Word |
English & Tamil Meaning |
---|---|
சின்முத்திரை | ciṉ-muttirai, n. <>cin-mudrā, Hand-pose assumed by a guru while giving spiritual instruction; உபதேசக் குறியாகச் சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக்காட்டும் ஞானமுத்திரை. மோன ஞானமமைத்த சின்முத்திரைக்கடலே (தாயு. பன்மாலை. 1). |
சின்மை | ciṉmai, n. <>சில்1. 1. Smallness, fewness; சிறுமை. எழுத்தின் சின்மை மூன்றே (தொல். பொ. 358). 2. Coarseness, vulgarity, as of language; 3. Softness, lowness, as of voice; |
சின்ன | ciṉṉa, adj. <>id. [T.K.M. cinna.] 1. Small, little சிறிய. சின்னத்துணி (சீவக. 2929). 2. Inferior, mean, low; 3. Young; |
சின்னக்காசு | ciṉṉa-k-kācu, n. <>சின்ன +. An ancient small coin=1/5 pie; பழைய சிறிய நாணயவகை. (M. M.) |
சின்னக்குறிஞ்சி | ciṉṉa-k-kuṟici, n. <>id. +. A species of conehead. See குறிஞ்சி (L.) . |
சின்னகை | ciṉṉakai, n. <>சில்1 + நகை. Smile; புன்னகை. முளையேர் முறுவன் முகிழ்த்த சின்னகை (பெருங். மகத. 6, 49). |
சின்னச்சம்பா | ciṉṉa-c-campā, n. <>சின்ன +. A variety of campā maturing in four months; நாலுமாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை. |
சின்னச்சலவாதை | ciṉṉa-c-calavātai, n. <>id. +. urination; சிறுநீர்விடுகை. vnl, |
சின்னச்சாதி | ciṉṉa-c-cāti, n. <>id. +. Low caste; கீழ்ச்சாதி |
சின்னஞ்சிறியா | ciṉṉaciṟiya, adj. Redupl. of சிறிய. very small, opp. to peṉṉamperiya; மிகச்சிறிய. சின்னஞ்சிறிய மருங்கினிற்சாத்திய செய்யபட்டும் (அபிரா. 53). |
சின்னஞ்சிறு | ciṉṉaciṟu, adj. See சின்னஞ்சிறிய. . |
சின்னட்டி | ciṉṉaṭṭi, n. <>சின்-மை. 1.See சின்னது. (J.) . 2. A kind of small herb; |
சின்னத்தட்டு | ciṉṉa-t-taṭṭu, n. <>சின்ன +. Scale-pan used by goldsmiths; பொற்கொல்லர் தராசுத்தட்டு. (திவா. 7, 223.) |
சின்னத்தனம் | ciṉṉa-t-taṉam, n. <>id. +. [T. cinnatanamu.] 1. Meanness, petty-mindedness; அற்பத்தனம். 2. Childishness; |
சின்னத்தும்பி | ciṉṉa-t-tumpi, n. <>id. +. A marine fish, brown, Pegasus draconis; பழுப்பு நிறமுள்ள கடல்மீன்வகை. |
சின்னது | ciṉṉatu, n. <>சின்-மை. Little child, animal or thing; சிறியது. |
சின்னப்பட்டம் | ciṉṉa-p-paṭṭam, n. <>id. +. Person who is second in authority and is the successor-designate of the head of a mutt; பெரிய மடாதிபதிக்கு அடுத்தபடியான. மடாதிபர். |
சின்னப்படி | ciṉṉa-p-paṭi, n. <>id. +. Half of a standard measure; அரைப்படி. (M. M.) |
சின்னப்படு 1 - தல் | ciṉṉa-p-paṭi, v. intr. <>சின்னம் 3+. 1. To be broken, discomfited; பின்னமுறுதல். 2. To be wounded, maimed, mutilated; 3. To be injured, as fruit; to be deflowered, as a woman, |
சின்னப்படு 2 - தல் | ciṉṉa-p-paṭu-, v. intr. <>சின்னம் 1+. To be derided, disgraced; இகழ்ச்சிப்படுதல் |
சின்னப்பணம் | ciṉṉa-p-paṇam, n. <>சின்ன +. Small fanam = 1 1/4 anna; ஒன்றேகால் அணா. (C. G.) |
சின்னப்பயல் | ciṉṉa-p-payal, n. <>id. +. 1. Little fellow; சிறுபையன் 2. Mean, petty-minded fellow; |
சின்னப்பர் | ciṉṉappar, n. <>id. + அப்பா. Apostle paul; பால் என்னும் கிறிஸ்துவ அத்தியட்சர். R. C. |
சின்னப்பாகல் | ciṉṉa-p-pākal, n. <>id. +. Balsam apple, climber, Momordica charantia; பாகல்வகை. (M. M. 131.) |
சின்னப்புத்தி | ciṉṉa-p-putti, n. <>id. +. 1. Meanness, low-mindedness; அற்பபுத்தி. 2. Shallow wit; |
சின்னப்பூ 1 | ciṉṉa-p-pū, n. <>சின்னம் 2+. poem celebrating the tacāṅkam of a king in 100, 90, 70, 50 or 30 nēricai-veṇpā verses; நூறு, தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசைவெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்துகூறும் பிரபந்தவகை. (இலக். வி. 846.) |
சின்னப்பூ 2 | ciṉṉa-p-pū, n.<>சின்னம்3.+ 1. Loose, untied flowers; விடுபூ. சின்னப்பூ வணிந்த குஞ்சி (சீவக. 2251). See சின்னம், 5. |
சின்னபின்னம் | ciṉṉa-piṉṉam, n. <>chinna + bhinna. Mangled, hacked pieces; கண்டதுண்டம். (திவா.) தோளுந் தாளுஞ் சின்னபின்னங்கள் செய்தவதனை (கம்பரா. நிந்தனை. 57). |
சின்னம் 1 | ciṉṉam, n.<>சிறு-மை. [T.K.M. cinna.] 1. Smallness, minuteness; அற்பம். சின்னமானுஞ் சின்னவுற்பவம் (ஞானா. 59, 16). 2. Anything small; 3. Winnowing fan; 4. Drizzling; 5. Derision, slight; |