Word |
English & Tamil Meaning |
---|---|
அலைசு 1 - தல் | alaicu- 5 v.tr. <>அலை2-. 1. To wash, rinse; ஆடையை அலைத்துக் கழுவுதல். 2. To shake; 3. To agitate, throw into confusion; |
அலைசு 2 - தல் | alaicu- 5 v.intr. <>a-lasa. To be lazy; சோம்புதல். (பிங்.) |
அலைசோலி | alai-cōli n. <>அலை2-+. Trouble, annoyance, vexation; தொந்தரவு. (J.) |
அலைதாங்கி | alai-tāṅki n. <>அலை3+. Breakwater; அலையைத் தடுக்கும் செய்கரை. (C.G.) |
அலைதாடி | alai-tāṭi n. <>அலை1-+. Dewlap, excrescence found on the necks of cattle; பசுவின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.) |
அலைதாரை | alai-tārai n. <>அலை2-+ dhāra. Watermark, mark left on the surface by the dashing of water owing to the action of waves; நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி. (C.G.) |
அலைப்பு | alaippu n. <>id. 1. Moving, shaking; அசைக்கை. 2. Disturbance, distress, trouble; |
அலைமகள் | alai-makaḷ n. <>அலை3+. Lakṣmī, born in the sea of milk; இலக்குமி. (பிரமோத்.7, 26.) |
அலையல் | alaiyal n. <>அலை1-. 1. Wandering, waving; திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு.பரா.321). 2. Languishing, drooping, swooning; |
அலையெறி - தல் | alai-y-eṟi- v.intr. <>அலை3+. To spread abroad; வெகுதூரம் பருவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா.1, வ்யா.). |
அலையேறு | alai-y-ēṟu n. <>id.+. Dashing of the waves; அலையெறிகை. அலையேற்றிலே கொண்டுபோய். (ஈடு, 7, 2, 2). |
அலைவாய் | alai-vāy n. <>id.+. Tiruchendūr in the Tinnevelly district; திருச்செந்தூர். (திருமுரு. 125.) |
அலைவாய்க்கரை | alai-vāy-k-karai n. <>id.+. Seashore; கடற்கரை. Loc. |
அலைவிரிசல் | alai-virical n. <>id.+. Curling wave; சுருளும் அலை. (W.) |
அலைவு | alaivu n. <>அலை1-. [K. alavu.] 1. Moving, shaking, waving; அசைகை. (ஞானவா.வைராக்.88.) 2. Mental agitation, trouble, distress; |
அலோகம் | alōkam n. <>a-lōka. (Jaina.) Immaterial or spiritual world; காணப்படாத உலகம். அலோகநுங்கி. (சீவக.3082). |
அலோசி | alōci n. Purslane. See பசலை. (மூ.அ.) |
அலோமி | alōmi n. A medicinal herb. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.) |
அலௌகிகம் | alaukikam n. <>a-laukika. Unwordly, nonconformity with worldly wisdom; உலகநடைக்கு மாறானது. |
அவ் | av pron. <>அ. They, impers.; அவை. (தொல்.சொல்.121.) |
அவ்வண்ணம் | a-v-vaṇṇam adv. <>id.+. In that way; அப்படி. அவ்வண்ணத் தவர் நிலைமை கண்டும் (திவ்.திருநெடுந்.21). |
அவ்வது | avvatu adv. <>id. In that way; அவ்வாறு. (குறள், 426.) |
அவ்வயிறு | av-vayiṟu n. <>அம்+. Beautiful belly; அழகியவயிறு. (அகநா.21) |
அவ்வருகு | a-v-v-aruku adv. <>அ+அருகு. 1. Beyond, above; அப்பால். எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, 1, 2, 10, ஜீ.) 2. Higher than, superior to; |
அவ்வழி | a-v-vaḻi adv. <>id.+. 1. In that way, according to that course; அப்படி வருமிடத்து. (நண்.75.) 2. After that; |
அவ்வளவிலவன்மகிழ்கவெனல் | av-vaḷavil-avaṉ-makiḻka-v-eṉal n. <>id.+. Maxim of satisfying the opponent by accepting his earlier position with a view to refute his further arguments, tuṣyatudurjana-nyāya; பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு எதிராளி மகிழ்கவென்று அவன் கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம். (சி.போ.3, 6, சிற்.) |
அவ்வாய் | av-vāy n. <>அம்+. Beautiful place; அழகிய இடம். (பெரும்பாண்.412.) |
அவ்வாறு 1 | a-v-v-āṟu adv. <>அ+ஆறு. In that way or manner; அப்படி. (பாரத.புட்ப.126.) |
அவ்வாறு 2 | avvāṟu adj. <>ஆறு+ஆறு. In sixes, six each; தனித்தனி ஆறு. ஒவ்வொருத்திக் கவ்வாறாய் (திருவிளை. பழியஞ்.4). |
அவ்வி - த்தல் | avvi- 11 v.intr. 1. To become intolerant, impatient; பொறுமையொழிதல். அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 2. To pervert the mind; |
அவ்விடம் | a-v-v-iṭam adv. <>அ+இடம். There, in that place; அங்கு. |
அவ்விதழ் | a-v-v-itaḻ n. <>அம்+இதழ். Beautiful petal; அழகிய பூவிதழ். அவ்வித ழவிழ்பதங்கமழ. (நெடுநல்.41). |