Word |
English & Tamil Meaning |
---|---|
சுருமா | curumā, n. <>Persn. surmā. Sulphide of antimony; கருநிமிளை. |
சுருமாலாடு | curumā-lāṭu, n. A confection ball; ஒருவகைப் பண்ணிகாரம். (இந்துபாக.379) |
சுருவம் 1 | curuvam, n. <> sva-rūpa. See சுரூபம்2. நரசிங்கமெனுஞ் சுருவத்தொடு (பிரபோத.19, 16). |
சுருவம் 2 | curuvam, n. <>sruva. 1. A ladle used to pour clarified butter in sacrificial fire; யாகாதிகளில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. சீரைச் சுருக்குச் சுருவமெலாம் (உத்தரரா.அனுமப்.41). 2. A kind of ladle; |
சுருவை | curuvai, n. <>id. See சுருவம்2. அந்தணாளர்க்குச் சுருவையும் சமிதை குறைக்குங் கருவியு முதலாயின (தொல்.பொ. 629, உரை). . |
சுருள்(ளு) - தல் | curuḷ-, 2 v. intr. [K. suruḷ, M. curuḷ.] 1. To become coiled; to roll; to curl, as hair; சுருளாதல். நீண்டு குழன்று...கடைசுருண்டு (கம்பரா.உருக்காட்டு.57). 2. To shrivel, shrink, as leaf; 3. To droop, as from heat, hunger; 4.To be reduced to severs straits; |
சுருள் | curuḷ, n. <>சுருள்-. [K. suruḷi, M. curuḷ, Tu. suruḷ.] 1. Rolling; சுருளுகை. 2. Rolls, scroll, coil, curl; 3. Bundle, as of leaves; 4. Fold of an ola roll; 5. Women's hair curled and tied up in dressing, one of ai-m-pāṉ-muṭi, q.v.; 6. Women's ear-ornament; 7. Roll of betel leaves; 8. Presents with betel given to bride and bridegroom; |
சுருள்கல் | curuḷ-kal, n. <>சுருன்+. Ring stone; ஒருவகைக். கல். |
சுருள்தங்கம் | curuḷ-taṅkam, n. <>id.+. Gold leaves; இழைப்பிற்குதவும் மெல்லிய தங்கத்தகடு. Colloq. |
சுருள்தேவதாரு | curuḷ-tēvatāru, n. <>id. +. Long-leaved pine. See சீமைத்தேவதாரு. . |
சுருள்பட்டை | curuḷ-paṭṭai, n. See சுருட்பட்டை. (M. M. 651.) . |
சுருள்பலகாரம் | curuḷ-palakāram, n. <>சுருள்+. See சீப்புப்பணிகாரம். Loc. . |
சுருள்பீலி | curuḷ-pīli, n. <>id. +. Ring worn by women on the third toe; மகளிர் காலின் மூன்றாம்விரலில் அணியும் ஆழி. |
சுருள்பூச்சி | curuḷ-pūcci, n. <>id.+. Insect which blights the groundnut plant, pulchriphyllium; நிலக்கடலைச் செடியைக் கெடுக்கும் இலைப்பூச்சிவகை. |
சுருள்வை - த்தல் | curuḷ-vai-, v. intr. <>id.+. To offer presents with betel to bride and bridegroom; மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் பரிசுப்பொருள் அளித்தல். Loc. |
சுருளமுது | curuḷ-amutu, n. <>id.+. Betel and areca nut, a term of respectful offering; தாம்பூலம். சுருளமுது முதலானதும் (கோயிலொ. 62). |
சுருளல் | curuḷal, n. <>சுருள்-. Ringlet, coil; மயிர் முதலியவற்றின் சுருள் (W.) |
சுருளவாட்டு - தல் | curuḷa-vāṭṭu-, v. tr. <>id. +. 1. To warm at fire, as leaves for medicinal purposes; மருந்துமுதலியவற்றுக்காகப் பச்சிலைமுதலியவற்றை வாட்டுதல். 2. To exact hard work form; 3. See சுருட்டிப்பிடி. |
சுருளி | curuḷi, n. <>id. 1. Iron-wood of Ceylon, l.tr., Mesua ferrea; இலங்கை மரவகை. 2. Telegraph-plant. See தொழகண்ணி. (சங். அக.) |
சுருளிமாமுனி | curuḷi-māmuṉi, n. perh. id. +. Wing-stemmed conehead, m. sh., Strobilanthes barbatus; செடிவகை. (L.) |
சுருளுப்பட்டை | curuḷu-p-paṭṭai, n. prob. id. +. Bark of the false peacock's foot tree; செங்கத்தாரிப்பட்டை. |
சுருளெடு - த்தல் | curuḷ-eṭu-, v. intr. <>சுருள் +. To accept presents given on one's marriage occasion; மணமக்கள் பரிசுப்பொருளை அங்கீகரித்தல். |
சுருளை | curuḷai, n. <>சுருள்-. [K. suruḷe.] 1. Roll; சுருள். 2. Tender shoot; 3. An ear ornament; |
சுரூபங்கெட்டவன் | curūpaṅ-keṭṭavaṉ, n. <>சுருபம்2 +. 1. Deformed person; அங்கவீனன். 2. Unorthodox person; |
சுரூபப்பிழையன் | curūpa-p-piḷaiyaṉ, n. <>id. +. See சுரூபங்கெட்டவன், 1. (W.) . |