Word |
English & Tamil Meaning |
---|---|
அவலத்தவிநயம் | avalattavinayam n. <>id.+abhi-naya. Dramatic action expressive of grief; சோகரஸம் தோன்றும் அபிநயம். அவுலததவிநயமறிவரக் கிளப்பின்..புலவர் (சிலப்.3, 13, உரை). |
அவலம் 1 | avalam n. cf.a-bala. 1. Suffering, pain, distress; துன்பம். செய்வினை முற்றாமலாண்டோ ரவலம் படுதலு முண்டு (கலித்.19); 2. Poverty, want; 3. Weeping, sorrowing; 4. Illusion; 5.Care, anxiety; 6. Fault; 7. Sickness, disease; 8. Pathetic sentiment, one of eight mey-p-pāṭu , q.v.; |
அவலம் 2 | avalam n. <>a-bala. Weakness, faintness, feebleness; பலவீனம். (W.) |
அவலம் 3 | avalam n. <>a-phala. That which becomes fruitless, unprofitable; பயன் படாதொழிவது. கற்றதுங் கேட்டது மவலமாய்ப் போத னன்றோ. (தாயு.சச்சி.5). |
அவலம்பம் | avalampam n. <>ava-lamba. Dependence, support, prop, stay; சார்பு. (சங். அக.) |
அவலம்பி - த்தல் | avalampi- 11 v.tr. <>id. To catch hold of, cling to; பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி.9. 10, ஞானப்). |
அவலரக்கு | aval-arakku n. <>அவல்+. Sea lac melted and run into thin layers like flaked rice; அரக்குவகை. (W.) |
அவலன் | avalaṉ n. <>அவலம்1. One who is at fault; குற்றமுள்ளவன். அறவும் பரிய னவலன் (சைவச.ஆசா.8) |
அவலி 1 - த்தல் | avali- 11 v.intr. <>அவலம்1. 1. To suffer, to be distressed in mind; வருந்துதல். அருவரை மார்ப னவலித் திருந்தான். (சீவக.515); 2. To lament, weep; 3. To be flurried; |
அவலி 2 | avali n. Cowhage. See பூனைக்காலி. (மலை). |
அவலிடி | aval-iṭi n. <>அவல்+. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை). |
அவலுப்பு | aval-uppu n. prob. அவிரி+. Aniline salts obtained from indigo; அவிரியினின்றெடுகும் உப்பு. |
அவலை | avalai n. <>அவலம்1. 1. Pain throbbing, throes; கடுப்பு. (பிங்.) 2. Barren land, wilderness; |
அவலோகம் | ava-lōkam n. <>ava-lōka. See அவலோகனம். . |
அவலோகனம் | ava-lōkaṉam n. <>ava-lōkana. Look, glance; பார்வை. அனுக்கிரகாவலோகனம். (சி.சி.8, 3, சிவாக்). |
அவலோகிதன் | avalōkitaṉ n. <>Ava-lōkita. Name of a Bodhi-sattva, reputed to have been the instructor of Agastya; பௌத்த முனிவரு ளொருவர். (வீரசோ.பாயி.2). |
அவவு | avavu n. Avidity. See அவா. அவ வுக்கை விடுதலு முண்டு (கலித். 14). |
அவள் | avaḷ pron. <>அ. [K. avaḷu, M. avaḷ.] That female person, she, fem. of அவன் . . |
அவளம் | avaḷam n. <>அவலம்1. Evil; தீமை. அவளங்கடரு காரணமாம் (வேதா.சூ.56). |
அவளைதுவளை | avaḷaituvaḷai n. Mixture of rice, curry, ghee, curds, etc.; கதம்பவுணவு. Vul. (J.) |
அவற்காளான் | avaṟ-kāḷāṉ n. <>அவல்+. A species of fungus; காளான்வகை. (W.) |
அவற்பதம் | avaṟ-patam n. <>id.+. Grain made consistent for making cakes; அவலாதற்கேற்ற பக்குவம். (W.) |
அவன் 1 | avaṉ pron. <>அ. [K. avanu, M. avan.] That male person, he. . |
அவன் 2 | avaṉ n. Uselessness.See அவம். அவன்செயத் திருவுடம் பலச நோற்கின்றான். (கம்பரா.சூர்ப்.18). |
அவனறிவுதான்காண்டல்வினா | avaṉ-aṟivu-tāṉ-kāṇṭal-viṉā n. <>அவன்1+. Questioning with the object of ascertaining another's view; பிறனப்பிராயமறிதற்குக் கேட்குங் கேள்வி. (தொல்.சொல்.13, சேனா). |
அவனி | ava-ṉi n. <>ava-ni. Earth; பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத.வாரணா.82). |
அவனிகேள்வன் | avaṉi-kēḷvaṉ n. <>id.+. Viṣṇu, the husband of the Goddess of Earth; திருமால். (கந்தபு.திருவவதா.70). |
அவனிபன் | avaṉipaṉ n. <>avani-pa. King, the protector of earth; அரசன். அவனிப னகரியில் (பாரத.வாரணா.18). |
அவஸ்தாத்திரயம் | avastā-t-tirayam n. <>ava-sthā+. The three conditions of the embodied soul, viz., சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி |
அவஸ்து | avastu n. <>a-vastu. 1. That which is insubstantial, unreal; பொருளல்லாதது. 2. Worthless thing; |