Word |
English & Tamil Meaning |
---|---|
அவத்தம் 3 | avattam n. Species of Cleome. See நாய்வேளை. (மூ.அ). |
அவத்தானம் | avattāṉam n. <>ava-sthāna. Dwelling, place of residence; இருப்பிட்ம். மாயாத்துவய மத்தியே அவத்தானஞ் சொல்லப்பட்டது. (சி.சி.8, 2, சிவாக்). |
அவத்தியம் | avattiyam n. <>ava-dya. Fault, defect; குற்றம். (அஷ்டாதச.அர்த்தபஞ்.பக்.25). |
அவத்தியா | avattiyā n. cf. E. bitts. (Naut.) Strong post of wood or iron to which cables are fastened; கப்பலின் முன்பக்கத்திற் கயிறுகட்டுந் தம்பம். |
அவத்துறை | ava-t-tuṟai n. <>apa+. Bad way; தீயவழி. அவத்துறை போய நெஞ்சத் தக்கனாங் கறைந்திட்டானே (கூர்மபு.தக்.வே.7). |
அவத்தை | avattai n. <>ava-sthā. 1. State, condition, situation; நிலை. 2. Agony; 3. Condition of mind in love, one of ten stages, viz., 4. Condition of the soul which is of two kinds, viz., 5.Threefold aspect of god, viz., |
அவத்தைப்பிரயோகம் | avattai-p-pirayōkam n. <>id.+. Art of killing by sorcery, one of aṟupattunālu-kalai , q.v.; அறுபத்துநாலு கலையுள் சூனியம்வைத்துக் கொல்லும் வித்தை. (W.) |
அவதஞ்சம் | avatacam n. <>ava-tamsa. Flower used as ear ornament; செவிமலர்ப்பூ. கன்னாவதஞ்சம். (சூடா.7. 28). |
அவதந்திரம் | ava-tantiram n. <>apa+. Bad device, stratagem, under-hand dealing; சதியோசனை. அவதந்திரம் தனக்கு அந்தரம். |
அவதரப்பெயர் | avatara-p-peyar n. <>ava-sara+. Name for the time being; தற்காலப் பெயர். |
அவதரம் | avataram n. <>ava-sara. Occasion; சமயம். (சிவப்பிர.2, 17, உரை.பக்.234). |
அவதரி - த்தல் | avatari- v.intr. <>ava-tr. 1. To be born, as when a god descends to become a creature or when a saint is born; தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41). 2. To abide; |
அவதாதம் | avatātam n. <>ava-dāta. Whiteness; வெண்மை (உரி.நி). |
அவதாரணம் | ava-tāraṇam n. <>ava-dhāraṇa. Certainty, positiveness; தேற்றம். (பி.வி.22, உரை). |
அவதாரம் 1 | avatāram n. <>ava-tāra. 1. Descent; இறங்குகை. (சூடா); 2. Avatār, birth of a great being; |
அவதாரம் 2 | avatāram n. Tearing, dividing; பிரிக்கை. (J.) |
அவதாரிகை | avatārikai n. <>ava-tārikā. Introductory note to a verse, etc., explaining its bearing; முன்னுரை. |
அவதானம் 1 | avatāṉam n. <>ava-dhāna. Glorious act, achievement; மேன்மையான செயல். இறைவன் செய்த சிந்தைகூ ரவதானத்தின் றிறங்களை (திருவாலவா.நூல்வர.7). |
அவதானம் 2 | avatāṉam n. <>ava-dhāna. 1.Attention, attentiveness, intentness; கவனம். 2. Memory, remembrance; 3. Art of simultaneously solving a number of problems as a test of memory; 4. Skill; |
அவதானி 1 - த்தல் | avatāṉi- 11 v.tr. <>id. 1. To recollect, reflect; நினைப்பூட்டிக்கொள்ளுதல். 2. To commit to memory, fix or retain in mind; |
அவதானி 2 | avatāṉi n. <>ava-dhānin. 1. Attentive person; கவனிப்புள்ளவன். 2. Title of one who is well versed in the Vēdas; 3. One skilled in feats of memory; |
அவதி 1 | avati n. [T.K. avadhi.] cf. ava-sthā. Suffering, distress; துன்பம். பாழவதிப் படவெனக்கு முடியாது (தாயு.பன்மாலை.4). |
அவதி 2 | avati n. <>ava-dhi. 1. Boundary, limit; எல்லை. (பிங்); 2. One of the senses of abl.; 3. Fixed term, stipulated time for repayment, 'rest'; 4. Extent, measure; 5. Number; 6. Occult powers. See அவதிஞானம். |
அவதிக்கிரயம் | avati-k-kirayam n. <>id.+. Conditional sale, to become absolute if the purchase money is not repaid within a stipulated time or if the conditions are not fulfilled (R.F.); தவணைகாட்டிச் செய்யும் விற்பனை. |