Word |
English & Tamil Meaning |
---|---|
அலவான் | alavāṉ n. Seeds accumulated in a pit in the pallaṅkuḻi game; பல்லாங்குழி யாட்டத்திற் கூடும் காய்கள். |
அலவு 1 - தல் | alavu- 5 v.intr. <>அல-. 1. To be troubled in mind; வருந்துதல். அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்.18, 17). 2. To spill; |
அலவு 2 | alavu n. <>அலவு-. Confusion, perturbation; மனத்தடுமாற்றம். ஆதுல மாக்களு மலவுற்று விளிப்ப (மணி.4, 42). |
அலவை | alavai n. <>id. 1. Woman that chatters ceaselessly; விடாதுபிதற்றுபவள். மாய வலவைசொற் கொண்டு (திவ். திருவாய்.4, 6, 4). 2. Adultery; |
அலற்று - தல் | alaṟṟu- 5 v.intr. To talk unceasingly and irregularly; இடைவிடாமலும் முறையின்றியும் பேசுதல். (திவ்.திருவாய்.1. 3, 10.) |
அலறல் | alaṟal n. <>அலறு-. Loud cry, great sound; திரண்ட ஓசை. (பிங்.) |
அலறு - தல் | alaṟu- 5 v.intr. [M. alaṟu.] 1. To vociferate, roar; மிக்கொலித்தல். அலறுஞ் சிறுவெண் சங்கும் (சீவக. 2195). 2. To bellow, bleat, hoot; 3. To weep aloud, cry from sorrow; 4. To sorrow, grieve; 5. To spread out, branch; |
அலன் | alaṉ n. <>hala. Balarāma, armed with a plough; பலராமன். (பரிபா.3, 83.) |
அலாக்கு | alākku n. <>U. alag. Separateness, aloofness, distinctness; தனிமை. Colloq. |
அலாதம் | alātam n. <>a-lāta. Fire-brand; கடைக்கொள்ளி. (பிங்.) |
அலாதி | alāti n. <>U. 'alāhida. That which is separate; தனியானது. Colloq. |
அலாது | alātu n. See அலாதி. Colloq |
அலாபத்திரம் | alāpattiram n. cf. alapadma. (Nāṭya.) Gesture in which the fingers are bent without coming together; இணையா வினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) |
அலாபதம் | alāpatam n. cf. avadāha. Cuscuss grass. See இலாமிச்சை. (மலை.) |
அலாபம் | alāpam n. <>a-lābha. 1. Absence of gain; இலாபமின்மை. 2. Evil; |
அலாபு | alāpu n. <>alābu. Calabash. See சுரை. (பிங்.) |
அலாயிதா | alāyitā adj. <>U. 'alāhida. Separate, different; தனி. (C.G.) |
அலாயுதன் | alāyutaṉ n. <>Halāyudha. Balarāma, armed with a plough; பலராமன். (பிங்.) |
அலாரிதா | alāritā n. Oleander. See அலரி. (மலை.) |
அலாரிப்பு | alārippu n. Opening song in a nautch, beginning with தாஅ அம் தித்தாஅம் க்ருதகதைஇ; நாட்டியவாரம்பத்திற் பாடுஞ் சொற்கட்டு. |
அலாவு | alāvu n. <>alābu. Calabash. See சுரை. (அறப். சத. 65.) |
அலி 1 | ali n. <>அல்4. 1. Hermaphrodite, being which is neither man nor woman wholly; ஆண்பெண்ணல்லாதது. (திவ். திருவாய். 2, 5, 10.) 2. See நறுவிலி. |
அலி 2 | ali n. prob. அரி2. Boiled rice; சோறு. (அக.நி.) |
அலி 3 | ali n. <>Halin. Balarāma, with plough as weapon; பலராமன். அலிமுகந்தொழு மிளவல் (பாரத.பதினான்.41). |
அலி 4 | ali n.<>hari. 1. Fire; நெருப்பு. (அக.நி.) 2. Yama; |
அலிக்கிரகம் | ali-k-kirakam n. <>அலி1+. Neutral planets as Mercury or Saturn; சனி புதன் என்னும் கிரகங்கள். (சாதகா. 56, உரை.) |
அலிக்கை | ali-k-kai n. <>id.+. (Nāṭya.) Dance with hand gestures by which the feelings of a hermaphrodite are expressed; அலிச்செயல் காட்டும் அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.) |
அலிகை | alikai n. Kans. See நாணல். (M.M.) |
அலிசி | alici n. See அலிசிவிரை. . |
அலிசிவிரை | alici-virai n. <>U. alsī+. Linseed; ஆளிவிரை. (C.G.) |
அலிநாள் | ali-nāḷ n. <>அலி1+. The nakṣatras mirukacīriṭam and catayam; மிருகசீரிட சதய நட்சத்திரங்கள். (சோதிடசிந். 38.) |
அலிப்பேடு | ali-p-pēṭu n. <>id.+. A dance of Krṣṇa. See அல்லியம். (சிலப்.6, 48, உரை.) |
அலிமரம் | ali-maram n. <>id.+. Soft, pithy tree without core; வயிரமல்லாத மரம். (பிங்.) |
அலியன் | aliyaṉ n. prob. abhayā, the grantha bha being misread as Tamil li (லி). Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) |
அலியெழுத்து | ali-y-eḻuttu n. <>அலி1+. 1. The letter ஃ, as being regarded neither a vowel nor a consonant; ஆய்தம். (வெண்பாப். முதன்மொ. 6, உரை.) 2. Consonants; |