Word |
English & Tamil Meaning |
---|---|
சுவகர்மம் | cuva-karmam, n. <>sva +. 1. One's duties ordained by šāstras; தனக்குரித்தாக நூல்களால் விதிக்கப்பட்ட தொழில். 2. One's own business; |
சுவகாரியம் | cuva-kāriyam, n. <>id. +. See சுவகர்மம். 2. பட்டணத்துக்குச் சுவகாரியமாகப் போயிருந்தேன். Loc. . |
சுவச்சதை | cuvccatai, n. See சுவச்சம்1. 1, 2. Nā. . |
சுவச்சம் 1 | cuvaccam, n. <>svaccha. 1. Clearness, as of the atmosphere, water; தெளிவு. ஆகாசம் சுவச்சமாகியும் (சி.சி.2, 67, சிவாக்.). 2. Purity, stainlessness, freedom from mixture, as of race; 3. Gingelly oil, as clear; |
சுவச்சம் 2 | cuvaccam, n. See சுவத்தம் எல்லாரும் சுவச்சமாயிருக்கிறார்கள். (W.) |
சுவசம் | cuvacam, n. <>sva+vaša. One's own custody or control; தன் வசத்தில் உள்ளது. நான்மறைகளுஞ் சுவசமாகிய வங்கண (விநாயகபு.73, 35). |
சுவசனம் 1 | cuvacaṉam, n. <>id. + vacana. One's own word; சொந்த வார்த்தை. |
சுவசனம் 2 | cu-vacaṉam, n. <>su + id. Good word, auspicious word; நல்வார்த்தை. |
சுவசனவிருத்தம் | cuvacaṉa-viruttam, n. <>sva-vacana +. (Log.) Self-contradiction; தன்சொற்கு மாறுபாடாக இயம்பலாகிய பக்கப்போலிவகை. சுவசனவிருத்தந் தன்சொன்மாறி யியம்பல் (மணி.29, 160). |
சுவசாதி | cuva-cāti, n. <>sva-jāti. One's own caste or class; தன்னினம். |
சுவசாதீயம் | cuva-cātīyam, n.<>svajātīya. That which belongs to one's genus or class; ஓரினத்தைச் சார்ந்த பொருள். தேஜோற் பந்நமான சப்தம் சுவசாதீயமா யிருக்கிற உத்தரோத்தர சத்தங்களை உற்பாதித்து. (சி.சி.2, 61, சிவாக்.). |
சுவட்டவர் | cuvaṭṭavar, n. prob. சுவடு1. Those who train quails to fight; காடையைப் பழக்கிப் போறுமூட்டுவோர். செல்லுஞ் சுவட்டவர் சொல்லுக. (பு.வெ.12, வென்றிப்.9). |
சுவட்டிலக்கம் | cuvaṭṭilakkam, n. <>id. +. Table of grain measure; நெல்லிலக்கம். |
சுவடன் | cuvaṭaṉ, n. <>சுவடு2. Person of refined taste; இரசிகன். சுவடர் பூச்சூடும்போது புழுகிலே தோய்த்துச் சூடுமாபோலே (திவ்.திருப்பல்.9, வ்யா.). |
சுவடி | cuvaṭi, n. perh. சுவடு1. 1. Ola book; ஏட்டுப் புத்தகம். பாட்டுப்புற மெழுதிய கட்டமை சுவடி (பெருங். மகத. 1, 121). 2. Book, in general; 3. File, bundle, as of records; |
சுவடி 1 - த்தல் | cuvaṭi, 11. v. tr. <>svad. To eat, devour; தின்னுதல். கர்க்கடகத்தைச் சுவடிச் சியங்குஞ் சூனரி. (பதினொ. ஆளு. திருமும்.25). |
சுவடி 2 - த்தல் | cuvaṭi, 11. v. tr. cf. சோடி-. To decorate; அலங்கரித்தல்.கோயிலில் இப்பொழுது வாகனஞ் சுவடிக்கிறார்கள். Nā. |
சுவடிசேர் - த்தல் | cuvaṭi-cēr, v. intr. <>சுவடி +. To make up an ola book for a child; பிள்ளைகள் படிக்க ஏடு சேர்த்தல் (W.) |
சுவடியெழுது - தல் | cuvaṭi-eḻutu, v. intr. <>id. +. To practise writing of the alphabet; அட்சரமெழுதப் பழகுதல். colloq. |
சுவடியைக்கட்டு - தல் | cuvaṭiyai-k-kaṭṭu-. v. intr. <>id. +. Lit., to tie up ola books. [ஏட்டைக்கட்டுதல்] 1. To discontinue one's study; படிப்பை நிறுத்துதல். 2. To stop close, as one's argument, action; |
சுவடு 1 | cuvaṭu n. 1. [M. cuvaṭu.] 1. Track, footstep; அடித்தடம். பூவா ரடிச்சுவடென் றலைமேற் பொறித்தலுமே (திருவாச.11, 7). 2. Noise caused by foot-fall; 3. Impression; 4. Sign, indication; 5. Scar, cicatrice, weal; 6. Strength, power; 7. Practice, experience; 8. Means, method; 9.cf. su-varūtha. Impenetrable armour; 10. Table of grain measures. See சுவட்டிலக்கம். (சூடா.) 11. cf. சோடு.A unit of grain measure, containing 360 paddy grains; 12. Tie; strap, as of harness; band, as of the ridge of a house; 13. Stirrup; |
சுவடு 2 | cuvaṭu, n. prob. svādu, Sweetness, taste; சுவை. அடிமையிற் சுவடறிந்த (ஈடு, 2, 6, 5). |
சுவண்டிலை | cuvaṇṭilai, n. Trincomalee red wood. See சவண்டிலை. . |