Word |
English & Tamil Meaning |
---|---|
சுமைகாரன் | cumai-kāraṉ, n. <>சுமை +. 1. Porter, carrier; மூட்டை தூக்குவோன். (யாழ். அக.) 2. Man of large family; |
சுமைகூலி | cumai-kūli, n. <>id. +. Porterage, wage for carrying a load; மூட்டை தூக்குவதற்குக் கொடுக்குங் கூலி. (யாழ்.அக.) |
சுமைத்தயிர் | cumai-t-tayir, n. <>id. +. Curds; கட்டித்தயிர். சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின் (சீவக.2617). |
சுமைதலை | cumaitalai, n. <>சுமதலைi. Responsibility, burden; பொறுப்பு. Loc. |
சுமைதாங்கி | cumai-tāṅki, n. <>சுமை +. Platform erected on the roadside to rest burdens; சுமையை இறக்கித் தலைப்பாரம் ஆற்றுதற்கு உதவியாக உயர்த்தி நிறுத்தப்பட்ட கற்கட்டு. சுமை தாங்கிமேற் சாத்துவர் (திருவிளை.விறகு.16). |
சுமைதாங்கிபோடு - தல் | cumai-tāṅki-pōtu-, v. intr. id. +. To erect a cumai-tāṅki oftentimes in memory of a woman who has died in pregnancy, the belief being that by such erection she will be relieved of her burden in the womb; பிரசவிக்காமல் கருப்பத்துடன் இறந்தவள் பொருட்டு அவள் வயிற்றுப்பாரத்தா லுண்டான வருத்தம் நீங்குமாறு சுமைதாங்கிக்கல் நாட்டுதல். |
சுமைதி | cumaiti, n. See சுமதி.1. (சங்.அக.) . |
சுமையடை | cumai-y-aṭai, n. <>சுமை +. See சும்மாடு. சுமையடைமேற் கூடை கவிழ்த்து (திருவிளை.மண்சுமந்.16). . |
சுமையாள் | cumai-y-āḷ n. <>id. +. See சுமைகாரன். எமைச் சுமையாளுமாக்கி (தாயு.சச்சிதா.4). . |
சுமையிறக்கி | cumai-y-iṟakki, n. <>id. +. See சுமைதாங்கி. (J.) . |
சுயகர்த்தன் | cuya-karttaṉ, n. <>svayam +. kartr. Independent lord, autocrat; சர்வசுவாதீனமாயிருக்குந் தலைவன். (W.) |
சுயகாரியதுரந்தரன் | cuya-kāriya-turan-taraṉ, n. <>சுயகாரியம்+. See சுயகாரியப்புலி. (W.) . |
சுயகாரியப்புலி | cuya-kāriya-p-puli, n. <>id. +. Extremely selfish person; சுயநலத்திலேயே ஈடுபட்டிருப்பவன். Colloq. |
சுயகாரியம் | cuya-kāriyam, n. <>சுயம்1+. 1. One's own affair, private business; சொந்த வேலை. 2.See சுயநலம். Colloq. |
சுயங்கட்டு - தல் | cuyaṅ-kaṭṭu-, v. intr. <>சுயம்2+. See சுயம்பாடு-. 1. Loc. . |
சுயங்கிருதானர்த்தம் | cuyaṅ-kirutāṉart-tam, n. <>svayam + krta + an-artha. Self-created evil; தானாகவே விளைத்துக் கொள்ளுந் தீங்கு. Loc. |
சுயசாதிமானம் | cuya-cāti-māṉam, n. <>சுயம்1 +. Communal bias; தன் சாதியில் அபிமானம். |
சுயஞ்சோதி | cuya-cōti, n. <>svayam + jyōtis. God, as self-luminous; [தானே விளங்கும் ஒளி] கடவுள். (W.) |
சுயநலம் | cuya-nalam, n. <>சுயம்1 +. Selfish end; தன்னலம். Colloq. |
சுயபாஷை | cuya-pāṣai, n. <>sva-bhāṣā. One's own language, mother-tongue; சொந்த தேசபாஷை. (யாழ்.அக.) |
சுயபுணர்ச்சி | cuya-puṇarcci. n. <>சுயம்1 +. Self-pollution; அஸ்தப்பிரயோகம். (W.) |
சுயபுத்தி | cuya-putti, n. <>sva-buddhi. Colloq. 1. One's own unaided sense; சொந்தஅறிவு. 2. Sobriety, clearness of mind; |
சுயபோக்கு | cuya-pōkku, n. <>சுயம்1 +. One's peculiar nature, bent of mind; தன் மனப்போக்கு. (W.) |
சுயம் 1 | cuyam, <>sva. n. one's own சொந்தமானது. இந்தவேலை அவன் சுயம்._ adj. One's own; |
சுயம் 2 | cuyam, <>svayam. n. Own literary composition; தானாகக் கட்டிய பாட்டு.-adj. கலப்பற்ற. சுயம் பால். Loc. Genuine, pure; |
சுயம்பாகம் | cuyam-pākam, n. <>svayam + pākam. 1. Cooking for oneself ; தானாகச் சமைத்துக் கொள்கை. (யாழ்.அக.) 2. Provisions givengratis in choultry, temple, etc; |
சுயம்பாகி | cuyam-pāki, n. <>svayam-pākin. 1. Cook, especially in temple service; சமையற்காரன். 2. Soap; |
சுயம்பாடு - தல் | cuyam-paṭu-, v. intr. <>சுயம்2 +. (w.) 1. To compose original verses ; சொந்தமாகவே செய்யுள் இயற்றுதல். 2. To invent new and original style in singing; |