Word |
English & Tamil Meaning |
---|---|
சூலக்குழி | cūla-k-kuḷi, n. Pit for stones set up in funeral ceremonies. ஈமச்சடன் செய்தற்குரிய பிரேதக் கற்குழி. Brāh. |
சூலக்குறடு | cūla-k-kuṟaṭu, n. <>சூலம்+. Branding instrument. See சூட்டுக்கோல். (J.) . |
சூலகிருது | cūla-kirutu,. n. <>šūla-hrt. Assafoetida; பெருங்காயம். (மூ.அ.) |
சூலத்திசை | cūla-t-ticai, n. <>சூலம்+. The direction believed to be affected by vāracūlai, as inauspicious வாரசூலையுள்ள திக்கு. |
சூலத்தீவர்த்தி | cūla-t-tīvartti, n. <>id.+. Torch with three prongs in the form of trident, used in temples. சூலம்போன்று மூன்றுகவருள்ள தீவட்டி. (w.) |
சூலநட்டம் | cūla-naṭṭam, n. <>id.+ nrtta. A masquerade dance; வரிக்கூத்துவகை. (அபி.சிங்.) |
சூலப்பிராந்தம் | cūla-p-pirāntam, n. <>id.+. A hell; நரகவிசேடம். (சேதுபு.தனுக்கோ.4.) |
சூலபாணி | cūla-pāṇi, n. <>šūla-pāṇi. šiva as holding the trident; (சூலப்படையைக் கையிலுடையவன்) சிவன். (சூடா.) |
சூலம் | cūlam, n. <>šūla. 1. Trident, the three-pronged dart of šiva; முக்கவரான முனையுடைய ஆயுதவகை. ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச.9. 17). 2. Lightning-rod, as three-pronged; 3. Impaling stake; 4. Brand-mark on cattle, usually trident-shaped; 5. The 27th nakṣatra; 6. Supposed position of šiva's trident during week-days, considered inauspicious . See வாரசூலை. 7. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 8. See சூலை, 1. |
சூலம்பிரி - தல் | cūlam-piri-, v. intr. <>சூலம்+. To branch out and grow luxuriantly, as plant when well-watered. நீர் கட்டப்பெறுதலால் பயிர் கிளைவிட்டுத் தோன்றுதல். Loc. |
சூலம்புளி | cūlam-puḷi, n. <>id.+. Common mangosteen; See மங்குஸ்தான் . |
சூலவரி | cūla-vari, n. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. N.A. 255.) |
சூலவிளக்கு | cūla-viḷakku, n. <>சூலம்+. Temple lamp in the form of trident; விளக்குவகை. (J.) |
சூலவேல் | cūla-vēl, n. <>id.+. The trident weapon; சூலாயுதம். உருகெழு சூலவேல் திரித்து (சங்.அக.) |
சூலானோன் | cūl-āṉōṉ, n. Soap; சவுக்காரம். (சங்.அக.) |
சூலி 1 | cūli, n, <>சூல். Pregnant woman; கருப்பவதி. (சூடா) சூவி முதுகிற் சுடச்சுட (திருக்கைவழக்கம், கண்ணி, 12). |
சூலி 2 | cūli, n. <>šūlin. 1. šiva, as holding the trident; [சூலப்படையான்] சிவன். சூலி தன்னருட் டுறையின் முற்றினான் (கம்பரா. நட்புன். 37). 2. Square spurge. Se சதுரக்கள்ளி. (மலை.) |
சூலி 3 | cūli, n. <>šūlinī. Durga, as holding the trident; (சூலப்படை தரித்தவள்) துர்க்கை. (சூடா.) |
சூலிகணம் | cūli-kaṇam,. n. <>šūla+. A wasting disease of childhood, Tabes mesenterica; குழந்தைகள் தேகத்தை உருக்கும் கணைநோய் வகை. (சீவரட்.215.) |
சூலிகை | cūlikai, n. <>šūlikā. Lightning rod, as three-pronged; இடிதாங்கி. மாட நெடுமுகட்டின் குலிகை. (திவ்.பெரியதி.8, 3, 3). |
சூலினி 1 | cūliṉi, n. <>šūlinī. Parvati, as holding the trident; (சூலத்தை யேந்தியவள்) பார்வதி. (அபிரா.50.) |
சூலினி 2 | cūliṉi, n perh. சூலம். Betel leaf; வெற்றிலை. (தைலவ.தைல்.70.) |
சூலினி 3 | cūliṉi, n. Soap; சவுக்காரம். (w.) |
சூலுளை - தல் | cūl-uḷai-, v. intr. <>சூல்+. To travail in labour; பிரசவவேதனைப்படுதல். சங்கு சூலுளைந் தலறிய தடம்பணை (நைடத.நாட்டுப்.5). |
சூலை | cūlai, n. <>šūlā. 1. A class of diseases including arthritic complaints, stiffness or contraction of the muscles or nerves, scrofula, rheumatism, gout, colic, spasmodic pain, complaints from irregular menses; காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் வியாதி கீல்வாதம் முடக்குவாதம் வயிற்றுளைவு முதலிய நோய்கள். அன்னவனை யினிச்சூலை மடுத்தாள்வள் (பெரியபு.திருநாவுக்.48). 2. Supposed week-days, considered inauspicious, See வாரசூலை. |
சூலைக்கட்டி | cūlai-k-kaṭṭi, n. <>சூலை+. Venereal swelling; புணர்ச்சியால் உண்டாம் புண்கட்டி. |
சூலைக்கட்டு | cūlai-k-kaṭṭu, n. <>id.+. See சூலை.1. . |
சூலைக்குடைச்சல் | cūlai-k-kuṭaiccal, n. <>id.+. Writhing pain in certain arthritical diseases சூலைநோயால் உண்டாகும் திருகுவலி. (w.) |
சூலைக்குன்மம் | cūlai-k-kuṉmam, n. <>id.+. Chronic dyspepsia of acute type; குன்ம நோய்வகை. (யாழ்.அக.) |