Word |
English & Tamil Meaning |
---|---|
சுவாசநிருணயம் | cuvāca-niruṇayam, n <>id. + nirṇaya. (Yōga.) Control of breath, passing it through either nostril at pleasure or restraining it for any length of time; பிராண வாயுவை அடக்கியாளுங் கும்பகசக்தி. |
சுவாசப்பை | cuvāca-p-pai, n. <>id. +. Lung; நுரையீரல். |
சுவாசபந்தம் | cuvāca-pantam, n. <>id. + bandha. 1.(Yōga.) Suspension of breath; பிராணவாயுவைக் கும்பிக்கை. 2. Asphyxia; |
சுவாசம் | cuvācam, n. <>švāsa. Breath, respiration; உயிர்ப்பு. (திவா.) |
சுவாசம்வாங்கல் | cuvācam-vāṅkal, n. <>சுவாசம் +. 1. Hard breathing at the moment of death; மரணமூச்சுவாங்குகை. 2. (Yōga.) Drawing in and restraining the breath; |
சுவாசரோகம் | cuvāca-rōkam, n. <>id. +. See சுவாசகாசம். . |
சுவாசாசயம் | cuvācācayam, n. <>švāsāšaya. See சுவாசப்பை. . |
சுவாசி - த்தல் | cuvāci-, n. <>švāsa. To breathe; மூச்சுவிடுதல். |
சுவாத்தியம் | cuvāttiyam, n. <>svāsthya. (w.) 1. Happiness, contentment, satisfaction; திருப்தி. 2. Health; wholesomeness; ease; |
சுவாதகந்தி | cuvātakanti, n. prob. svādugandhin. Stone-fig. See இத்தி. . |
சுவாதந்திரியம் | cuvātantiriyam, n. <>svātantrya. Freedom, independence; சுயேச்சை. பெத்தான்மாக்களுக்கு சுவாதீனமே சுவாதந்திரிய மில்லை (சி.சி.11, 7, ஞானப்.). |
சுவாதம் | cuvātam, n. See சுவாசம். சுவாத வாதம் மண்டுற (கம்பரா.கும்பக.50). . |
சுவாதி | cuvāti, n. <>svātī. The 15th nakṣatra; சோதிநாள். |
சுவாதிக்கொக்கு | cuvāti-k-kokku, n. <>சுவாதி +. A species of white crane flying in large numbers on the day when the moon is in conjunction with cuvāti in the month of Aippaci; ஐப்பசிச் சோதிநாளிற் கூட்டமாக வெளிக்கிளம்பும் ஒருவகை வெண்கொக்கு. |
சுவாதிட்டானம் | cuvātiṭṭāṉam, n. <>svādhiṣṭhāna. (Yōga.) A cakra or mystic centre in the body, described as a six-petalled lotus, situate above mūlātāram and below the navel, one of āṟātāram, q.v.; ஆறாதாரங்களுள் மூலாதாரத்திற்கும் நாபிக்கும் இடையே ஆறிதழ்த்தாமரை வடிவாயுள்ள தானம். |
சுவாதீன - அடைமானம் | cuvātīṉa-aṭai-mānam, n. <>சுவாதீனம்+. Usufructuary mortgage, mortgage with possession; அனுபவ ஒத்தி. Loc. |
சுவாதீனம் | cuvātīṉam, n. <>svādhina. 1. Independence; சுவாதந்திரியம். 2. Right of possession; 3. That which is under one's own control, opp. to Parātīṉam, |
சுவாது | cuvātu, n. <>svādu. 1. Taste, flavour; சுவை. 2. Sweetness 3. Malabar-nut. See ஆடாதோடை. (தைலவ. தைல. 131.) |
சுவாதுகண்டகம் | cuvātu-kaṇṭakam, n. <>svādukaṇṭaka. Cow-thorn. See நெருஞ்சி. (.அக.) . |
சுவாதுகண்டம் | cuvātu-kaṇṭam, n. See சுவாதுகண்டகம். (மலை.) . |
சுவாதுகந்தி | cuvātu-kanti, n. <>svadugandhi. Sacred basil. See துளசி. (மலை.) . |
சுவாபதேசம் | cuvāpatēcam, n. <>svāpadešā.. Esoteric sense, inner meaning, dist. fr. aṉṉiyāpatēcam; உள்ளுறைபொருள். சுவாபதேச வியாக்கியானம் |
சுவாபாவிகம் | cuvāpāvikam, n. <>svābhāvika. That which is natural, peculiar or inherent; இயல்பாயுள்ளது. இதனால் சுவாபாவிகமன்று ஜகத்ஹேதுகம் என்றது. (சி.சி.1, 3, சிவாக்.) |
சுவாமி | cuvāmi, n. <>svāmin. 1. Master, lord; தலைவன். 2. Supreme Being; 3. Skanda; 4. Spiritual preceptor; 5. Elder; 6. A term of respectful address or reference, used also in pl.; 7. Gold; |
சுவாமிகாரியம் | cuvāmi-kāriyam, n. <>id. +. (w.) 1. Master's business; எசாமானனுடைய காரியம். 2. Religious duties, as fulfilment of vows; |
சுவாமித்துரோகம் | cuvāmi-t-turōkam, n. <>id. +. Treachery, disloyalty; எசமானத்துரோகம். |