Word |
English & Tamil Meaning |
---|---|
செய்கையொப்பம் | ceykai-y-oppam, n. <>id. +. Written grant by Government for cultivation ; பட்டா . (W.) |
செய்சுனை | cey-cuṉai, n. <>செய்- +. Tank or pond, as formed by human labour ; அகழ்ந்து உண்டாக்கப்பட்ட நீர்நிலை. கையமைத் தியற்றிய செய்சுனை தோறும் (பெருங். இலாவாண. 15, 18) . |
செய்தி | ceyti, n. <>id. [M. ceydi.] 1. [T. ceyidamu.] See செய்கை, 1. குடிப்பொருளன்று நுஞ்செய்தி (புறநா. 45, 7). . 2. Occupation; 3. Behaviour, conduct; 4. See செய்ந்நன்றி. (புறநா. 34, 6.) 5. [K. suddi.] News, tidings, information; 6. State, condition; |
செய்திகொல்(லு) - தல் | ceyti-kol-, v. intr. <>செய்தி +. See செய்ந்நன்றிகொல்-. செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென (புறநா. 34, 6) . . |
செய்திறம் | cey-tiṟam, n. <>செய்- +. A secondary melody-type of the marutam class ; மருதயாழ்த்திறத்துள் ஒன்று. (பிங்.) |
செய்தே | ceytē, part. <>id. An auxiliary verbal participle added to verbal participles for denoting continuity of action ; வினைநிகழ்ந்து கொண்டிருத்தலைக் குறித்தற்குச் செயவெனெச்சத்துடன் வரும் ஒரு துணைவினை. குணவிசிஷ்டவஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும். (ஈடு, 1, 1, 6) . |
செய்தொழில் | cey-toḻil, n. <>id. +. Action, deed ; செய்கை. கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும் (நாலடி , 350). |
செய்ந்நன்றி | cey-n-naṉṟi, n. <>id. +. 1. Act of benevolence ; உபகாரம். செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள், 110.) 2. Gratitude ; |
செய்ந்நன்றிக்கேடு | cey-n-naṉṟi-k-kēṭu, n. <>செய்ந்நன்றி +. Ingratitude ; பிறன்செய்த உதவியை மறக்கை. (கலித். 149, உரை). |
செய்ந்நன்றிகொல்(லு) - தல் | cey-n-naṉṟi-kol-, v. intr. <>id. +. To be ungrateful ; நன்றிமறத்தல். செய்ந்நன்றி கொல்லன்மின் (சிலப். 30, 191.) |
செய்நேர்த்தி | cey-nērtti, n. <>செய் +. 1. Proper cultivation of land, as by manuring, weeding in season, etc.; குற்றங் குறைபாடில்லாத நிலச்சாகுபடி. (C. G. 16.) 2. Improvement effected on land before actual culivation; reclamation of waste land; 3. Proper nourishment; |
செய்பவன் | ceypavaṉ, n. <>செய்-. (Gram.) Subject of an active verb ; கருத்தா.செய்பவன். கருவி நிலஞ் செயல் (நன். 320) . |
செய்பாகம் | cey-pākam, n. <>id. +. 1. Medical knowledge, skill in preparing medicines; மருந்துசெய்யுமுறை. செய்பாகங் கைபாகம் அறியவேண்டும். 2. Proper means to effect an object; 3. Methodical arrangement; |
செய்பாவை | cey-pāvai, n. prob. செய்ய +. See செய்யாள். செய்பாவை யன்னார் (சீவக. 2338) . . |
செய்பொருள் | cey-poruḷ, n. <>செய்- +. (Gram.) 1.Object ; செயப்படுபொருள். (நன். 320.) 2. Objects of human pursuit. See புருஷார்த்தம். அவரவர் செய்பொருட் கரணமு நீயே (பரிபா. 4, 73). |
செய்ய | ceyya, adj. <>செம்-மை. 1. Red; சிவந்த. செய்ய தாமரைகளெல்லாம் (கம்பரா. நீர்விளை. 3). 2. Correct, perfect, sound; |
செய்யல் | ceyyal, n. <>செய்-. 1. Behaviour, conduct; ஒழுக்கம். (பிங்). 2. Work, occupation; 3. Protection, watch; 4. Mire, slush; |
செய்யவள் | ceyyavaḷ, n.<>செம்-மை. See செய்யாள். செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167) . . |
செய்யவன் | ceyyavaṉ, n. <>id. 1. Person of red or brown complexion ; சிவந்தவன். செய்யவனே சிவனே (திருவாச. 6, 7). 2. Mars ; 3. Sun ; |
செய்யன் 1 | ceyyaṉ, n. <>id. 1. See செய்யவன், 1. செய்யவன் சிவந்த வாடையன் (திருமுரு. 206). . 2. Just, impartial person ; |
செய்யன் 2 | ceyyaṉ, n. prob. id. A kind of snake ; பாம்புவகை. (சித்தர்.சிந்து.) |
செய்யாக்கோலம் | ceyyā-k-kōlam, n. <>செய்- + ஆ neg. +. Natural beauty ; இயற்கையழகு. செய்யாக்கோலமொடு வந்தீர்க்கு. (சிலப். 16, 11.) |
செய்யாமொழி | ceyyā-moḻi, n. <>id. + id. +. The Vēda, as uncreated ; [செய்யப்படாத மொழி] வேதம். செய்யாமொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழிக்கும் (வள்ளுவமா. 23) . |
செய்யார் | ceyyār, n. <>id. + id. +. Enemies ; பகைவர். செய்யார் தேஎம் (பொருந. 134). |