Word |
English & Tamil Meaning |
---|---|
சூரியதிசை | cūriya-ticai, n. <>id.+dišā. East, as the sun's quarter; (சூரியனுக்குரித்தான திக்கு) கிழக்கு. (பிங்.) |
சூரியநமஸ்காரம் | cūriya-namaskāram, n. <>id.+. Sun-worship, adoration of the sun with mantras and prostrations; மந்திரபூர்வமாகச் சூரியபகவானை நோக்கிச் செய்யும் வணக்கம். Colloq. |
சூரியநாராயணன் | cūriya-nārāyaṇaṉ, n. <>id.+. Nārāyaṇa believed to be dwelling in the solar orb; சூரியமண்டல மத்தியில் வசிப்பவராகக் கருதப்படும் திருமால். |
சூரியப்பட்டை | cūriya-p-paṭṭai, n. <>id.+. [T. tcūrupaṭṭe.] Eave-board, barge-board; கூரையின் முகவாய்ப்பட்டை. |
சூரியப்படாம் | cūriya-p-paṭām, n, <>id.+. An emblem of authority, perhaps bearing the figure of the sun; விருதுவகை. செம்படாஞ் சூரியப் படாம் (திருக்காளத்.பு.7, 69). |
சூரியப்படை | cūriya-p-paṭai, n. <>id.+. Gable-wall; உத்தரப்படையைக் கூரையொடு பொருத்துஞ் சுவர். Loc. |
சூரியப்பலகை | cūriya-p-palakai, n. <>id.+. Plank placed on the transom of a door; கதவு நிலையின் தலையிற் பொருத்தும் பார்வைப் பலகை. Loc. |
சூரியப்பிரபை | cūriya-p-pirapai, n. <>id.+prabhā. 1. Sun's rays, sunlight; வெயில். 2. Ornament of gold set with precious stones, worn by women on the right side of th head; 3. Sun-shaped vehicle for an idol; |
சூரியப்பிரவை | cūriya-p-piravai, n. <>id.+. See சூரியப்பிரபை. . |
சூரியப்பிறை | cūriya-p-piṟai,. n. <>id.+. See சூரியப்பிரபை. . |
சூரியபடம் | cūriya-paṭam, n. <>id.+. See சூரியகாந்திப்பட்டு. Loc. . |
சூரியபானம் | cūriya-pāṉam, n. [K. sūrya-pāna.] A round parasol or fan carried before great personages or idols; அரசன் முதலியோர் முன்பு எடுத்துச் செல்லும் வட்டமான விருதுவகை. |
சூரியபிம்பம் | cūriya-pimpam, n. <>id.+. Disc or orb of the sun; சூரியவட்டம். |
சூரியபுடம் 1 | cūriya-puṭam, n. <>id.+puṭa. Warming medicinal oils in sunlight; வெயிலில் வைக்கும் மருந்துப்புடம். |
சூரியபுடம் 2 | cūriya-puṭam, n. <>id.+sphuṭa. (Astron.) Sun's geocentric longitude; வானத்திற் சூரியனது உண்மை நிலை. (w.) |
சூரியபுராணம் | cūriya-purāṇam, n. <>id.+. A chief Purāṇa in praise of the sun. See பிரமகைவர்த்தம். (சங்.அக.) . |
சூரியமண்டலம் | cūriya-maṇṭalam, n. <>id.+. 1. Orb or disc of the sun; சூரிய வட்டம். 2. Region of the sun; 3. Mystic circles in the body regarded as lotus flowers and assigned in worship to jāna, kriyā, icchā šakti of the deity under the respective emblems of the sun, moon and fire; |
சூரியமத்தியம் | cūriya-mattiyam, n. <>id.+. (Astron.) Sun's mean longitude; சூரியனது வாக்கியப்பிழைதீர்க்கப்படாத நிலை. (செந்.Viii, 216.) |
சூரியவட்டம் | cūriya-vaṭṭam, n. <>id.+. Sun-dial; சூரியகடியாரம். (w.) |
சூரியவாதி | cūriya-vāti, n. <>id.+. One who holds that the sun is the supreme Being and that final liberation consists in reaching His world; சூரியனையே பரம்பொருளெனக் கொண்டு அவனது உலகத்தை அடைவதே முத்தியென்று வாதிப்போன். (w.) |
சூரியவீதி | cūriya-vīti, n. <>id.+vīthi. Sun-path which comprehends northern and southern declinations of the sun, divided into three parts of four signs each, viz.., mēṭa-vīti, comprising iṭapam, ciṇkam, mituṉam, kaṭakam: iṭapavīti, comprising taṉucu, makaram, kumpam, viruccikam; இடபம், சிங்கம், மிதுனம், கடகம் என்ற நான்குமடங்கிய மேடவீதி; மீனம், மேடம், கன்னி, துலாம் என்ற இடபவீதி; தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம் என்ற நான்குமடங்கிய மிதுனவீதி என்று மூன்றாகப் பகுக்கப்பட்டுச் சூரியன் வடதென்பாரிசங்களில் வக்கிரித்துச் செல்லும்வழியைத் தன்னகத் |
சூரியன் | cūriyaṉ, n. <>sūrya. Sun; ¢ஞாயிறு. சூரியனார்ர் தொண்டை வாயினிற் பற்களை வாரிநெரித்தவாறு (திருவாச.14, 15). 2. An Upaniṣad, one of 108 3. Chola king; 4. Purple madar. See செவ்வெருக்கு. (மலை.) 5. Mountain containing copper; |