Word |
English & Tamil Meaning |
---|---|
சிறைக்களம் | ciṟai-k-kaḷam, n. <>சிறை +. See சிறைக்கூடம். வெய்ய சிறைக்களத்துச் சென்றனனே (கந்தபு. மீட்சி. 4). . |
சிறைக்கூடம் | ciṟai-kūṭam, n. <>id. +. Place of captivity, prison-house; காவற்கூடம். Loc. |
சிறைக்கோட்டம் | ciṟai-k-kōṭṭam, n. <>id. +. See சிறைக்கூடம். சிறைக்கோட்டம் விருப்பொடும் புகுந்து (மணி. 19, 43). . |
சிறைகாவல் | ciṟai-kāval, n. <>id. +. physical restraint, confinement, opp. to niṟai-kāval சிறையிலிட்டுக் கக்குங் காப்பு. (இறை. 29, பக். 134.) |
சிறைகொள்ளு - தல் | ciṟai-koḷ, v. tr. <>id. +. To take captive; காவற்கூடத்து அடைக்க வேண்டுப் பிடித்துப்போதல். பெருத்திறல் வேந்தனெம் பெருமாற் சிறைகொள (பெருங். இலாவாண. 1, 51). |
சிறைச்சாலை | ciṟai-c-cālai, n. <>id. +. See சிறைக்கூடம். colloq. . |
சிறைச்சோறு | ciṟai-cōṟu, n. <>id. +. Distributing food to prisoners, a form of charity, one of Muppattiraṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்குஞ் செயல். (திவா.) |
சிறைசெய் - தல் | ciṟai-cey-, v. tr. <>id. +. 1. To imprison, confine, restrain; சிறையில் வைத்தல். ஆயிழை தன்னைச் சிறைசெய் கென்றலும் (மணி. பதி. 79-80). 2. To dam up, as water; |
சிறைத்திமிங்கிலம் | ciṟai-t-timiṅkilam, n. <>id. +. Whale, Balaenoptera indica; திமிங்கிலவகை. |
சிறைத்தீர்வை | ciṟai-t-tīrvai, n. <>id. +. Tax on slaves; அடிமைவரி. (R.) |
சிறைநோய் | ciṟai-nōy, n. <>id. +. Miseries of imprisonment; சிறைத்துன்பம். செறிந்த சிறை நோய் தீர்க்கென் றிறைசொல (மணி. 23, 34). |
சிறைப்படு - தல் | ciṟai-p-paṭu, v. intr. <>id. +. 1. To be imprisoned; to be impounded, as stray cattle; சிறையில் அடைபடுதல். 2. To be enslaved, taken captive to be ensnared, encaged, as birds or animals; 3. To be mislaid; to be forgotten; |
சிறைப்பள்ளி | ciṟai-p-paḷḷi, n. <>id. +. See சிறைக்கூடம். வெஞ்சிறைப் பள்ளியாக (சீவக. 1538). |
சிறைப்பாடு | ciṟai-p-pāṭu, n. <>id.+. 1. Side பக்கம். ஒருசிறைப்பாடு சென்றணைதலும் (மணி. 23,50). 2. Captivity, bondage, confinement; 3. Restraint, hindrance; 4. Being dropped on the ground and lying untouched, as a thing lost; |
சிறைப்புறம் | ciṟai-p-puṟam, n. <>id. +. 1. Secret place ஒதுக்கிடம். ஒற்றிற் றெரியா சிறைப்புறத்து (நீதிநெறி. 32). 2. (Akap.) A hedge-side near a mansion from which a lover can watch unseen what passes between his sweetheart and her maid; 3. Prison-cell; |
சிறைபிடி - த்தல் | ciṟai-piṭi, v. tr. <>id. +. 1. To take captive, enslave; அடிமையாக்குதல். (W.) 2. To take a woman captive, for the purpose of marrying or keeping her; |
சிறைமீள்ளு - தல் | ciṟai-mīḷ-, v. intr. <>id. +. To be freed from slavery; to be released from prison; சிறைநீங்குதல். |
சிறைமீள் - தல் [சிறைமீட்டல்] | ciṟai-mīḷ, v. tr. <>id. +. To rescue from slavery or captivity; சிறையிலிருந்து விடுவித்தல். |
சிறையா | ciṟaiyā, n. Grey mullet, attaining ft. in length, Mugil ocur; மூன்றடிவரை வளரக்கூடிய சாம்பல்நிறமுள்ள கடல்மீன்வகை. |
சிறையெடு - த்தல் | ciṟai-y-eṭu-, v. tr. <>சிறை +. See சிறைபிடி-, 2. . |
சிறைவன் | ciṟaivan, n. <>id. A captive, slave, prisoner; காவற்பட்டவன். தன்னைச் சிறைவனாச் செய்வானுந் தான் (அறநெறி. 67). |
சிறைவீடு | ciṟai-vīṭu, n. <>id. +. Release from prison; சிறையினின்று வெளிவிடுகை. சின்ற வீடு செய்தலும் (மணி. பதி. 80). |
சின் | ciṉ, part. An expletive generally used in poetry; ஒர் அசைச்சொல். காப்பும் பூண்டிசின் (தொல். சொல். 277). |
சின்மதி | ciṉ-mati, n. <>சில்1+. Poor understanding; ஏழைப்புத்தி. பெரிய பேதைமைச் சின்மதிப் பெண்மையால் (கம்பர. சூளா. 12). |
சின்மயம் | ciṉmayam, n. <>cin-maya. Embodiment of pure intelligence; ஞானாகாரம். சின்மய வுள்ளொளியே (பிரபோத. 1, 2). |
சின்மயன் | ciṉmayaṉ, n. <>id. Individual soul or god, as pure intelligence; ஞானரூபியான ஆன்மா மலினமறு சின்மயன் (கைவல். சந். 120). |