Word |
English & Tamil Meaning |
---|---|
சூரியன்கண்ணாடி | cūriyaṉ-kaṇṇāṭi, n. <>id.+. The opening formed by the intertwining of the fingers of the two hands for gazing at the sun, in devotions; பூசையிற் சூரியனைப் பார்த்தற்கு இருகைவிரல்களையும் ஒருவகையாகச் சேரக்கோத்து உண்டாக்கும் இடைவெளி. Loc. |
சூரியன்போடு - தல் | cūriyaṉ-pōṭu-, v. intr. <>id.+. To intertwine the fingers of the two hands and leave an opening in the middle for gazing at the sun, at noon devotions. பூசையிற் சூரியனைப்பார்த்தற்கு. இடைவெளியுண்டகும்படி இருகைவிரல்களையும் ஒருவகையாகச் சேரக்கோத்தல். Brāh. |
சூரியாவர்த்தம் | cūriyāvarttam, n. <>id.+āvarta. 1. Sun-flower. See சூரியகாந்தி. (விநாயகபு. 3, 57.) . 2. See சூரியாவர்த்தவாதம். |
சூரியாவர்த்தவாதம் | cūriyāvartta-vātam, n. <>id.+id.+. Sun-headache, hemicrania; சூரியனது உதயாத்தமனங்களிற் காணும் ஒருவகைத் தலை நோய். |
சூரினர் | cūriṉar. n. <>சூர். Celestial maidens; தெய்வப்பெண்கள். (கந்தபு.சாலை.47.) |
சூருக்கத்தி | cūru-k-katti, n. <>சூர்க்கத்தி. [K. sūrukatti.] See சூரிக்கத்தி. Loc. . |
சூருமம் | cūrumam, n. prob. சூர்2-. Darbha grass. See தருப்பை. (மலை.) 2. Lemon grass; See கர்ப்பூரப்புல். |
சூரை | cūrai, n. perh. சூர். 1. Obliqueleaved jujube, Zizyphus oenoplia; செடிவகை. கன்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து (மணி.6, 81). 2. Three-lobed nightshade, See தூதுளை. (மலை.) 3. Hedge caper shrub, m. sh., capparis sepiaria; 4. Growing grain not eared; 5. A blight affecting growing corn; 6. Tunny species of fish, Thynnus; 7. Tunny-fish, bluish, attaining 2 ft. in length, Thynnus thunnina; |
சூரைக்காற்று | cūrai-k-kāṟṟu, n. See சூறைக்காற்று. (w.) . |
சூரைமுள்ளூ | cūrai-muḷḷu, n. <>சூரை+. See சூரை, 1 (L.) . |
சூரையிலந்தை | cūrai-y-ilantai, n. <>id.+. See சூரை, 1 (L.) . |
சூல்(லு) 1 - தல் | cūl-, 3 v. cf. chur. intr. To become pregnant; கருப்பங்கொள்ளுதல். சூலாமை சூலிற் படுந்துன்பம் (சிறுபஞ். 75).-tr. 1. To scoop, digout, pierce; 2. To cut off; |
சூல் 2 | cūl, n. <>சூல்-. [T. ṭcūlu, K. sūl, M. cūl.] 1. Conception, pregnancy; கருப்பம். இளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ (புறநா. 130, 2). 2. Egg; 3. Wateriness of clouds; |
சூல் 3 | cūl, n. <>šūa. Trident of šiva. See சூலம், 1. குலிசங் கதைசூல் (சேதுபு. தேலிபுத. 27). |
சூல் 4 | cūl, n. <>U. jhūl. Ornamental cloth cover for elephants, horses, etc.; யானை குதிரை முதலியவற்றிற்கு இடௌம் அலங்காரப்போர்வை . Colloq. |
சூல்கலியாணம் | cūl-kaliyāṇam, n. சூல்+. See சீமந்தம். Loc. . |
சூல்காண்(ணூ) - தல் | cūl-kāṇ-, v. tr. <>id.+. To visit a woman in her first pregnancy with presents of savoury eatables; முதற் கருப்பந் தரித்திருக்கும் பெண்ணை பண்ணிக்காரங்களோடு சென்று பார்த்தல். Loc |
சூல்காப்பு | cūl-kāppu, n. <>id.+. See சூற்காப்பு. Loc. . |
சூல்சாதம் | cūl-cātam, n. <>id.+. Various kinds of dishes prepared in honour of pregnant woman; சுருக்கொண்டவள்பொருட்டுச் சமைக்கும் பலவித உணவு. Colloq. |
சூல்விருந்து | cūl-viruntu, n. <>id.+. Feast given in honour of pregnant woman; சுருக்கொண்டவள் பொருட்டுச் செய்யும் விருந்து. Colloq. |
சூலக்கல் | cūla-kal, n. <>சூலம்+. 1. Boundary-stone bearing trident mark for lands granted to Siva temples; சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல். (Insc.) 2. Survey stones; |
சூலக்கால் | cūla-k-kāl, n. <>id.+. Measure of capacity marked with trident, used in šiva temples. சூலக்குறி பொறிக்கப்பெற்ற சிவாலயத்து அளவைமரக்கால். (S. I. I. v, 3.) |
சூலக்கால்வண்டி | cūla-k-kāl-vaṇṭi, n. <>id.+. A kind of strong rough-made cart, used generally in šiva temples; சிவன் கோயிலில் உபயோகிக்கப்படுங் கட்டைவண்டிவகை. Loc. |
சூலக்காளை | cūla-k-kāḷai, n. <>id.+. Bull branded with trident mark and dedicated to šiva shrine; சிவன்கோயிலுக்காகச் சூலம் பொறித்து விடப்பட்ட காளை. 2. Loafer; |