Word |
English & Tamil Meaning |
---|---|
சூளிகை 2 | cūḷikai, n. <>cūlikā. 1. The root of elephant's ear; யானைச்செவியடி. (பிங்.) 2. Open terrace; 2. An ornament for the head; |
சூளுறவு | cūḷ-uṟavu, n. <>சூள்+உறு-. [K. sūruḷ.] Oath; ஆணையிடுகை. தோழி சூளுறவாகக் கருதினாள் (இறை, 18, பக்.107, உரை). |
சூளுறு - தல் | cūḷ-uṟu-, v. intr. <>id.+. [kūrusu.] 1. To swear, take oath, bind oneself on oath; ஆணையிடுதல். 2. To take a vow; |
சூளை 1 | cūḷai, n. perh. சூழ்-. [M. cūḷa.] 1. Kiln, furnace; செங்கல்முதலியன சுடும் காளவாய். அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3). 2. Funeral pile; |
சூளை 2 | cūḷai, n. <>šūlā. [K. Tu. sūḷe, M. cūḷa.] Prostitute; வேசி. (திவா) பலர்ப்புணர்ந்து முயங்கு சூளையாய் முடிந்தனள் (உபதேச.உருத்திரா.113). |
சூளைக்கல் | cūḷai-k-kal, n. <>சூறை+. Burnt brick; செங்கல். Loc |
சூளைபிரி - த்தல் | cūḷai-piri-, v. intr. <>id.+. To purchase pots from a kiln and distribute them to the poor in memory of a woman who died in pregnancy. கர்ப்பத்துடன் இறந்தவள் பொருட்டுச் சூளையினின்று மட்கலம் வாங்கிப் பிறர்க்கு அளித்தல். Loc. |
சூற்காப்பு | cūṟ-kāppu, n. <>சூல்+. Bracelets put ceremonially on the arms of pregnant women in the 5th or 7th month after conception; கர்ப்பிணிகட்கு. ஐந்தாவது ஏழாவது மாதங்களில் அணியும் வளைகாப்பு. |
சூற்சங்கு | cuṟ-caṅku, n. <>id.+. Oyster containing pearls; முத்துள்ள சங்கு. (J.) |
சூற்சாதம் | cūṟ-cātam, n. <>id.+. Feast given by relatives to a woman in her first pregnancy, முதன்முறை கருக்கொண்ட பெண்ணுக்குச் சுற்றத்தார் இடும் விருந்து. Tj. |
சூற்பெண்டு | cūṟ-peṇṭu, n. <>id.+. Pregnant woman; கருப்பவதி. சூற்பெண்டுகள் சுரமேறு மாபோலே (ஈடு, 2, 10, 2). |
சூறல் | cūṟal, n. <>சூல்-. Scooping, digging out; தோண்டுகை. (பிங்.) |
சூறன் | cūṟaṉ n. cf. முஞ்சூறு. Grey musk-shrew. See மூஞ்சூறு. (பிங்.) . |
சூறாவளி | cūṟāvaḷi, n. prob. சூறு+ஆம்+வளி [T. surakaruvali.] whirlwind; சுழல்காற்று. சூறாவளிபோற் சுழற்றுந் சிறுபின்றுரும்பு (நன்னறி.11). |
சூறாவளிச்சட்டம் | cūṟāvaḷi-c-caṭṭam, n. prob. சூழ்-+ஆவளி+. Frame of nelli wood placed at the bottom in constructing a well; கிணற்றடியில் வைக்கும் நெல்லிமரச்சட்டம். (w.) |
சூறாவாரி | cūṟāvāri, n. <>id.+. See சூறாவளி. . |
சூறு - தல் | cūṟu-, 5 v. tr. To surround, encompass; சூழ்தல். சூறிய விமையோர் (பாரத. காண்டவ. 31). |
சூறு | cūṟu, n. cf. சூத்து Anus; மலத்துவாரம் (J.) |
சூறை 1 | cūṟai, n. சூறு-. 1. Whirlwind; சுழல்காற்று. சூறைமாருதத்து (திருவாச.3, 10). 2. [T. Cūra, K. sūṟc.] Robbery, dacoity, pillage; 3. cf. சூரை. A blighting disease of crops; 4. A kind of dressing the hair in a knot; 5. Loin cloth, short drawers; 6. Tunny fish, bluish, attaining 2 ft. in length, Thyunus thunnina; 7. See சூறைக்குருவி. (பதார்த்த. 894.) |
சூறை 2 | cūṟai, n. prob. சூல்-. Hollow in the nape of the neck; கழுத்தின் பின்குழி. (பிங்.) |
சூறைக்காரன் | cūṟai-k-kāraṉ, n. <>சூறை+. Robber, plunderer; கொள்ளையடிப்பவன். நிருதர் புரச் சூறைக்காரப் பெருமாளே (திருப்பு.170). |
சூறைக்காற்று | cūṟai-k-kāṟṟu, n. <>id.+. Whirlwind; சுழல்காற்று. Loc |
சூறைக்குருவி | cūṟai-k-kuruvi, n. <>id.+. Rose-coloured starling, found in flocks on the cholam fields, Pastor roseus; சோள வயலிற் கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவி வகை. |
சூறைகொள்(ளு) - தல் | cūṟai-koḷ-, v. tr. <>id.+. [T. cūrakoṉu, K. sūṟekoḻ.] To rob, plunder; சூறையாடுதல் சோதியான் சூழ்பனி நீர் சூறைகொளு மாறேபோல் (பட்டினத்.திருப்பா.நெஞ்சொடு.32). |
சூறைகோட்பறை | cūṟai-kōṭ-paṟai, n. <>சூறைகொள்-+. Robber's drum; வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப்பறை. (தொல்.பொ.18, உரை.) |
சூறைச்சின்னம் | cūṟai-c-ciṉṉam, n. <>சூறை+. Robber's horn; கொள்ளையிடுவோர்க்குரிய ஊதுகொம்பு. ஆறெறி பறையுந் சூறைச்சின்னமும். (சிலப்.12, 40). |