Word |
English & Tamil Meaning |
---|---|
அவமதிச்சிரிப்பு | avamati-c-cirippu n. <>id.+. Derisive laughter; இகழ்ச்சி நகை. (திவா.) |
அவமதிப்பு | avamatippu n. <>id. Disrespect, disregard, contempt; இகழ்ச்சி. அவமதிப்பு மான்ற மதிப்பும் (நாலடி. 163). |
அவமரணம் | ava-maraṇam n. <>apa+. Untimely or unnatural death; துர்மரணம். |
அவமரியாதை | ava-mariyātai n. <>id.+. Incivility, impoliteness, disrespect. . |
அவமழை | ava-maḻai n. <>அவம்+. Unseasonable, excessive or injurious rain; கேடு விளைக்கும் மழை. (W.) |
அவமாக்கு - தல் | avam-ākku- v.tr. <>id.+. To make useless; வீணாக்குதல். |
அவமானம் | ava-māṉam n. <>ava-māna. Disrespect, contempt, dishonour; அவமதிப்பு. (பெரியபு. தண்டி. 11.) |
அவமானி - த்தல் | avamāṉi- 11 v.tr. <>id. To despise, disgrace, treat with contempt; அவமானப்படுத்துதல். அவையினி லவமானித்த பாதகன் (நல்.பாரத. சொர்க்க.தெரி.31). |
அவமிருத்து | ava-miruttu n. <>apa-mrtyu. Untimely or unnatural death; துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.112). |
அவயங்கா - த்தல் | avayaṅ-kā- v.intr. <>a-bhaya+. To sit on eggs, brood; அடைகாத்தல்.கோழி அவயங்காக்கிறது. (W.) |
அவயம் | avayam n. <>a-bhaya. 1. One who seeks refuge; அடைக்கலம் புகுவோன். அவயநின் னவய மென்னா (கம்பரா. வருணனை.67); 2. Refuge, place of shelter; 3. Brooding; 4. Cuscuss grass. See வெட்டிவேர். |
அவயவம் | avayavam n. <>ava-yava. 1. Limb, part of body; உடலின் உறுப்பு. தங்க ளவயவம் போல்வன கொய்தார் (பாரத.வசந்த.6); 2. Part, member; |
அவயவி | avayavi n. <>avayavin. Whole composed of constituent parts; உறுப்புள்ளது. ஒரு பொருளே அவயவ அவயவிகளாயாதல் (சி.போ.பா.6. 2, பக்.145); 2. Body; 3. Member of an institution; |
அவயோகம் | ava-yōkam n. <>apa-yōka. Unfortunate occurrence, misfortune; தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8). |
அவர் | avar pron. 1. Pl. of அவன் or அவள். . 2. That person, honorific; |
அவர்கள் | avarkaḷ pron. 1. Pl. of அவன் or அவள் (திருக்கோ. 7, உரை.) 2. That person, honorific; 3. Honorific, title affixed to a name; |
அவர்ணியம் | avarṇiyam n. <>a-varṇya. Standard of comparison; உபமானம். (அணியி.3) |
அவரகாத்திரம் | avara-kāttiram n. <>avara+. Lower part of the body, leg; கால். (சீவக.806, உரை). |
அவரசன் | avaracaṉ n. <>avara-ja. Younger brother, as after-born; தம்பி. (W.) |
அவரயன் | avarayaṉ n. See அவரசன். . |
அவராகம் | avarākam n. <>apa-rāka. Freedom from desire; இச்சையின்மை. அவராக வேத மலர்முனி (பாரத.சூதுபோர்.204). |
அவரை | avarai n. [K.M.Tu. avara.] Field-bean, cl., Dolichos lablab; கொடிவகை. (மலைபடு.110) |
அவரோகணம் | avarōkaṇam n. <>ava-rōhaṇa. 1. Descending, alighting, lowering; இறங்குகை; 2. Complete descent of the gamut, one of 10 kamakam , q.v.; 3. Reciting the Vēda backwards; |
அவரோகம் | avarōkam n. See அவரோகணம், 3. சுரம்பதங் கிரமஞ் சடை யவரோகம். (பிரபோத.11, 4) |
அவரோதம் | avarōtam n. <>ava-rōdha. Ladies apartments in a palace; அந்தப்புரம். கோயி லவரோதம் (பாரத.அருச்.தீர்த்.23). |
அவல் | aval n. <>அவை-. [K.M. aval.] 1. Rice obtained from fried paddy by pestling it; நெற்பொரியிடியல்..பாசவலிதிடித்த..உலக்கை (அகநா.141); 2. Shallow depression; 3. Cultivated land; 4. Tank; |
அவலச்சமத்து | avala-c-camattu n. <>a-bala+. Seeming ability, folly parading as cleverness; போலிச் சாமர்த்தியம். Colloq. |
அவலச்சுவை | avala-c-cuvai n. <>அவலம்.+. (Poet.) Pathos, pathetic sentiment; சோகரசம். (சிலப்.3, 13, உரை). |
அவலச்சுழி | avala-c-cuḻi n. <>id.+. Evil fate; கெட்டவிதி. Loc. |
அவலட்சணம் | ava-laṭcaṇam n. <>apa+. Deformity, uncomeliness, unseemliness, ugliness, inelegance, indecency in language or anything else; அந்தக்கேடு. |