Word |
English & Tamil Meaning |
---|---|
சூரணவர்ணம் | cūraṇa-varṇam, n. perh. curṇa+. A kind of saree; புடைவைவகை. சூரணவர்ணத்தில் (விறலிவிடு. 717). |
சூரணி - த்தல் | cūraṇi-, 11 v. tr. <>cūrṇa. To reduce to powder, pulverise, especially medicine; பொடிசெய்தல். (சங்.அக.) |
சூரணிகை | cūraṇikai, n. See சூர்ணிகை. இதற்குச் சூரணிகை மூன்றேயன்றி நான்கு கூறப்படாமையின் (சி.போ.பாண்டிப்.). . |
சூரணை | cūraṇai, n. <>cūrṇakā. See சூர்ணிகை. சூத்திரமீ ராறினுக்கும் சூரணைமுப் பானொன்பான் (சி. போ. பாண்டிப்.). . |
சூரத்ததிவிடயம் | cūrattativiṭayam, n. <>சூரத்து+அதிவிடயம். A medicinal drug; மருந்துப்பண்டம். |
சூரத்தனம் | cūra-taṉam, n. <>šūra+. See சூரம். Colloq. . |
சூரத்தாவிரை | cūrattāvirai, n. <>சூரத்து+ஆவிரை. African senna, as from surat. See சூரத்துநிலாவிரை. . |
சூரத்து 1 | cūrattu, n. <>šūra-tā. See சூரம் 1. மிகவும் சூரத்துக் காட்டுகிறான். Loc. . |
சூரத்து 2 | cūrattu, n. <>Surāṣṭra. The country of Surat, north of Bombay; பம்பாய் இராசதானியின் வடபாலுள்ள ஒரு தேசம். |
சூரத்துக்கடுக்காய் | cūrattu-k-kaṭukkāy, n. <>சூரத்து+. A kind of myrobalan from surat; சூரத்தினின்றும் கிடைக்கும் கடுக்காய். |
சூரத்துக்காவி | cūrattu-k-kāvi, n. <>id.+. Red ochre from surat; சூரத்தினின்றும் வரும் காவிக்கல். |
சூரத்துக்கெண்டை | cūrattu-k-keṇtai, n. <>id.+. Gold or silver lace from surat; சூரத்திலிருந்து கிடைக்கும் வெள்ளி அல்லது தங்கச் சரிகை வகை. |
சூரத்துத்தாட்டுப்பத்திரி | cūrattu-t-tāṭṭu-p-pattiri, n. <>id.+. A kind of saree; சேலைவகை. Colloq. |
சூரத்துநிலவாகை | cūrattu-nilavākai, n. <>id.+. See சூரத்துநிலாவிரை (W.) . |
சூரத்துநிலாவிரை | cūrattu-nilāvirai, n. <>id.+. African senna, s. sh., Cassia acutifolia; செடிவகை. (L.) |
சூரத்துமுத்து | cūrattu-muttu, n. <>id.+. Artificial pearl from surat; சூரத்திற் செய்த முத்து. |
சூரப்புலி | cūra-p-puli, n. <>šūra+. Dauntless hero, generally used in contempt; சுத்த வீரன். Colloq. |
சூரபதுமன் | cūra-patumaṉ, n. <>Sūra-padma. A king of Asuras who was slain in battle by Skanda; முருகக்கடவுளாற் போரில் இரு கூறாக்கப்பட்ட அசுரவேந்தன். (கந்தபு.) |
சூரபற்பன் | cūra-paṟpaṉ, n. See சூரபதுமன். (சங்.அக.) . |
சூரபன்மன் | cūra-paṉmaṉ, n. See சூரபதுமன். துண்ணென மீளவனாற் சூரபன்மனே (கந்தபு.இந்திரன்க.4). . |
சூரபுத்தி | cūra-putti, n. <>šūra+buddhi. Ingenuity, intellectual ability; அறிவாற்றல் . (J.) |
சூரம் 1 | cūram, n. <>šūra. Valour, bravery, heroism; வீரம். (சூடா.) |
சூரம் 2 | cūram, n. Evergreen cypress, m.tr., Cupressus sempervirens; ஒருவகை மரம். (M. M. 787.) |
சூரம் 3 | cūram, n. <>சூர். Fear, terror; அச்சம் (அக.நி.) |
சூரம் 4 | cūram, n. மஞ்சூரம். Bengal gram; கடலை. (மலை.) |
சூரமானம் | cūra-māṉam, n. <>šūra+. See சூரத்தனம் (யாழ். அக.) . |
சூரரமகளிர் | cūr-ara-makaḷir, n. <>சூர் + அரமகளிர் Celestial maidens; தெய்வப்பெண்கள். (பிங்.) |
சூரல் 1 | cūral, n. <>சூர்-. Whirling, as of wind; சுழித்தடிக்கை. சூரலங் கடுவளியெடுப்ப (அக.நா.1). |
சூரல் 2 | cūral, n. 1. [M. cūral.] Common rattan of S. india, m.cl., Calamus rotaing; பிரம்பு. வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ் சூரலும் (பெருங்.உஞ்சைக்.46, 276). 2. Oblique-leaved jujuble. See சூரை. விரிமல ராவிரை வேரல் சூரல் (குறிஞ்சிப். 71). 3. Small round-errateobtuse-leaved jujuble. See நரியிலந்தை. (L.) |
சூரன் 1 | cūraṉ n. <>šūra. 1. Warrior, man of valour, hero; வீரன். (பிங்.) துறப்பிலரறமெனல் சூர ராவதே (கம்பரா. தைலமாட்டு. 30). 2. See சூரபதுமன். (பிங்.) சூரனென்றுரைபெற்றுள்ள தொல்லையோன் (கந்தபு. இரண். சூரபன்மன். 248). 3. Dog; |
சூரன் 2 | cūraṉ, n. <>sūra. 1. Sun; சூரியன். (பிங்.) காதற் சூரனை யனைய சூரா (பாரத. பதினேழாம். 49). 2. Fire; |
சூரா | cūrā, n. <>Arab. sūrā. Chapter or division of the Quran; கொறான் அத்தியாயம். |
சூராட்டி | cūr-āṭṭi, n. <>சூர் + ஆள்-. A female devil-dancer; தேவராட்டி. மற்றவன்றன் மொழிகேட்ட வரைச்சூராட்டி. (பெரியபு.கண்ணப்ப.51). |