Word |
English & Tamil Meaning |
---|---|
அவதிகத்தம் | avatikattam n. Seashell decayed by age; கடல்நுரை. (W.) |
அவதிஞானம் | avati-āṉam n. <>ava-dhi+. (Jaina.) Clairvoyance, supersensual perception of objects and events distant in space and time; தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. (சீவக. 951, உரை.) |
அவதிப்படு - தல் | avati-p-paṭu- v.intr. <>அவதி1+. To suffer, to be in great straits; துன்பப்படுதல். |
அவதூதம் | avatūtam n. <>Ava-dhūta. Name of an Upaniṣad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
அவதூதன் | avatūtaṉ n. <>ava-dhūta. 1. One who has shaken off or renounced all worldly attachment; முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.) 2. Naked sannyāsin; |
அவதூறு | ava-tūṟu n. <>அவம்+. Ill-report, defamation, slander; பழி. |
அவந்தரை | avantarai n. <>a-bandhura. [T.K. abandara.] 1. Disorder, confusion; சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42). 2. Forlorness; 3. Becoming useless, fruitless; |
அவந்தன் | avantaṉ n. <>அவம். Worthless man; பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55). |
அவந்தி 1 | avanti n. <>Avanti. 1. Ujjain, one of cattapuri , q.v.; சத்தபுரியு ளொன்றாகிய உச்சயினி. (பிங்.) 2. Parrot; |
அவந்தி 2 | avanti n. <>avanti-sōma. Vinegar, fermentation of rice-water; காடி. (தைலவ. தைல. 119.) |
அவந்திக்கண்ணி | avanti-k-kaṇṇi n.cf. hastikarṇa. See வெருகஞ்செடி. (மலை.) |
அவந்திகை | avantikai n. <>Avantikā. 1. Ujjain; உச்சயினி. (கந்தபு. திருநகர. 75.) 2. Parrot; |
அவநதன் | avanataṉ n. <>ava-nata. One with head bowed down with humility; தலை குனிந்து வணங்குவோன். அரச னவநத னானான் (கோயிற்பு. இரணி. 14). |
அவநம்பிக்கை | ava-nampikkai n. <>அவம்+. Distrust, suspicion, doubt; நம்பகமின்மை. |
அவநீதி | ava-nīti n. <>apa+. Injustice; நீதிக்கேடு. மறனுறு மவநீதியை (வரத. பாகவத. குருகுல. 437). |
அவநுதி | avanuti n. <>apa-hnuti. A figure of speech which denies to an object one of its own attributes and ascribes another which is foreign to it; ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக்கூறும் அணி. (தண்டி. 73.) |
அவநெறி | ava-neṟi n. <>அவம்+. Way of sin; பாவவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. தடுத்தா. 79). |
அவப்படு - தல் | ava-p-paṭu- v.intr. <>id.+. To become useless; பயனின்றாதல். அருந்தவ மவப்படா தருளி (உபதேசகா. சூராதி. 129). |
அவப்பலம் | ava-p-palam n. <>apa+. Evil results; தீப்பயன். வெய்தவப்பலத்துறா நன்னிலைகொடு (இரகு. யாக. 2). |
அவப்பிரசவம் | ava-p-piracavam n. <>id.+. Abortion after six months; ஆறுமாதத்துகு மேனிகழும் கருவழிவு. (சி. சி. 2, 93, மறைஞா.) |
அவப்பிரஞ்சம் | avappiracam n. <>apa-bhramša. A variety of Prakrit, a form of Sanskrit spoken by the vulgar; இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.) |
அவப்பேர் | ava-p-pēr n. <>apa+. Bad name, ill-fame; அபகீர்த்தி. |
அவப்பொழுது | ava-p-poḻutu n. <>அவம்+. Misspent time; வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18). |
அவபத்தி | ava-patti n. <>apa+. 1. Impiety; பத்தியின்மை. 2. Superstition; |
அவபத்தியம் | ava-pattiyam n. <>id.+. Unsuitable diet; பத்தியக்கேடு. Colloq. |
அவபிரதம் | avapiratam n. <>avabhrtha. Bath at the completion of a sacrifice; யாகத்தின் முடிவில் நீராடுகை. முனிவ ரவபிரதங் குடைந்தரட (திவ். பெரியாழ். 4, 7, 6). |
அவபிருதம் | avapirutam n. <>id. See அவபிருதம். (வேதாரணி. அக்கினிதீர்த். 8.) |
அவபுத்தி | ava-putti n. <>apa+. 1. Folly; கெடுமதி. 2. Bad advice; |
அவம் | avam n. cf. apa. 1. Vanity, nothingness, uselessness; பயமின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை). 2.Evil; |
அவமதி 1 | avamati n. <>ava-mati. Disregard, disgrace, contempt; அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி யென்னை யவமதி செய்திட (காஞ்சிப்பு. பரசிரா. 42). |
அவமதி 2 - த்தல் | avamati- 11 v.tr. <>id. To treat with disrespect, to insult, to disgrace; இகழ்தல். பரனைக் குருவை யவமதித்தோர் (தணிகைப்பு அகத். 336). |