Word |
English & Tamil Meaning |
---|---|
சூதகக்கட்டு | cūtaka-k-kaṭṭu, n. <>சூத்தம்+. Amenorrhoea, failure or suspended flow of the menses; சூதகம் உரியகாலத்து வெளிப்படாமையாகிய நோய். |
சூதகக்கிராணி | cūtaka-k-kirāṇi, n. <>id.+. A disease attending childbirth due to wind or flatulency; பிரசவகாலத்தே வயிற்றில் வாயு கட்டிக்கொள்வதனால் உண்டாகும் ஒருவகை நோய். (w.) |
சூதகங்கா - த்தல் | cūtakaṅ-kā-, v, intr. <>id.+. To observe pollution by keeping aloof from society, by abstaining from shaving, etc., after a birth or death in one's family; குடும்பத்தில் பிறப்பிறப்புக்களால் நேரும் ஆசெளாற்தை மேற்கொண்டு பிறரோடு கலவாமலிருத்தல். |
சூதகசத்துரு | cūtaka-catturu, n. <>sūta-ka-šatru. Magnetised iron, used medicinally; மருந்தாக உபயோகிக்கப்படும் காந்தமேற்றிய இரும்பு. (சங்.அக.) |
சூதகசன்னி | cūtaka-caṉṉi, n. <>சூதகம்+. A kind of hysteria, a disease of women during the period of menstruation; மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை. (சீவரட்.) |
சூதகசூலை | cūtaka-cūlai, n. <>id.+. See சூதகவாயு. (M. L.) . |
சூதகண்டகி | cūta-kaṇṭaki, n. An acrid salt; சத்திசாரம். (சங்.அக.) |
சூதகப்பாண்டு | cūtaka-p-pāṇṭu, n. <>சூதகம்+. Green sickness, chlorosis; சூதகப்பெருக்கு முதலியவற்றால் இரத்தங்குறைந்த பெண்களுக்கு உண்டாகும் நோய்வகை. |
சூதகப்பெருக்கு | cūtaka-p-perukku, n. <>id.+. Menorrhagia, excessive menstruation; பெரும்பாடு நோய். |
சூதகபந்தம் | cūtaka-pantam, n. <>id.+. See சூதகக்கட்டு. . |
சூதகம் 1 | cūtakam, n. <>sūtaka. 1. Birth; பிறப்பு. (பிங்.) 2. Ceremonial impurity of a woman from menstruation; 3. Ceremonial uncleanness from birth or death among relations; 4. Ceremonial pollution, due to miscarriage, touching a corpse or cardcass, touching one of low caste or entering a mourning house, etc; |
சூதகம் 2 | cūtakam, n. <>cūtaka. 1. Mango. See மாமரம் சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி. 4, 2, 1). . 2. Small well; |
சூதகம் 3 | cūtakam, n. <>cūcuka. Nipple; முலைக்கண். (பிங்.) |
சூதகம் 4 | cūtakam, n. Oldness, antiquity; பழமை. (w.) |
சூதகமலடு | cūtaka-malatu,` n. <>சூதகம்+. Barrenness due to menstrual disorder, one of six malaṭu, q.v.; அறுவகை மலட்டில் ஒன்று. (சங்.அக.) |
சூதகமுட்டு | cūtaka-muṭṭu, n. <>id.+. See சூதகக்கட்டு. (w.) . |
சூதகவலி | cūtaka-vali, n. <>id.+. See சூதகசன்னி. Colloq. . |
சூதகவாயு | cūtaka-vāyu, n. <>id.+. Painful menstruation, dysmenorrhoea; மாதவிடாய்க்காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை. See சூதகசன்னி. |
சூதகவெடடை | cūtaka-veṭṭai, n. <>id.+. White menstrual discharge, a disease; சூதகத்தில் வெள்ளைகாணும் நோய். |
சூதசங்கிதை | cūta-caṅkita, n. <>Sūta-samhitā. A treatise on šaiva religious practice, translated in Tamil verse from sanskrit by Tēvarāca Pillai of Vallūr; வல்லூர்த் தேவராச பிள்ளையால் தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றுச் சைவ நெறி முதலியவற்றைப்பற்றிக் கூறும் நூல். |
சூதசாலை | cūta-cālai, n. <>sūda+. Kitchen, place for cooking; மடைப்பள்ளி. (யாழ்.அக.) |
சூதசிந்தூரம் | cūta-cintūram, n. <>sūta+. A kind of medicinal powder prepared from mercury; இரகசிந்தூரம். (மலை.) |
சூதடி | cūtaṭi, n. <>சூது+. Deception, trick; வஞ்சகம். Colloq. |
சூதத்தைப்பொன்னாக்கி | cūtattai-p-poṉākki, n. <>sūta+. A prepared arsenic; நரக பாஷாணம். (சங்.அக.) |
சூதநதி | cūta-nati. n. <>cūta+nadī. The river āmrāvati; ஆன்பொருநை. (பிங்.) |
சூதநோக்கல் | cūtanōkkal, n. See சூதவஞ்சனம். (சங்.அக.) . |
சூதபஸ்பம் | cūta-paspam, n. <>sūta+. Oxide of mercury; இரசபஸ்பம். |
சூதபாஷாணம் | cūta-pāṣāṇam, n. <>id.+. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (மலை.) |