy, n. <>சிறு-மை Chip, splinter; மரத்துண்டு. ஒரு சிறாயை விசுவஸித்து (ஈடு, 3, 6, 8). |
சிறாயத்துக்குச்சி | ciṟāyattu-k-kucci, n. <>U. chirāitā <>kirāta-tikta. Himalayan chiretta. See நிலவேம்பு. (யாழ். அக.) . |
சிறார் | ciṟār, n. <>சிறு-மை. Children; சிறுவர். திதியின் சிறாரும் விதியின் மக்களும். (பரிபா.3, 6). |
சிறிக்கி | ciṟikki, n. Sky-blue bindweed. See கொடிக்காக்கட்டான் . |
சிறிசு | ciṟicu, n. <>சிறு-மை. colloq 1. See சிறிது. . 2. Young boy or girl; |
சிறிட்டம் | ciṟiṭṭam, n. cf. šliṣṭa. Bark of the wood-apple; விளாம்பட்டை. (R.) |
சிறிது | ciṟitu, n. <>சிறு-மை. That which is small, trifling or insignificant; அற்பமானது. இறப்பச் சிறிதென்னாது (நாலடி, 99). |
சிறிதுரை - த்தல் | ciṟiturai-, v, tr. <>சிறிது + உரை. To belittle, despise, speak contemptuously or disparagingly of ; இகழ்ந்து பேசுதல். சேர்ந்தாரை யெல்லாஞ் சிறிதுரைத்து (பழ.123). |
சிறிபலம் | ciṟipalam, n. <>šrī-phala. Bael. See வில்வம். (மலை.) . |
சிறியசிந்தையர் | ciṟiya-cintaiyar, n. <>சிறு-மை+. Base petty-minded persons; கிழோர். (சூடா.) |
சிறியத்தினி | ciṟiyattiṉi, n. <>šrīhastinī, Hedge cotton. See வேலிப்பருத்தி. (மலை.) . |
சிறியதகப்பன் | ciṟiya-takappaṉ, n. <>சிறு-மை+. Father's younger brother; mother's younger sister's husband; தந்தைக்கு இளையவன் அல்லது சிறிய தாயின் கணவன். |
சிறியதாய் | ciṟiya-tāy, n. <>id. +. Mother's younger sister; father's younger brother's wife; junior step-mother; தாய்க்கிளையவள். சிற்றப்பன் மனைவி அல்லது இளைய மாற்றாந்தாய். சிறியதாய் சொன்ன திருமொழி (கம்பரா.பாசப்.41). |
சிறியதாயார் | ciṟiya-tāyār, n. See சிறியதாய். . |
சிறியதிருமடல் | ciṟiya-tiru-maṭal, n. <>சிறு-மை+. A poem by Tiru-maṅkai-y-āḻvār forming part of Nālāyira-tivya-p-pirapantam; நாலாயிர திவ்யப் பிரபந்தங்களுள் சேர்ந்ததும் திருமங்கையாழ்வாராற் செய்யப்பட்டதுமான ஒரு பிரபந்தம். |
சிறியதைலம் | ciṟiya-tailam, n. <>id. +. Medicinal oil prepared as occasion requires; அவ்வப்பொழுது காய்ச்சிக்கொள்ளும் மருந்துத் தைலம். (பைஷஜ.7.) |