Word |
English & Tamil Meaning |
---|---|
அவினாபாவம் | a-viṉā-pāvam <>a-vinā-bhāva. Inseparable companionship; விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2). |
அவினாபூதம் | aviṉāpūtam n. <>a-vinā-bhūta. That which is inseparable, that which cannot exist when separated; நீக்கமின்றி யிருப்பது. |
அவினி | aviṉi n. <>U. afīni. Opium. See அபின். மதுவினுள்ளு மவினியாதி யான பன் மருந்தினும் (பிரபோத.26, 62). |
அவீசி | avīci n. <>a-vīci. Name of a hell; ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127). |
அவுக்கவுக்கெனல் | avukk-avukkeṉal int. Onom. expr. of haste, as in eating, running; விரைவுக்குறிப்பு. |
அவுசனம் | avucaṉam n. <>aušanasa. 1. A secondary Purāṇa. See ஔசனம்; ஔசனம் 2. Name of a work on law, by Ušanas. |
அவுசாக | avucāka adv. <>அவுசு+ஆக. Neatly, compactly; ஒழுங்காய். Vul. |
அவுசு | avucu n. Neatness, trimness; ஒழுங்கு. அவுசுக்காரன். Vul. |
அவுட்டு | avuṭṭu n. Firework, bomb. See ஔட்டு. . |
அவுண் | avuṇ n. cf. hūṇa. Asuras; அசுர சாதி. அவுண்மக சேனை. (திருப்பு.) |
அவுணன் | avuṇaṉ n. cf. id. Asura; அசுரன். (சிலப்.6, 7. |
அவுத்திரி | avuttiri n. <>hautirī. (Saiva.) A way of initiation. See ஔத்திரி. (காஞ்சிப்பு.தழுவக்.53.) |
அவுதசியம் | avutaciyam n. <>ūdhasya. Milk, coming from the udder; பால். (தைலவ.தைல.53.) |
அவுதா | avutā n. <>haudā. Howdah or seat usu. with canopy, on an elephant's back; அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87). |
அவுபலபாஷாணம் | avupala-pāṣāṇam n. <>aupala+. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.) |
அவுபாசனம் | avupācaṉam n. <>aupā-sana. Daily worship of Fire. See ஔபாசனம். (சேதுபு.சேதுபல.133.) |
அவுரி | avuri n. <>அவிர்-. Indigo plant, m.sh., Indigofera tinctoria; நீலிச்செடி. (திவா.) |
அவுல்தார் | avultār n. <>U. hawāl-dār. Non-commissioned officer in the Indian Army corresponding to a sergeant; சிறுபடைக்குத் தலைவன். |
அவுழ்தம் | avuḻtam n. <>auṣadha. Medicine; ஔடதம். மெய்யினோய் மாற்றவுழ்தம் (தாயு.பைங்கிளி.47). |
அவுளியா | avuḷiyā n. [M. āvōḷi.] Pomfrets, marine fish, Stromatens; வவ்வால் மீன். |
அவுறுதம் | avuṟutam n. 1. A bilious disease; பித்தநோய்வகை. (W.) 2. A venereal disease; |
அவுன்ஸ் | avuṉs n. <>E. Ounce; ஆங்கில அளவைவகை. |
அவுஷதம் | avuṣatam n. <>auṣadha. Medicine; ஔடதம். |
அவேத்தியன் | avēttiyaṉ n. <>a-vēdya. One who cannot be known; அறியப்படாதவன். (சி.சி.6, 1, சிவாக்.) |
அவேளை | avēḷai n. <>a-vēlā. Unreasonable hour, unpropitious time; வேளையல்லாத வேளை. |
அவை 1 | avai pron. <>அ. Those, neut. pl.; அப்பொருள்கள். |
அவை 2 - த்தல் | avai- 11 v.tr. [Tu. abay.] 1. To pound, thump in a mortar; நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்...அவைப்பார் (சிலப்.29, வள்ளைப்). 2. To cuff, prod; 3. To cook, boil; 4. To press down, crush; |
அவை 3 | avai n. <>sabhā. 1. Assembly of men; மாந்தர் கூட்டம். (பிங்.) 2. Assembly of learned men; 3. Learned men, poets; 4. Assembly hall; 5. Theatre; |
அவைக்களம் | avai-k-kaḷam n. <>id.+. Place of assembly; சபை கூடுமிடம். அரசவைக் களத்துள் (கந்தபு. பானுகோ. 159). |
அவைதிகம் | avaitikam n. <>a-vaidika. That which is non-vēdic, irreligion; வேதத்திற் கொவ்வாதது. |
அவைப்பரிசாரம் | avai-p-paricāram n. <>sabhā+. Introductory expression conveying respect to the audience; சபை வணக்கம். (சீவக.651. உரை.) |
அவையடக்கம் | avai-y-aṭakkam n. <>id.+. Expression of modesty by a speaker in a public assembly; apologetic preface; சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை. (சீவக.4, உரை). |