Word |
English & Tamil Meaning |
---|---|
சூர் 2 - த்தல் | cūr-, 11. v. <>šūr. tr. 1. To frighten; பயமுறுத்துதல். சூர்த்துக் கடைசிவந்த சுடு நோக்கு. (சிலப்.5, 84).-intr. 2. To be cruel; 3. cf. சூழ்-. To revolve, whirl round; |
சூர் 3 - தல் | cūr, 4 v. tr. <>சுகிர்-. [M. cūruka.] 1. To pick, spearate. See சுகிர்-. (J.) . 2. To bore, pierce, scoop out; |
சூர் 4 - தல் | cūr-, 4 v. tr. prob. சூர். To get by unfair means, as property; அபகரித்தல். (j.) |
சூர் 5 | cūr, n. <>šūrapadma. See சூரபதுமன். சூர்நவை முருகன் (புறநா. 23, 4). . |
சூர் 6 | cūr, n. <>šūra. 1. Valour;. வீரம். வான் பகையின் சூரழிந்திட (கம்பரா. பிரமாத். 76). 2. Fearlessness; |
சூர் 7 | cūr, n. <>šūra. See சூரன், 1. சூர்புகலரியது... தொன்மதில் (கம்பரா. கவந்த. 21). . |
சூர்க்கத்தி | cūr-k-kātti, n. See சூரிக்கத்தி. Colloq. . |
சூர்ணம் | cūrṇam, n. <>cūrṇa. Powder, especially medicinal; பொடி. Colloq. |
சூர்ணி | cūrṇi, n. See சூர்ணிகை. சூர்ணிக்கொத்து. (சி.சி.காப்பு, மறை.) . |
சூர்ணிகை | cūtṇikai, n. <>cūrṇikā. A kind of easy prose, especially setting forth the purport of a foregoing verse; செய்யுட்கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனஞ் சூர்ணிகையை அனுசரித்து வார்த்திகமும் வார்த்திகத்தை அனுசரித்து அதிகரணங்களும் பகுத்திருக்கின்றன. (சி.போ.பா.). |
சூர்த்தநோக்கு | cūrtta-nōkku, n. <>சூர்-+. Cruelty; கொடுமை. (அக.நி.) |
சூர்த்தம் | cūrttam, n. <>id. Trembling; நடுக்கம். (திருமுரு.48, வேறுரை.) |
சூர்துங்கராகம் | cūrtuṅka-rākam, n. (Mus.) An ancient secondary melody-type of kuṟici class; குறிஞ்சியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) |
சூர்ப்பகை | cūr-p-pakai, n. <>சூர்+. skanda, as the foe of Cūraṉ; (சூரபதுமன் பகைவன்) முருகக்கடவுள். சூர்ப்பகை தொட்ட தோரார் (கந்தபு.வள்ளியம்.154). |
சூர்ப்பணகா | cūrppaṇakā, n. See சூர்ப்பணகை. சூர்ப்பணகாவைச் செவியொடு மூச்சுவள் ஆர்க்கவரிந்தான் (திவ்.பெரியாழ்.3, 9, 8). . |
சூர்ப்பணகி | cūrppaṇaki, n. See சூர்ப்பணகை. Colloq. . |
சூர்ப்பணகை | cūrppaṇakai, n. <>šūrpaṇakhā. The younger sister of Rāvaṇa; இராவணன் தங்கை. |
சூர்ப்பம் | cūrppam, n. <>šūrpa. 1. Winnowing fan; முறம். (பிங்.) 2. Measure of capacity, equal to four marakkāl; |
சூர்ப்பு | cūrppu, n. <>சூர்-. 1. Cruel, ferocious deed; கொடுந்தொழில். விறல்விளங்கிய விழுச்சூர்ப்பின் (மதுரைக். 33). 2. Whirling, revolving; 3. Bracelet |
சூர்மகள் | cūr-makaḷ, n. <>சூர்+. 1. Iṭākiṉi or Yōkiṉi, the female attendant of Durgā; துர்க்கைக்கு ஏவற்றொழில் புரியும் இடாகினி அல்லது யோகினி என்ற பெண்பேய். (பிங்.) 2. Deceitful, wily woman; |
சூர்மா | cūrmā, n. <>U. surmā. Collyrium, pigment for the eyes; கண்ணுக்கிடும் அஞ்சனம். Muham. |
சூர்வு | cūrvu, n. <>சூர்-, Piercing, boring; வகிர்கை. (சங்.அக.) |
சூரசூதன் | cūra-cūtaṉ, n. <>sūra+sūta. Sun's charioteer; அருணன். (சங்.அக.) |
சூரசேனம் | cūracēṉam, n. <>šūrasēna. The country around mattra, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களில் வடமதுரையைச் சூழ்ந்துள்ள நாடு. (சங்.அக.) |
சூரசேனன் | cūracēṉaṉ, n. <>id. The grandfather of Kṟṣṇa, as the king of Cūracēṉam; சூரசேன நாட்டரசனும் கிருஷ்ணனுக்குப் பாட்டனுமான ஓர் அரசன். (சங்.அக.) |
சூரடி - த்தல் | cūr-aṭi-, v. intr. <>சுறு+அடி-. To emit offensive smell, as burning hair or wool; மயிர்முதலியன தீப்படுதலாற் கருகல்நாற்றம் வீசுதல். (J.) |
சூரணம் 1 | cūraṇam, n. <>cūrṇa. See சூர்ணம். . |
சூரணம் 2 | cūraṇam, n. <>šūraṇa. A tuberous-rooted herb. See கருணைக்கிழங்கு. (சூடா.) . |